Skip to main content

விடை 3352

இன்று (28 ஜூன் 2018) காலை வெளியான வெடி:

ஆண்டவா! பனி விலகிய கடைசித் திங்கள்  அவலட்சணமான முகத்துக்கு உதாரணம் (4)

இதற்கான விடை: தேவாங்கு

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
..................👇🏽.................

_ஆண்டவா! பனி விலகிய கடைசித் திங்கள் அவலட்சணமான முகத்துக்கு உதாரணம் (4)_


ஓர் நாள் , மாலை நேரம்,
கடற்கரையோரம்!

தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை எனும் பாடல் எங்கோ ஒலிக்கிறது!

அங்கு , கல்லூரி மாணவன் ஒருவனின் புலம்பலை கேட்க நேர்ந்தது! 😰
👇🏽
" ஆண்டவா ! இதென்ன சோதனை! அந்த பைங்கொடி என்னைப் பார்த்து, '
_ஏய்! _தேவாங்கு மூஞ்சி,_ _வழியை விட்டு விலகிப்போ! '_ ,
என சொல்லிவிட்டு போகிறாளே! "
என்றெல்லாம் புலம்பிக்கொண்டிருந்தான்.😰

பரிதாபப்பட்டு அவனை நெருங்கி,
" _தம்பி! கவலையை விடு! அவள் தப்பாய் ஒன்றும் கூறவில்லையே!_ _தேவாங்கு_ _மாதிரி உன் முகம் *மிக மிக அழகாய்* இருக்கிறது என்றுதானே கூறினாள், இதற்கு போய்....''_

என தேற்றினேன்!!!

அப்படியா என்று அவனும் நன்றி பகன்று நகர்ந்தான். ( பயல் தேவாங்கு வை இதுவரை பார்த்ததேயில்லை போலும்! நான் பிழைத்தேன்! 😄)

சரி , இதென்ன மார்கழி பனிமூட்டம் பங்குனி வரை தொடர்ந்து வந்து தொந்தரவு தருகிறது!

பனியை விலக்குவோம் ,
பணியைத் தொடர்வோம் ,
வாருங்கள்!


_கடைசித் திங்கள்_
= *பங்குனி*

_பனி விலகிய கடைசித் திங்கள்_
=( *ப)ங்கு(னி)*

_ஆண்டவா_
= *தேவா*

_அவலட்சணமான முகத்துக்கு உதாரணம்_
= *தேவா + ங்கு*
= *தேவாங்கு*


*தேவாங்கு* என்பது ஒரு விலங்கினம்... பெரிய கண்களும், சிறிய உடலும் கொண்ட, மிக மெதுவாக நகரும், சிறிய விலங்கு...
_தேவாங்கு_ இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி விலங்காகும். பூச்சிகளையும், பறவை முட்டைகளையும், சிறு பல்லிகளையும் உண்ணும். சில சமயங்களில் இலை தழைகளையும் உண்ணும்.

இதற்கு தோஷங்களை நீக்கும் சக்தி உண்டென்று நம்பப்படுகிறது...ஆகவே வரிசையாக முடிகள் இடப்பட்டக் கறுப்பு நிறமுடைய கயிற்றை அதன்முன் நீட்ட, அவ்விலங்கு எற்கனவே பழக்கப்படுத்தப்பட்டிருப்பதால் தன் இரு முன் கால்களாலும் (குரங்கினம் என்பதால்,
கைகளைப்போலவே பயன்படுத்தும்) கயிற்றைத் தொடும்... இந்தக் கயிற்றை குழந்தையின் கழுத்தில் கட்டுவார்கள்... _தேவாங்கு_ தொட்டுக்கொடுத்ததால் _தேவாங்கு முடிக்கயிறு_, எனப்படுகிறது...

_தோஷம் நீங்க தேவாங்குவை நாடுவோம்!_ 🐒
Partha said…
ஆனந்த விகடனில் சு. வெங்கடேசன் எழுதும் நெடுந்தொடர் 'வீரயுக நாயகன் வேள்பாரி' படிப்பவர்களுக்கு தேவாங்கு அவலட்சணமானது அல்ல. “இயற்கையின் அதிசயம்" , “ ஒரு வானியல் விலங்கு” என்பது தெரியும். எப்போதெல்லாம் தரையில் உட்காருமோ, அப்போதெல்லாம் வடக்கு திசை நோக்கியே உட்காரும். இந்த விலங்கு பறம்பில் மட்டுமே இருந்ததால் இதை தற்செயலாக அறிந்த பாண்டியர் சேர, சோழருடன் சேர்ந்து பாரியுடன் போர் தொடுத்தனர். இந்த தொடரை மிக அற்புதமாக எழுதுகிறார் திரு வெங்கடேசன்.
Vanchinathan said…
விடையளித்தோர் பட்டியலில் பல பெயர்கள் விடுபட்டிருந்தன. திருத்தியது இங்கே:

1) 6:02:10 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:21 சதீஷ்பாலமுருகன்
3) 6:02:59 Ravi Subramanian
4) 6:03:08 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
5) 6:03:43 திருமூர்த்தி
6) 6:06:59 ரவி சுப்ரமணியன்
7) 6:08:30 முத்துசுப்ரமண்யம்
8) 6:09:09 KB
9) 6:10:00 சங்கரசுப்பிரமணியன்
10) 6:11:27 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 6:11:44 லதா
12) 6:13:30 ராஜா ரங்கராஜன்
13) 6:14:23 கேசவன்
14) 6:16:11 சந்திரசேகரன்
15) 6:17:59 மீனாக்ஷி கணபதி
16) 6:20:00 நாதன் நா தோ
17) 6:27:25 ஆர். பத்மா
18) 6:30:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
19) 6:45:52 ஆர்.நாராயணன்.
20) 6:50:15 அம்பிகா
21) 6:50:53 ஸந்தியா
22) 6:51:51 எஸ் பி சுரேஷ்
23) 7:00:52 கு.கனகசபாபதி, மும்பை
24) 7:15:13 ராஜி ஹரிஹரன்
25) 7:26:48 மீ பாலு
26) 7:31:09 மு க பாரதி
27) 7:41:18 ருக்மணி கோபாலன்
28) 7:53:46 ரவி சுந்தரம்
29) 7:58:49 வி ன் கிருஷ்ணன்
30) 8:02:45 ராமராவ்
31) 8:10:27 ரமணி பாலகிருஷ்ணன்
32) 8:42:31 அனுராதா
33) 8:51:40 மாலதி
34) 8:52:35 வேதாந்தம்
35) 8:52:58 பத்மாசனி
36) 9:02:58 கோவிந்தராஐன்
37) 9:28:24 கி மூ சுரேஷ்
38) 10:31:40 மு.க.இராகவன்.
39) 10:39:38 மீனாக்ஷி
40) 11:53:38 கே.ஆர்.சந்தானம்
41) 12:10:56 தேன்மொழி
42) 12:38:43 சாந்திநாராயணன்
43) 13:03:40 ஶ்ரீவிநா
44) 13:04:29 விசீ சந்திரமௌலி
45) 13:24:33 மாதவ்
46) 14:13:30 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
47) 14:18:53 கல்யாணி தேசிகன்
48) 14:25:45 சுபா ஸ்ரீநிவாசன்
49) 16:44:09 ஸௌதாமினி
50) 17:05:49 மீ கண்ணன்
51) 19:32:51 ரா. ரவிஷங்கர்...

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்