Skip to main content

உதிரிவெடி 3325

உதிரிவெடி 3325 (01/06/2018)
வாஞ்சிநாதன்
*************************
இரண்டு நாட்கள் முன்பு விடுத்த அழைப்பை ஏற்று முப்பது பேர் புதிர் குறித்த  வாட்ஸப் குழுவில் பங்கேற்க இசைந்து விட்டார்கள். இன்றிரவு விடையை விவாதிக்க இக்குழு உருவாகிவிடும்.

இக்குழு  மீண்டும் உயிர்த்தெழ முக ராகவன் அவர்களின் முயற்சியே காரணம். அவருக்கு நன்றி.   பெரும்பாலானோர் கலைக்கப்படுவதற்கு முன் இக்குழுவில் பங்கேற்றிருந்தவர்கள் என்பதால் அவர்கள் தொலைபேசி எண் என்னிடம் இருக்கிறது. நானே சேர்த்துவிடுவேன். புதியவர்கள்  வாஞ்சிநாதன் அட் ஜிமெயில்  பொட்டுவாணிக்குத் தங்கள் எண்ணை எனக்கு (தங்கள் பெயருடன்!) அனுப்பலாம்.

ஜிமெயிலில் உங்கள் எண்ணைத் தெரிவிக்க தயக்கமென்றால்,  சில இலக்கங்களை ஒன்பது  எட்டு .... என்று எழுத்தால் சொல்லுங்கள்.

நேற்று மாதக் கடைசிப் புதிருக்கு விடை "கடைசி"  என்றதால் இன்றைய விடை முதல் என்று எண்ணி ஏமாறாதீர்கள்!

இன்றைய வெடி:

நொந்து பிட்டு செய்தவள் ஒரு பாதி உண்டாள் (4)

 


Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்