தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
A peek into today's Tamil riddle............👇🏽
_ஓரளவு கையொடிந்தது அரைமணிக்கும் குறைவான நேரத்தில் (2)_
அரைமணிக்கும் குறைவான நேரத்தில்
= *நாழிகை*
(60 நாழிகைகள் கொண்டது ஒரு நாள். இன்று சூரிய உதயத்தில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதிக்கும் வரையில் 60 நாழிகைகள். அதாவது *_24 நிமிடம் என்பது ஒரு நாழிகை._*
அரைமணிக்கும் குறைவான நேரம்! )
கையொடிந்தது
=நாழிகையில் *"கை"* எனும் எழுத்து நீக்கப்பட்டது
= நாழிகை - கை
= *நாழி*
=ஒரளவு (ஒர் அளவு)
(இங்கு ஒரளவு என்பது சுமாரான, சிறிதளவு,ஏறக்குறைய எனும் பொருட்களில் வரவில்லை!
_ஓர் அளவு_ என்று பொருள் கொண்டால் விடை கிடைக்கும்!
நம் முன்னோர்கள் தானியங்களை அளக்க... *நாழி* , குருணி, பதக்கு, முக்குருணி என அளவீட்டுக் கருவிகளை பயன்படுத்தினர்!
*_கால் மரக்கால் கொண்டது... ஒரு நாழி;_* ஒரு மரக்கால் கொண்டது... ஒரு குருணி; இரண்டு மரக்கால் கொண்டது... ஒரு பதக்கு; மூணு மரக்கால் கொண்டது... முக்குருணி!)
முடிந்தவரை *அளந்து* இருக்கிறேன், பொருத்தருளுவீர்! 🙏🏽
*நாழி* யாயிற்று வருகிறேன்! 😌
===================================================================================
1 6:08:55 எஸ்.பார்த்தசாரதி
2 6:09:09 வி ன் கிருஷ்ணன்
3 6:09:46 திருமூர்த்தி
4 6:13:14 வானதி
5 6:18:20 நங்கநல்லூர் சித்தானந்தம்
6 6:19:28 மீனாக்ஷி கணபதி
7 6:22:14 பானுமதி
8 6:23:14 ஶ்ரீவிநா
9 6:24:14 கேசவன்
10 6:25:00 லதா
11 6:27:27 சதீஷபாலமுருகன்
12 6:28:54 பானுபாலு
13 6:30:20 லக்ஷ்மி ஷங்கர்
14 6:35:31 ரவி சுப்ரமணியன்
15 6:37:35 ரவி சுந்தரம்
16 6:37:46 சுந்தர் வேதாந்தம்
17 6:45:28 ராஜா ரங்கராஜன்
18 6:45:34 சுபா ஸ்ரீநிவாசன்
19 6:51:18 ரமணி பாலகிருஷ்ணன்
20 6:57:52 மைத்ரேயி
21 7:01:16 நாதன் நா தோ
22 7:13:01 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
23 7:16:17 சங்கரசுப்பிரமணியன்
24 7:20:05 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
25 7:21:16 முத்துசுப்ரமண்யம்
26 7:26:11 சித்தன்
27 7:28:31 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
28 7:36:25 மு க பாரதி
29 7:41:59 ஆர். பத்மா
30 7:57:16 கி மூ சுரேஷ்
31 8:35:43 மாலதி
32 8:38:46 ராஜி ஹரிஹரன்
33 9:14:18 எஸ் பி சுரேஷ்
34 9:25:48 ரங்கராஜன் யமுனச்சாரி
35 11:17:32 தி பொ இராமநாதன்
36 13:30:46 K.R.Sa thanam
37 14:27:56 கே.ஆர்.சந்தானம்
38 14:53:47 மு.க.இராகவன்.
39 16:50:03 மீனாக்ஷி
40 17:20:35 ஏ.டி.வேதாந்தம்
41 17:20:55 பத்மாசனி