Skip to main content

விடை 3338

இன்று (14/06/2018) காலை வெளியான வெடி:
 நுணுக்கங்களும் அழகும் தெரியுமாறு  நட !  உள்ளே பயம்  உலுக்குகிறதே !  (5)

இதற்கான விடை:  நயம்பட

Comments

Raji said…
நயம்பட உரைத்தவர்கள் (42):
==========================

1 6:01:21 எஸ்.பார்த்தசாரதி
2 6:01:44 ராமராவ்
3 6:02:50 நாதன் நா தோ
4 6:02:53 முத்துசுப்ரமண்யம்
5 6:03:57 கி மூ சுரேஷ்
6 6:12:01 நங்கநல்லூர் சித்தானந்தம்
7 6:17:16 கேசவன்
8 6:21:57 வி ன் கிருஷ்ணன்
9 6:27:50 திருமூர்த்தி
10 6:29:05 ரவி சுப்ரமணியன்
11 6:33:50 மீனாக்ஷி
12 6:34:37 ஆர்.நாராயணன்.
13 6:35:18 ஶ்ரீவிநா
14 6:38:38 செந்தில் சௌரிராஜன்
15 6:40:52 ரவி சுந்தரம்
16 6:42:40 கு.கனகசபாபதி, மும்பை
17 6:43:17 ராஜா ரங்கராஜன்
18 6:44:27 ராஜி ஹரிஹரன்
19 6:48:55 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
20 7:04:09 மும்பை ஹரிஹரன்
21 7:10:51 சித்தன்
22 7:14:56 எஸ் பி சுரேஷ்
23 7:23:58 இலவசம்
24 7:24:38 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
25 8:06:49 சாந்திநாராயணன்
26 8:15:32 லட்சுமி சங்கர்
27 8:26:25 தி பொ இராமநாதன்
28 9:06:40 வி ன் கிருஷ்ணன்
29 9:07:26 வி ன் கிருஷ்ணன்
30 9:26:50 மாலதி
31 10:08:26 மீ கண்ணன்
32 10:38:09 சுபா ஸ்ரீநிவாசன்
33 10:45:27 ரமணி பாலகிருஷ்ணன்
34 11:15:05 Ambika
35 11:55:57 கல்யாணி தேசிகன்
36 12:21:06 சதீஷ்பாலமுருகன்
37 12:37:42 மீனாக்ஷி கணபதி
38 12:47:31 ருக்மணி கோபாலன்
39 14:55:45 ஸௌதாமினி
40 16:12:40 மு.க.இராகவன்.
41 16:31:31 கோவிந்தராஜன்
42 17:26:51 மு க பாரதி
Raghavan MK said…

A peek into today's riddle ........👇🏽

_நுணுக்கங்களும் அழகும் தெரியுமாறு நட ! உள்ளே பயம் உலுக்குகிறதே ! (5)_

புதிரில் வியப்புக் குறிகளையிட்டு , நம்மை ரொம்பவும் உலுக்கிவிட்டார் புதிராசிரியர்!

எனினும் ஔவை பிராட்டியார், பயத்தை போக்கி, ஆத்திச்சூடியில் நமக்கு விடையை அளித்து அருள் புரிந்தார்!

" *_நயம்பட உரை_ "


தமிழ் மூதாட்டி ஒளவை அருளிய ஆத்திசூடி மந்திரத்தின் 17ஆம் பாடம்

_ஞயம் பட உரை._

ஞயம் என்றது நயத்தையே. *நயம்* என்னும் சொல் அருள், விருப்பம், மகிழ்ச்சி, நன்மை, உபச்சாரம், அன்பு, பக்தி நற்பயன், மிகுதி, பயன், *நுண்மை* , நீதி, நயன், வேதசாத்திரம் என்னும் பொருள்கள யுடையது. இவற்றில் பெரும்பாலான பொருள்கள் தோன்றுமாறு *நயம்பட* உரை என விதிக்கப்பட்டது. நயம்பட உரை என்றது பிறருக்குப் பயன் விளக்கக் கூடியபடி இனிய சொற்களயே பேசு என்பது!

_பயம் உலுக்குகிறதே!_
= உலுக்கிய உலுக்கில், "பயம்" , " *யம்ப* " என மாறிவிட்டது!

_நட ! உள்ளே பயம்_
= மாறிய (பயம்) *யம்ப* *நட* எனும் சொல்லுக்கு உள்ளே செல்கிறது!

= *நயம்பட*

= _நுணுக்கங்களும் அழகும் தெரியுமாறு_

Oxford dictionary யில்
கொடுத்துள்ள பொருள்

https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%9F

*நயம்பட*

தமிழ் *நயம்பட* *யின்* *அர்த்தம்*
வினையடை
உயர் வழக்கு
நயம்பட =
பேசுவதைக் குறித்து வரும்போது ஒன்றின் *நுணுக்கங்கள் வெளிப்படும்படியும் நேர்த்தியாகவும்* .

உ-ம்
"நயம்படவும் சுவைபடவும் அவர் செய்யுளின் பொருளை விளக்கினார்

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்