Skip to main content

Posts

Showing posts from February, 2020

விடை 3992

இன்று காலை வெளியான வெடி: பணிப்பெண்  இடை கையால்  தழுவிய உறவினன் (3) அதற்கான விடை:  தாயாதி = தாதி  + யா தாதி  =  பணிப்பெண்  யா = இடை கையால் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 213

Today's clue: Strange six-inch rule (7) Its solution: FOREIGN = FO + REIGN FO = half  a foot REIGN = rule Here is the link to all the  solutions received. Note: As I am travelling without laptop tomorrow's Krypton will not appear.

உதிரிவெடி 3992

உதிரிவெடி 3992 (பிப்ரவரி 29, 2020) வாஞ்சிநாதன் ********************* அடுத்த மூன்று, நான்கு நாட்களுக்கு நான்  வெளியூருக்கு என் கணினி இல்லாமல் செல்கிறேன். புதிர் வருவதற்கு ஏற்பாடு செய்துவிட்டேன். ஏதாவது தவறு செய்திருந்தால் திருத்துவதற்கு தாமதமாகலாம். அல்லது முடியாமற் போகலாம். பணிப்பெண் இடை கையால் தழுவிய உறவினன் (3) Loading…

விடை 3991

இன்று காலை வெளியான வெடி: அன்போடு கானமிசைக்க உள்ளே போஷாக்கு கடைசியாகக் கேட்கிறான்   (6) அதற்கான விடை:  பாசத்துடன் = பாட + சத்து + ன் பாட = கானமிசைக்க‌ சத்து = போஷாக்கு ன் = கடைசியாகக் கேட்கிறான் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம் .

உதிரிவெடி 3991

உதிரிவெடி 3991 (பிப்ரவரி 28, 2020) வாஞ்சிநாதன் *********************    அன்போடு கானமிசைக்க உள்ளே போஷாக்கு கடைசியாகக் கேட்கிறான்   (6) Loading…

விடை 3990

இன்று காலை வெளியான வெடி: கழகத் தலைவர் சிறையை அதிரவைத்தது வெளிப்படை (4) அதற்கான விடை: கண்கூடு = க + ண்கூடு க = கழகத் தலைவர் ண்கூடு = கூண்டு, சிறை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3990

உதிரிவெடி 3990 (பிப்ரவரி 27, 2020) வாஞ்சிநாதன் *********************   கழகத் தலைவர் சிறையை அதிரவைத்தது வெளிப்படை (4) Loading…

விடை 3989

இன்று காலை வெளியான வெடி: வெட்கப்பட்டு உள்ளுக்குள் குறுகி வளைந்த பாடகர் பேச்சில் இயல்பற்ற தன்மை (5) அதற்கான விடை: நாடகபாணி வெட்கப்பட்டு=நாணி, குறுகி பாடகர்= பாடக,  வளைந்தபின் "டகபா", நா(டகபா)ணி = பேச்சில் இயல்பற்ற தன்மை. (அவன்  "உனக்காக  நான் இன்னொரு தாஜ் மஹால் கட்டுகிறேன் பார்" என்று தன் மனைவியிடம் நாடகபாணியில் கூறினான்.) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம் .

உதிரிவெடி 3989

உதிரிவெடி 3989 (பிப்ரவரி 26, 2020) வாஞ்சிநாதன் *********************** வெட்கப்பட்டு உள்ளுக்குள் குறுகி வளைந்த பாடகர் பேச்சில் இயல்பற்ற தன்மை (5)   Loading…

விடை 3988

இன்று காலை வெளியான வெடி: தொடக்கம், முடிவு இரண்டும்  இல்லாமல் கழுத்தைச் சுற்றியிருக்கும் (3) அதற்கான விடை: ஆரம் ஆரம்பம் = தொடக்கம், அதன் கடைசி எழுத்துகள் இரண்டை நீக்க ஆரம் கிடைக்கும்.  ‍ இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். விடைகளின் பட்டியல் இங்கே.

உதிரிவெடி 3988

உதிரிவெடி 3988 (பிப்ரவரி 25, 2020) வாஞ்சிநாதன் ********************* தொடக்கம், முடிவு இரண்டும்  இல்லாமல் கழுத்தைச் சுற்றியிருக்கும் (3) Loading…

விடை 3987

இன்று காலை வெளியான வெடி: வெள்ளிக்கு அடுத்து வருகின்றது பார் (2) அதற்கான விடை: பூமி/புவி, சூரியனைச் சுற்றி வரும் கோள்களில் வெள்ளி (சுக்கிரன்)க்கு அடுத்தது பார் என்று செல்லமாக அழைக்கப்படும் பூமி அல்லது புவி. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3987

உதிரிவெடி 3987 (பிப்ரவரி 24, 2020) வாஞ்சிநாதன் ********************* வெள்ளிக்கு அடுத்து வருகின்றது பார் (2) Loading...

Solution to Krypton 212

Today's clue:  Regulating various extremely  radicalized netizens leaders  going around (9) Its solution:  GOVERNING = GOING + V(arious) + E(xtremely) + R (adicalized) + N(etizens) Click here to see  the page having all the submitted solutions.

விடை 3986

இன்று காலை வெளியான வெடி: வட்டத்தைச் சுற்றியிருக்கும் முதல் சோழனை வட்டமிட முயன்று பார் (4) அதற்கான விடை: பரிசோதி = முயன்று பார் பரிசோதி = பரிதி + சோ பரிதி =வட்டத்தின் சுற்றுக்கோடு சோ = முதல்  சோழன் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3986

உதிரிவெடி 3986 (பிப்ரவரி 23, 2020) வாஞ்சிநாதன் *********************   வட்டத்தைச் சுற்றியிருக்கும் முதல் சோழனை வட்டமிட முயன்று பார் (4)  Loading…

விடை 3985

இன்று காலை வெளியான வெடி: முகத்திலிருப்பதுக்கு முன் அங்கே உள்ளிருப்பது போக்குவரத்து சாதனம் (3) அதற்கான விடை: நாவாய் = நா + வாய்,  வாய் = முகத்திலிருப்பது; நா = வாயிலிருப்பது. நாவாய் = படகு ஏற்கனவே இப்பாடலை  இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். வெண்ணிக் குயத்தியார் எழுதியது, "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழிலாண்ட  உரவோன் மருக ...", புறநானூற்றில் உள்ள பாடல். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3985

உதிரிவெடி 3985 (பிப்ரவரி 22, 2020) வாஞ்சிநாதன் ********************* முகத்திலிருப்பதுக்கு முன் அங்கே உள்ளிருப்பது போக்குவரத்து சாதனம் (3) Loading…

விடை 3984

இன்று காலை வெளியான வெடி: வணக்கம் செய்து விட்டு கடைசியாக அழை (4) அதற்கான விடை: கூப்பிடு = கூப்பி + டு இன்றைய வெடிக்கு 50க்கும் மேற்பட்டோர் சரியான விளக்கத்துடன் விடைகளை அனுப்பியுள்ளனர்.

விடை 3983

இன்று காலை வெளியான வெடி: ஒளி குறையக் குறைய வைக்கோலிடம் குற்றம் (5) அதற்கான விடை: களங்கம் = களம் + ங்க களம் = வைக்கோலிடம், அதாவது வைக்கோலை வைக்கும் இடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை!) ங்க = மங்க ‍- ம  (மங்க = ஒளி குறைய) "ஒளி குறையக் குறைய வைக்கோலிடம் கலங்க‌ குற்றம்" என்று எழுதினேன். பிறகு "களங்கம்" என்ற விடை இருக்கும்போது "கலங்க" என்பது வேண்டாமென்று நீக்கினேன். எதைப் போட்டால் பொருத்தமாக இருக்குமென்று யோசித்துக் கொண்டிருந்தபோது மணி 6.05 ஆகிவிட்டதல், சுருக்கமாக இருந்துவிடட்டும் என்று விட்டுவிட்டேன். இப்போதுதான் "ஒளி குறையக் குறைய வைக்கோலிடம் ஒளிய‌ குற்றம்" என்று எழுதியிருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன். இந்த ஞான ஒளி தோன்றுவதற்குள் சூரிய ஒளி ஒளிந்து ராத்திரி விடை போடும் தருணமாகிவிட்டது! இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3983

உதிரிவெடி 3983 (பிப்ரவரி 20, 2020)   வாஞ்சிநாதன் ********************* ஒளி குறையக் குறைய வைக்கோலிடம் குற்றம் (5) Loading…

விடை 3982

இன்று காலை வெளியான வெடி: சேரா, மதுவை ஒழித்தாலும் வஞ்சகம் இருந்ததன் அறிகுறி தென்படும் (5) அதற்கான விடை:  அடையாளம் = அடையா + ளம் அடையா = சேரா; ளம் = கள்ளம் (வஞ்சகம்) ‍-  கள் (மது) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம் .

உதிரிவெடி 3982

உதிரிவெடி 3982 (பிப்ரவரி 19, 2020) வாஞ்சிநாதன் ********************* சேரா, மதுவை ஒழித்தாலும் வஞ்சகம் இருந்ததன் அறிகுறி தென்படும் (5) Loading…

விடை 3981

விடை 3952 இன்று காலை வெளியான வெடி: மற்றவர்களைவிடப்  பணக்காரர்களுக்கு செல்வமளிக்கும் பல்லில் புரண்ட குறை (4) அதற்கான விடை: பணிதல் = பல் + ணித; ணித  = புரண்ட "தணி";  தணிவது என்றால் குறைவது: (காய்ச்சல் தணிந்த பின்னர் பள்ளிக்குச் செல்லலாம்.)   எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து  என்ற குறளில் பணிவான குணம் எல்லாருக்கும் நல்லதுதான் என்றாலும் செல்வந்தர்களுக்கு அதுவும் ஒரு செல்வமாகும் என்கிறார் வள்ளுவர். தணி = குறை என்பதுடன், இக்குறளைச் சுட்டிக் காட்டி விளக்கமளித்தவர்கள்தான்  இந்தவெடியை முழுதும் உணர்ந்தவர் எனலாம்.  முத்துசுப்ரமணியம்  திருக்குறளைக் குற்ப்பிடாமல் ஒரு குறளுண்டு என்ற சொன்னதற்கு 90 மதிப்பெண். அதன் படி 7.22க்கு உஷா அவர்கள் மட்டும்தான் முழுவிடையுணர்ந்தவராகத் தகுதி பெறுகிறார், 100/100. அவருக்குப் பாராட்டுகள். அதற்கு முன்பு பதிலளித்த கு. கனகசபாபதி, லட்சுமி மீனாட்சி இருவரும் இக் குறளைப் பிடித்துவிட்டாலும் "தணியை"ப் பிடித்ததாக விளக்கத்தில் காட்டவில்லை. அவர்களுக்கு 80 மதிப்பெண்கள்.   "பணிதல் " என்ற விடையளி

உதிரிவெடி 3981

உதிரிவெடி 3981 (பிப்ரவரி 18, 2020) வாஞ்சிநாதன் *********************   மற்றவர்களைவிடப்  பணக்காரர்களுக்கு செல்வமளிக்கும் பல்லில் புரண்ட குறை (4) Loading…

விடை 3980

இன்று காலை வெளியான வெடி முதன் முதலாய்ச் சாக நோக்குமிடம்  தலை வெட்டி  தடை போடு (4) அதற்கான விடை:  முடக்கு =  மு + டக்கு மு = முதன் முதலாய் டக்கு = (சாக நோக்குமிடம்) வடக்கு, தலை வெட்டி இன்றைய வெடிக்கு வந்த குறைவான அளவு விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3980

 உதிரிவெடி 3980  (பிப்ரவரி 17, 2020) வாஞ்சிநாதன் *********************** முதன் முதலாய்ச் சாக நோக்குமிடம்  தலை வெட்டி  தடை போடு (4) Loading…

விடை 3979

இன்று காலை வெளியான வெடி: அளவு கடந்த பிற கட்டளை பொலிவின்றி நுழைந்தது (5) அதற்கான விடை:  மட்டற்ற   = மற்ற + ட்ட மற்ற = பிற ட்ட = கட்டளை - களை (பொலிவு) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விளக்கங்களுடன் கூடிய விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 210

Today's clue: Think about  and study a model (11) Its solution: CONTEMPLATE = con + template Here are the answers received: 2/16/2020 6:11:26    Akila    Contemplate    2/16/2020 6:12:15    KB    CONTEMPLATE    2/16/2020 6:13:17    Thirumoorthi Subramanian    Contemplate     2/16/2020 6:13:22    Kesavan    Contemplate    2/16/2020 6:14:04    S Parthasarathy    CONTEMPLATE    2/16/2020 6:20:36    Siddhan Subramanian    Contemplate    2/16/2020 6:48:58    Ramki Krishnan     CONTEMPLATE (con + template)    2/16/2020 6:56:07    Bala    Contemplate     2/16/2020 6:58:00    Rangarajan Yamunachari    Contemplate    2/16/2020 7:09:57    Baloo M    Con + template = Contemplate    2/16/2020 7:14:53    Muthusubramanyam    contemplate    2/16/2020 7:18:46    Ambika    Resemblance     2/16/2020 7:20:46    S R. Balasubramaniam    CONTEMPLATE     2/16/2020 7:39:06    R.Narayanan    contemplate    2/16/2020 7:51:52    Ramarao     contemplate     2/16/2020 7:56:30    Meenakshi Ganapathi  

Solution to Krypton 209

Today's clue Resist to be accompanied by a platform (9) Its solution:   Withstand = WITH + STAND ('this building is designed to resist/withstand  earthquakes measuring upto 6.5 in Richter scale')  Visit this page to see the solutions submitted for this clue.

விடை 3978

இன்று காலை வெளியான வெடி: இவருக்கு முன் கால் போன திசை சண்டித்தனம் (4) அதற்கான விடை:   இடக்கு (சண்டித்தனம்) = இ + டக்கு இ = இவருக்கு முன் (எழுத்து) டக்கு  = வடக்கு (திசை) என்பதில்   வ (1/4)   போய்விட்டது இடக்கு செய்யும் காளை மாட்டை வாங்கி அல்லலுற்ற ஒருவரின் சோகக்கதை: வண்டியில்  பூட்டினால்  வாலை மறைத்துபின் நொண்டிபோல்  செல்லும் நுகத்தடியில்   முண்டிடும் சண்டித் தனத்தால்    சறுக்கிடும் முன்காலை கண்டதுண்டோ  இப்படியோர் காளை இன்றைய வெடிக்கு விளக்கங்களுடன் அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

விடை 3977

இன்று காலை வெளியான வெடி: ஜூலியட்டுக்கு ரோமியோ  தட்டாமல் முன்வந்த   எமன் (4) அதற்கான விடை:  காதலன் = காலன் + த காலன் = எமன் த = தட்டாமல்  என்பதன் 'முன்' எழுத்து இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3977

உதிரிவெடி 3977 (பிப்ரவரி 14, 2020) வாஞ்சிநாதன் ***********************   ஜூலியட்டுக்கு ரோமியோ  தட்டாமல் முன்வந்த   எமன் (4) Loading…

விடை 3976

இன்று காலை வெளியான வெடி: உறவில்  புலவர் இடையிட்டது விருப்பத்திற்கெதிராகச் செயல்படும் போக்கு (6) அதற்கான விடை: பலவந்தம் = பந்தம்  +  (பு) லவ (ர்) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3976

உதிரிவெடி 3976 (பிப்ரவரி 13, 2020) வாஞ்சிநாதன் ********************* பலரும் எழுதுவதில் இப்படி அடிப்படை அறிவில்லாமல் பிழையுடன் எழுதுகிறார்களே என்று நான் நினைப்பதுண்டு. தெரிந்தவர்களிடம் அதைச் சுட்டிக் காட்டியதுமுண்டு. ஆனால்  அதே தவறை நேற்று   புதிரில் செய்திருக்கிறேன் என்பது இரவு வந்த கருத்துரையிலிருந்து தெரிந்து கொண்டேன். "கத்தி கேட்பது" என்று  நான் எழுதியிருந்தேன். அதைக், "கரடியாகக் கத்துவதாய்ப்" பொருள் கொண்டால்  விடை வருகிறது. ஆனால் "கத்திக் கேட்பது" என்றால்தான் அப்பொருள் வரும். "கத்தி கேட்பது" என்றால் அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர் உதவியாளரிடம்  சொல்வதாயிருக்கலாம். அல்லது சமையலின் போது கத்திரிக்காயை  நறுக்குவதற்காகக் கேட்பதாயிருக்கலாம்.   இதனால் பலர் விடையை அடைய முடியாததற்கு வருந்துகிறேன். பிழையைச் சுட்டிக் காட்டிய டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வரனுக்கு நன்றி. இன்றைய வெடி: உறவில்  புலவர் இடையிட்டது விருப்பத்திற்கெதிராகச் செயல்படும் போக்கு (6) Loading...

விடை 3975

இன்று காலை வெளியான வெடி: கத்தி கேட்கும் விதம் பதினொன்றுக்குள் ஆடியது யாரடி?   (5) அதற்கான விடை:  கரடியாக = கக +ரடியா கக = 11 , தமிழ் எண்ணுரு ரடியா =  'ஆடிய' யாரடி  ( "அப்பா அப்படி கரடியா கத்துனாலும்  அவன் பதிலே சொல்லாமல் போறதப் பாத்தியா?") இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3975

உதிரிவெடி 3975 (பிப்ரவரி 12, 2020) வாஞ்சிநாதன் ********************* கத்தி கேட்கும் விதம் பதினொன்றுக்குள் ஆடியது யாரடி?   (5) Loading...

விடை 3974

இன்று காலை வெளியான வெடி: இருளை நீக்குவதும் மறையும் (4) அதற்கான விடை:  ஒளியும்   ஒளி = இருளை நீக்குவது ஒளிதல் = மறைதல் இவ்வெடிக்கு  அறுபதுக்கும் மேற்பட்டோர் அனுப்பிய விடைகளை இங்கே காணலாம். மறைந்து  வலைப்பக்கம் வாரா திருந்தோர் நிறைந்து விடைகளை  நேர்த்தியாய்த் தந்தீர் குறைவின்றி  இவ்வெடியைக் கொண்டாடப் பாய்ந்திடும்  நுரைபொங்கும் ஆறாய் நுழைந்து    

விடை 3973

இன்று காலை வெளியான வெடி: பூர்விகல்யாணியில்   பாட  ஆரம்பித்தவர்கள் ஆதி  தாளம் தவிர்த்த ராகம் (4) அதற்கான விடை: பூபாளம் = பூ + பா + ளம் பூ, பா = பூர்விகல்யாணி, பாடல்  இச்சொற்களில் முதலெழுத்துகள். ளம்  =  தாளம் என்பதன் முதலெழுத்து (ஆதி) இல்லை. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.

உதிரிவெடி 3973

உதிரிவெடி 3973 (பிப்ரவரி 10, 2020) வாஞ்சிநாதன் ********************* பூர்விகல்யாணியில்   பாட  ஆரம்பித்தவர்கள் ஆதி  தாளம் தவிர்த்த ராகம் (4) Loading…

Solution to Krypton 208

Today's clue: Repellent gang suppresses electronic unit of   measure of force  (9) Its solution: REVOLTING =  RING + E + VOLT Ring = gang e = electronic Volt = unit for (electromotive) force. Visit this page to see the list of all the solutions submitted.

விடை 3972

இன்று காலை வெளியான வெடி: முதல்வர்கள் வாரிசுகளால் தாக்கப்பட்ட  பிரதமர்  அடைந்த கர்நாடக கர்நாடக நகரம் (3) அதற்கான விடை: வாதாபி, சாளுக்கியர்களின் தலைநகரம். இக்காலத்தில்  பாதாமி என்ற பெயரில் கர்நாடகாவில் உள்ளது. " வா ரிசுகளால், தா க்கப்பட்ட,  பி ரதமர்" என்ற சொற்களின் "முதல்வர்கள்"  இச்சொல்லைத் தருகிறது. வெடியில் பின்னே வந்த  கர்நாடகா ஒரு மாநிலத்தின் பெயரையும் முன்னது பழைய என்ற பொருளையும் குறிக்கிறது. இன்று காலையில் சுட்டிக்காட்டிய பின்னும் பிழையில்லாததாக நினைத்து 25 நிமிடங்கள் கழித்துதான் திருத்தினேன்.  இருந்தாலும் பலரும் சரியாகக் விடையளித்துவிட்டீர்கள். பாராட்டுகள். குறிப்பு: இன்றைய பிரதமர் தன்னைத்  தாக்குபவர்களின் அடியைத் தாங்கிக் கொள்ள சூரிய நமஸ்காரம் செய்யவிருப்பதாக இரண்டு நாட்கள் முன்பு சொல்லியிருக்கிறார். அதற்கும் இன்றைய புதிருக்கும் தொடர்பில்லை! இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3972

உதிரிவெடி 3972 (பிப்ரவரி 9, 2020) வாஞ்சிநாதன் ********************** முதல்வர்கள் வாரிசுகளால் தாக்கப்பட்ட  பிரதமர்  அடைந்த கர்நாடக கர்நாடக நகரம் (3)   Loading…

விடை 3971

இன்று காலை வெளியான வெடி: கேட்பாரென்ற நம்பிக்கையில் இன்னொருவருக்குச் சொல்லப்படும் அறிவு அறிவு (5) அதற்கான விடை:  புத்திமதி = புத்தி + ம இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 207

Today's clue: Mend a metal worker who lost mid-portion of sword (6) Its solution: TINKER   = TIN + KER Tin = a metal Ker = Worker - wor (mid-portion of sword) Here is the link to the list of all the solutions received for this.

உதிரிவெடி 3971

உதிரிவெடி 3971 (பிப்ரவரி 8, 2020) வாஞ்சிநாதன் ********************** கேட்பாரென்ற நம்பிக்கையில் இன்னொருவருக்குச் சொல்லப்படும் அறிவு அறிவு (5) Loading…

விடை 3970

இன்று காலை வெளியான வெடி: துயரத்தின்போது தெம்பளிக்கும்படி ஆளுக்கு ஒன்று வைக்கும் முன்னே குணமாகு (5) அதற்கான விடை:   ஆறுதலாக = ஆறு + தலா + க ஆறு = குணமாகு ( காயம் ஆறிவிட்டது ) தலா = ஆளுக்கு ஒன்று = க தேறுதலாக என்றும் பலர் விடை அனுப்பியுள்ளார்கள்; தேறு என்பது குணமாகு என்பதற்குப் பொருத்தமான சொல். ஆனால் "ஆறுதலாகப் பேசினார்" என்பது போல் "தேறுதலாகப் பேசினார்" என்று ஏதும் புழக்கத்திலில்லை. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3964

உதிரிவெடி 3970 (பிப்ரவரி 7, 2020) வாஞ்சிநாதன் ********************* துயரத்தின்போது தெம்பளிக்கும்படி ஆளுக்கு ஒன்று வைக்கும் முன்னே குணமாகு (5) Loading…

விடை 3969

இன்று காலை வெளியான வெடி: ராவணனுக்குத் தலைக்கொரு  தோட்டா வெடித்துச் சிதற வைப்பது நூலோர் தலையாயது என்பர் (6) அதற்கான விடை: பகுத்துண்டு = பத்து + குண்டு பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்  நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை   இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3969

 உதிரிவெடி 3969 (பிப்ரவரி 6, 2020) வாஞ்சிநாதன் ********************* ராவணனுக்குத் தலைக்கொரு  தோட்டா வெடித்துச் சிதற வைப்பது நூலோர் தலையாயது என்பர் (6) Loading…

விடை 3968

இன்று காலை வெளியான வெடி: அந்த வட ஞாயிறை மறைத்தாலும்  இறுதியாக மலருமாம் தாமரை (6) அதற்கான விடை:  அரவிந்தம் = அந்த + ரவி + ம் ரவி = வட (மொழியில்) ஞாயிறு ம் = இறுதியாக மலருமாம். அரவிந்தம் என்பதும் வடமொழிச் சொல்லே. கல்கி காலத்தில் "உங்கள் பாதாரவிந்தங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்" என்று சமஸ்கிருத புணர்ச்சி விதிப்படி எழுதுவார்கள். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைக்  காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.

உதிரிவெடி 3968

உதிரிவெடி 3968 (பிப்ரவரி 5, 2019)   வாஞ்சிநாதன்   *****************   அந்த வட ஞாயிறை மறைத்தாலும்  இறுதியாக மலருமாம் தாமரை (6) Loading…

விடை 3967

இன்று காலை வெளியான வெடி: ஏழு நிறங்களிலும், ஏழு சுரங்களிலும் ஒன்றே ஒன்றை எடுத்துக் கொண்டவன் கஞ்சனில்லை! (3) அதற்கான விடை:  ஊதாரி = ஊதா + ரி; ஊதா = (வான வில்லின்) ஏழு நிறங்களிலொன்று;  ரி = ஏழு சுரங்களிலொன்று இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3967

 உதிரிவெடி 3967 (பிப்ரவரி 4, 2020) வாஞ்சிநாதன் ********************* ஏழு நிறங்களிலும், ஏழு சுரங்களிலும் ஒன்றே ஒன்றை எடுத்துக் கொண்டவன் கஞ்சனில்லை! (3) Loading…

விடை 3966

இன்று காலை வெளியான வெடி: கயிற்றை வரிந்து ஓடு வைத்த வீடு (6) அதற்கான விடை:  வசிப்பிடம் = வடம் + சிப்பி வடம் = கயிறு சிப்பி = ஓடு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 3965

இன்று காலை வெளியான வெடி:   மேற்காகப் பிடுங்கி நட்ட மரம் அந்தியில் வானத்தில்   காணப்படும் (5)  அதற்கான விடை:  அருந்ததி = அந்தி + த ரு "தரு" எதிர்ப்புறமாக (மேற்காக)   எழுத்துகள் தனித்தனியாக (பிடுங்கி ) "அந்தி"யில் நடப்பட்டுள்ளது. அருந்ததி நட்சத்திரம் சப்தரிஷி மண்டலத்தில் ஆறாவதாக இருக்கும் வசிஷ்டருக்கு மிகவும் அருகில் லேசாகப் புலப்படும். மாலையும் கழுத்துமாய் அம்மியில் ஏறி நின்று பார்த்தல் தெரியுமென்று உறுதியில்லை. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 206

Today's clue: Attractive model  entered arena  after river banks are destroyed  (8)    Its solution:  RIVETING   =  T + RING  + IVE T = model,  IVE = river with banks destroyed Both  inside RING (arena) Today I  attempted to imitate the puzzles of  THE HINDU , using  the convention  of referring to T as model. To see the answers submitted for this clue visit this page,

உதிரிவெடி 3965

உதிரிவெடி 3965 (பிப்ரவரி 2, 2020) வாஞ்சிநாதன் ********************* மேற்காகப் பிடுங்கி நட்ட மரம் அந்தியில் வானத்தில்   காணப்படும் (5)  Loading...

விடை 3964

இன்று காலை வெளியான வெடி: அடக்கும் வலிமையை எதிர்த்து வாழ  திருநாவுக்கரசர் ஏந்திய ஆயுதம் (5) அதற்கான விடை: உழவாரம் = உரம் + வாழ உரம் = வலிமை ("நெஞ்சில் உரமுமின்றி ..." -- பாரதியார்) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3964

உதிரிவெடி 3964 (பிப்ரவரி 1, 2020) வாஞ்சிநாதன் ********************* அடக்கும் வலிமையை எதிர்த்து வாழ  திருநாவுக்கரசர் ஏந்திய ஆயுதம் (5) Loading...