உதிரிவெடி 3345 (21 ஜூன் 2018)
வாஞ்சிநாதன்
***************
விடைகளைப் பற்றி விளக்கவும் வாட்ஸப் குழு விவாதங்களில் பங்கேற்கவும் முடியவில்லை. இன்று கொஞ்சம் அவகாசம் கிடைத்திருக்கிறது, சொல்லிவிடுகிறேன்:வாஞ்சிநாதன்
***************
நேற்றைய(19/6/18) புதிருக்கு "உதாரணம்" என்ற விடைக்கு "உ" என்றால் கலயாணப்பத்திரிகையில் வரும் "உ" என்பதாகச் சரியாகப் புரிந்து கொண்டு பலரும் எழுதிவிட்டீர்கள்.
மஹாகவி என்பது எந்த ஒரு கவிஞரையும் குறிக்கவில்லை. (வெடி 3344, 20/6/2018) காவியம் என்ற மிகப்பரந்த இலக்கியத்தைப் படைப்பவருக்கே அப்பட்டம் எனது ஒரு வழக்கம். கல்கி அவர்கள் பாரதியார் பெரிய அளவிலான, அதாவது, பல்லாயிரக் கணக்கான பாடல்களைக் கொண்டதாய் எந்த ஒரு படைப்பையும் அளிக்கவில்லை என்பதால் மஹாகவி என்று அவரை அழைப்பது பொருத்தமில்லை என்று வாதிட்டார்.
இப்புதிரில் விடுதல் என்பதை "விடு" தலை = வி என்று ரவி சுந்தரம் சரியாக விளக்கிவிட்டார்.
சரி இன்றைய புதிருக்கு வருவோம்.
ஆடி மாதத்தில் பிரிபவள் முதல் புருஷனிடம் மதுவினை கலக்கியவள் (2, 3)
Comments
After two days of tough nuts offered to crack, Mr.Vanchi is considerate today by offering soft jelly!
அப்பாடா! இன்றைய பொழுது கலக்கிய மது வினால் நன்றாகவே விடிந்தது! 😄