Skip to main content

உதிரிவெடி 3345

உதிரிவெடி 3345 (21 ஜூன் 2018)
வாஞ்சிநாதன்
***************
விடைகளைப் பற்றி விளக்கவும் வாட்ஸப் குழு விவாதங்களில் பங்கேற்கவும் முடியவில்லை. இன்று கொஞ்சம் அவகாசம் கிடைத்திருக்கிறது, சொல்லிவிடுகிறேன்:
நேற்றைய(19/6/18) புதிருக்கு     "உதாரணம்" என்ற விடைக்கு "உ" என்றால் கலயாணப்பத்திரிகையில் வரும் "உ" என்பதாகச் சரியாகப் புரிந்து கொண்டு பலரும் எழுதிவிட்டீர்கள்.

மஹாகவி என்பது எந்த ஒரு கவிஞரையும்  குறிக்கவில்லை.  (வெடி 3344, 20/6/2018) காவியம் என்ற மிகப்பரந்த இலக்கியத்தைப் படைப்பவருக்கே அப்பட்டம் எனது ஒரு வழக்கம். கல்கி அவர்கள் பாரதியார் பெரிய அளவிலான, அதாவது, பல்லாயிரக் கணக்கான பாடல்களைக் கொண்டதாய் எந்த ஒரு படைப்பையும் அளிக்கவில்லை என்பதால் மஹாகவி என்று அவரை அழைப்பது பொருத்தமில்லை என்று வாதிட்டார்.

இப்புதிரில் விடுதல் என்பதை "விடு" தலை = வி என்று ரவி சுந்தரம் சரியாக விளக்கிவிட்டார்.


சரி இன்றைய புதிருக்கு வருவோம்.


  ஆடி மாதத்தில் பிரிபவள் முதல் புருஷனிடம்    மதுவினை கலக்கியவள் (2, 3)

Comments

Chittanandam said…
அப்பாடா. கண்டுபிடித்துவிட்டேன். இனி நாள் பூரா நிம்மதியாக இருக்கலாம். நன்றி. வணக்கம்!
Raghavan MK said…


After two days of tough nuts offered to crack, Mr.Vanchi is considerate today by offering soft jelly!
அப்பாடா! இன்றைய பொழுது கலக்கிய மது வினால் நன்றாகவே விடிந்தது! 😄

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்