Skip to main content

விடை 3335

இன்று (11/06/2018) காலை வெளியான வெடி

சாகடிக்க கடைசி  சந்தர்ப்பம்  அளிப்பது  அரபிக் கடலோர நகர்  (4)
இதற்கான விடை: கொல்லம்

Comments

Raghavan MK said…



A peek into today's riddle......👇🏽

_சாகடிக்க கடைசி சந்தர்ப்பம் அளிப்பது அரபிக் கடலோர நகர்_ (4)

அந்த *அரபிக் கடலோரம்* ஓர் அழகை கண்டேனே!
அந்த கன்னித் தென்றல் ஆடை வெளுக்க கண்கள் கண்டனே!
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா!
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா !

இந்த இனிய பாடலை கேட்டுக்கொண்டே மும்பை கடற்கரையில் நடந்து வருகையில் ,கடைசி சந்தர்ப்பம் அளிக்க அழைத்தார் ஆசிரியர்!

அதை கேட்டு ,உடனே மும்பையை விட்டு ஓடிவந்தேன் கேரளத்திற்கு (சாகடிக்க அல்ல, பிழைக்க )! .....🏃🏽‍♂🏃🏽‍♂🏃🏽‍♂.....

சாகடிக்க
= *கொல்ல*

கடைசி சந்தர்ப்பம்
= *ம்*

அளிப்பது அரபிக் கடலோர நகர்
= *கொல்ல+ம்*

= *கொல்லம்*

*குய்லான்* ( *Quilon* ) என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இந்த *கொல்லம்* நகரம் அதன் தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் வணிகம் போன்றவற்றுக்கு பெயர் பெற்று விளங்குகிறது.

அரபிக்கடலின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ள பழமையானதும் மற்றும் மிகமுக்கியமானதுமான துறைமுகம் *கொல்லம்* துறைமுகம் ஆகும். இத்துறைமுகத்தில் அனைத்துலக முந்திரி வர்த்தகம் நடைபெறுகிறது. 2010 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி கொச்சித் துறைமுகத்திற்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய துறைமுகம் கொல்லம் துறைமுகமாகும். கொல்லம் துறைமுகம் சுதந்திரத்திற்கு முன்பு போர்த்துகீசியர், டச்சுக்காரர், மற்றும் ஆங்கிலேயர் என அடுத்தடுத்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

தங்காசெரி முனையின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் 1.8 கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டிருக்கும் தங்காசெரி அலைதாங்கி கடற்கரை கொல்லம் துறைமுகத்தைப் பாதுகாக்கிறது. கவர்ச்சியான அமைவிடம் மற்றும் அழகான காயல்கள் கொல்லம் கடற்கரையை கேரளாவின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன!

The Dutch *Quilon* as it was called, used to be a British Enclave. The place is also popular as Thangasseri. The lighthouse built at Quilon by the British in the year 1902 is visible as far as 13 miles in the sea. The lighthouse stands to an amazing height of 144 feet and is the second tallest lighthouse as well as one of the most visited lighthouses of Kerala.

*கொல்லம் கண்டார் இல்லம் திரும்பார்* என்பது அந்நாளைய பழமொழி!
Raji said…
கொல்லைப்புறத்திலிருக்கும் கொல்லத்தை அரபிக்கடலோரம் சென்று கண்டுபிடித்தவர்கள் (58):
=======================================================================================
1 6:00:45 ராமராவ்
2 6:01:41 முத்துசுப்ரமண்யம்
3 6:02:06 லட்சுமி சங்கர்
4 6:02:12 நாதன் நா தோ
5 6:02:36 நங்கநல்லூர் சித்தானந்தம்
6 6:02:56 மைத்ரேயி
7 6:03:22 திருமூர்த்தி
8 6:03:43 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
9 6:04:17 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
10 6:05:15 KB
11 6:06:01 ரமணி பாலகிருஷ்ணன்
12 6:06:49 ரவி சுப்ரமணியன்
13 6:10:31 சுசரித்ரா
14 6:10:31 எஸ்.பார்த்தசாரதி
15 6:10:32 சுபா ஸ்ரீநிவாசன்
16 6:11:41 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
17 6:11:44 மீனாக்ஷி கணபதி
18 6:12:31 ரா. ரவிஷங்கர்...
19 6:15:21 ராதா தேசிகன்
20 6:17:12 மு.க.இராகவன்.
21 6:19:54 வி ன் கிருஷ்ணன்
22 6:22:31 லதா
23 6:25:25 புவனா சிவராமன்
24 6:31:45 கேசவன்
25 6:33:12 ஆர்.நாராயணன்
26 6:33:14 மீ கண்ணன்
27 6:35:35 சாந்திநாராயணன்
28 6:42:56 சித்தன்
29 6:44:10 விஜயா ரவிஷங்கர்
30 6:53:55 கு. கனகசபாபதி, மும்பை
31 6:54:13 மீனாக்ஷி
32 6:58:36 K.R.Santhanam
33 6:59:35 ரவி சுந்தரம்
34 7:05:38 ராஜா ரங்கராஜன்
35 7:38:16 கல்யாணி தேசிகன்
36 7:46:13 சுந்தர் வேதாந்தம்
37 7:46:28 எஸ் பி சுரேஷ்
38 7:56:12 சதீஷ்பாலமுருகன்
39 7:56:47 மீ பாலு
40 7:57:55 மும்பை ஹரிஹரன்
41 8:00:47 ஆர். பத்மா
42 8:12:12 Ranga
43 8:17:59 மாலதி
44 8:43:12 வானதி
45 8:47:14 தி பொ இராமநாதன்
46 9:01:32 மு க பாரதி
47 9:26:43 அம்பிகா
48 9:36:03 அனுராதா
49 10:02:47 ருக்மணி கோபாலன்
50 10:12:27 ஏ.டி.வேதாந்தம்
51 10:12:52 பத்மாசனி
52 10:21:25 சங்கரசுப்பிலமணியன்
53 10:40:48 ராஜி ஹரிஹரன்
54 11:03:26 தேன்மொழி
55 12:47:44 ஸௌதாமினி
56 17:36:52 பா நிரஞ்சன்
57 18:28:55 பாலா
58 20:56:55 ஶ்ரீவிநா

Popular posts from this blog

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்