Skip to main content

விடை 3333


இன்று (09/06/2018)  காலை வெளியான வெடி:
மாவோசேதுங்கின்  மூன்றாம் மனைவி பாழ் (4)
இதற்கான விடை: சேதாரம். 
நேற்றிரவு தூங்கப் போவதற்கு முன் காலையில் சேதாரம் என்ற சொல்லுக்குத்தான் புதிரமைக்க வேண்டும், அதற்கு
சேலைத் தலைப்பு கட்டியவள் வீண் (4)  என்று திட்டமிட்டிருந்தேன்.
இன்றைய வெடி எண் 3333 என்றெழுதிய பின்னர் திட்டமெல்லாம் பாழாய்ப்போனது.  சேலை கட்டிய இந்தியப் பெண் போய் சீனப் புரட்சித் தலைவரின் பெண்டாட்டி (அதிலும் மூன்றாமவள்) வந்து மாட்டினாள். ஆனாலும் அதைச் சலிக்காமல் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் திரளாக வந்து விடையைக் கண்டுபிடித்து விட்டீர்கள். பாராட்டுகள்.

எச்சரிக்கை: அடுத்து ஒரு மாதத்திற்கு அமெரிக்க தேசத்திற்கு கோடை விடுமுறைப் பயணம் செய்யவிருக்கிறேன்.  புதிர் வருவதில் பாதிப்பு வராமலிருக்கத்  திட்டங்கள் வகுத்துள்ளேன்.  இருந்தாலும்,  சிறிய தடங்கல்கள், தாமதங்கள், நேரிட்டால் பொறுத்துக் கொள்ளுங்கள்.    ஏன் நல்லது கூட விளையலாம்.  மாவோசேதுங்  போய்,  டோனால்ட் டிரம்ப்போ சேகுவாரோவோ வெடியில் வந்து சிக்கலாம். பார்ப்போம். 





Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (51):

1) 6:00:56 திருமூர்த்தி
2) 6:01:13 எஸ்.பார்த்தசாரதி
3) 6:02:43 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
4) 6:02:46 ரவி சுப்ரமணியன்
5) 6:03:14 இலவசம்
6) 6:03:46 KB
7) 6:04:41 நாதன் நா தோ
8) 6:06:30 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
9) 6:10:20 ராமராவ்
10) 6:11:50 ரா. ரவிஷங்கர்...
11) 6:12:38 ராஜி ஹரிஹரன்
12) 6:12:42 மீனாக்ஷி கணபதி
13) 6:14:15 கேசவன்
14) 6:15:14 அம்பிகா
15) 6:15:34 ராதா தேசிகன்
16) 6:16:48 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 6:19:40 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
18) 6:21:13 சித்தன்
19) 6:23:40 லதா
20) 6:26:06 வானதி
21) 6:29:05 ராஜா ரங்கராஜன்
22) 6:37:45 லட்சுமி மீனாட்சி , மும்பை
23) 6:39:22 விஜயா ரவிஷங்கர்
24) 6:39:39 கு.கனகசபாபதி, மும்பை
25) 6:49:36 கோவிந்தராஜன்
26) 6:50:43 இரா.செகு
27) 6:54:18 ரவி சுந்தரம்
28) 6:59:44 சுந்தர் வேதாந்தம்
29) 7:04:19 ஆர்.நாராயணன்.
30) 7:14:07 சுபா ஸ்ரீநிவாசன்
31) 7:18:43 எஸ் பி சுரேஷ்
32) 7:21:22 மீ கண்ணன்
33) 7:51:27 மீனாக்ஷி
34) 8:08:41 பானுபாலு
35) 8:39:09 மாதவ்
36) 8:49:21 கி மூ சுரேஷ்
37) 9:02:14 கல்யாணி தேசிகன்
38) 11:52:22 சதீஷ்பாலமுருகன்
39) 12:12:06 மு.க.இராகவன்.
40) 12:40:27 மீ பாலு
41) 13:21:11 ரமணி பாலகிருஷ்ணன்
42) 14:37:20 மு க பாரதி
43) 14:43:56 தேன்மொழி
44) 15:01:25 முத்துசுப்ரமண்யம்
45) 15:49:46 ஏ.டி.வேதாந்தம்
46) 15:50:14 பத்மாசனி
47) 18:23:55 புவனா சிவராமன்
48) 18:48:24 பாலா
49) 19:33:08 வி ன் கிருஷ்ணன்
50) 19:38:42 சங்கரசுப்பிரமணியன்
51) 19:45:46 ருக்மணி கோபாலன்

**********************
Raghavan MK said…

A peek into today's Tamil riddle .....👇🏽

" _மாவோசேதுங்கின் மூன்றாம் மனைவி பாழ்_ "
(4)

புதிரைக் கடைசி நிமிடத்தில் மாற்றிவிட்டேன் என்ற ஆசிரியர், நம்முடைய திசையையயும் மாற்றி சீனாவுக்கு ஓட விட்டார்!

அங்கு விசாரித்ததில்......
கண்டறிந்தவை............👇🏽

**_மாவோசேதுங்_**
Mao Zedong, (டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். 
சீனாவில்நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். 
அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசுநிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்

முதல் மனைவி
லூவோ இக்சி (1907–1910)

இரண்டாம் மனைவி
யாங் காயூயி (1920–1930)

மூன்றாம் மனைவி
கே சீசென் (1930–1937)

நான்காம் மனைவி
சியாங் கிங் (1939–1976)

இவ்வளவு விவரங்களையும் மண்டையில் போட்டு குழப்பியதால் ,மூளை *_பாழ்_* அடைந்ததுதான் மிச்சம்.!😢

விடை காணாமல் சீனாவிலிருந்து திரும்பினேன்!

மாவோசேதுங்கின் மூன்றாம் *தாரம்* பாழானால் என்ன என்றும் ஒதுங்கவும் முடியவில்லை!

*சே* !என்ன சொன்னேன்! மூன்றாம் *தாரம்* என்றா?

Eureka!
கண்டேன் விடையை!

"மூன்றாம் மனைவி என்பதை , மூன்றாம் மாவோசேதுங்கின் " என்று மாற்றியதும், கிடைத்தது
= (மாவோ) *சே* (துங்)
= *சே*
பின்,
மனைவி
= *தாரம்*

பாழ்
= சே+தாரம்
= *சேதாரம்*

ஒரு வழியாய் சீனாவிலிருந்து *சேதாரம்* இல்லாமல் வந்து சேர்ந்தேன்!
மகிழ்ச்சி!

And thanks to Mr.Vanchi for his conducted tour to China!

THE GREAT LEAP FORWARD! 👏🏼👏🏼👏🏼

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்