Skip to main content

விடை 3331

இன்று  (07/06/2018) காலை வெளியான வெடி:
மரியாதையுடன் முன்னேயிருப்பவர் அகல அடி பாதி (4)

இதற்கான விடை: நீங்கள் = நீங்க + (தா) ள்

Comments

Raghavan MK said…

A peek into today's riddle .... 👇🏽

" _மரியாதையுடன் முன்னேயிருப்பவர் அகல அடி பாதி_ " (4)


சிறியதாயினும் சிக்கலான புதிர்!

முன்னேயிருப்பவர் அகல என்றவுடன் , முதலில் சிவபெருமானை மறைத்த நந்தி பகவான் தான் நினைவுக்கு வந்தார்!

மரியாதையுடன் அடி என்றதும், நந்தி விலக " _சிவனடி_ " முதலில் தோன்றியது.

பின்னர் யோசித்ததில் திசைதிரும்பி பயணித்ததை யறிந்தேன்.🙃🙃

புதிரை இரண்டாகப் பிரித்து பார்த்ததில் சரியான திசை புலப்பட்டது! 🙂🙂

1. _மரியாதையுடன் முன்னேயிருப்பவர்_

2. _அகல அடி பாதி_

பிரித்த பின்பு , முதல் பகுதி விடையாகவும், இரண்டாம் பகுதி விடை அடையும் வழியாகவும் அமைந்துள்ள புதிரை அவிழ்க்க முடிந்தது!

முதலில் ...

அகல
= *நீங்க*

அடி
= (பாதம்)= *தாள்*

பாதி அடி
= *ள்*

பின்னர்....

மரியாதையுடன் முன்னேயிருப்பவர்
= *நீங்க* + *ள்*
= *நீங்கள்*

நம் முன்னிலையில் இருப்பவரை மரியாதையுடன் *நீங்கள்* என குறிப்பிடுவோம்!

இன்றைய புதிர் அழகாக தொடுக்கப்பட்ட ஓர் *முத்தாரம்
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (22):

1) 6:07:38 ரங்கராஜன் யமுனாச்சாரி
2) 6:12:19 கி மூ சுரேஷ்
3) 6:25:03 ஶ்ரீவிநா
4) 6:28:50 மீனாக்ஷி கணபதி
5) 6:57:40 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 7:07:29 சுந்தர் வேதாந்தம்
7) 7:08:35 ரவி சுந்தரம்
8) 7:15:21 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
9) 7:36:59 லதா
10) 7:44:00 சதீஷ்பாலமுருகன்
11) 7:50:51 எஸ்.ஆர்.பாரசுப்ரமணியன்
12) 9:13:05 ருக்மணி கோபாலன்
13) 10:11:58 ராஜி ஹரிஹரன்
14) 13:26:04 சுபா ஸ்ரீநிவாசன்
15) 13:45:18 மு.க.இராகவன்.
16) 16:49:37 மு க பாரதி
17) 17:10:11 KB
18) 17:22:25 மீ பாலு
19) 18:30:09 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
20) 18:55:00 முத்துசுப்ரமண்யம்
21) 19:05:03 சங்கரசுப்பிரமணியன்
22) 20:57:50 அம்பிகா
**********************

நானும் சரியான விடை அளித்ததாக நினைக்கிறேன். விடை பதிவாகவில்லையா அல்லது தவறாக பதிவானதா?
Vanchinathan said…
ரவி சுப்ரமணியன் முதன் முதலாக விடையளித்தவர். நேரம் 6.01க்கு முன்பே! பாராட்டுகள்.