Skip to main content

Posts

Showing posts from September, 2019

விடை: 3809

இன்று காலை வெளியான வெடி நட்சத்திரங்கள் இருக்குமிடம்  மையை விலக்கி வெளுப்பு கலந்து வெளியே கூப்பிடு (4) அதற்கான விடை:  விண்வெளி = வெண்(மை) + விளி (அழை) இந்த வெடிக்கு  அனுப்பப்பட்ட விடைகளைக் காண இப்பக்கத்தை எட்டிப் பார்க்கவும்.

உதிரிவெடி 3809

உதிரிவெடி 3809 (செப்டம்பர் 30,  2019) வாஞ்சிநாதன் **********************   நட்சத்திரங்கள் இருக்குமிடம்  மையை விலக்கி வெளுப்பு கலந்து வெளியே கூப்பிடு (4) Loading...

விடை 3808

இன்று காலை வெளியான புதிர்: ஒரு நட்சத்திரம் ஸ்வர பேதத்தால் விட்டுச் சென்ற உலகம் (3  இதன் விடை :  தரணி = பரணி - ப + த ஆனால் பின்னர் மகம் - ம + ச = சகம் என்ற விடையை அடையவும் ஒரு ஸ்வரத்தை நீக்கி மற்றொன்றைச் சேர்க்கிறோம். நட்சத்திரம் போய் சகம் (ஜகம்) வருகிறது. ஆச்சரியமான ஒற்றுமை. அதனால் இதுவும் சரியான விடையே. இன்று வந்த விடைகளின் தொகுப்பை இங்கே சென்று காணவும்.  

உதிரிவெடி 3808

உதிரிவெடி 3808 (செப்டம்பர் 29, 2019) வாஞ்சிநாதன் **************************** ஒரு நட்சத்திரம் ஸ்வர பேதத்தால் விட்டுச் சென்ற உலகம் (3) Loading...

விடை 3807

திரிசுரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1815-1876 தன்னுடைய ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் கவிதை எழுதும் திறமையை வியந்து உவேசா குறிப்பிடும் பல நிகழ்ச்சிகளில் ஒன்று இது. யாரோ ஒருவருக்கு அவர்கள் ஊர் கோயில் சிறப்பை விவரித்து தல புராணம்  எழுதித் தருவதாக ஆசிரியர் வாக்களித்திருந்தார். மாயுரத்திலிருந்து கிளம்பி 20கிமீ தூரத்திலுள்ள திருவாவடுதுறை   மடத்துக்குச் செல்கிறார்கள்.  மாட்டு வண்டியில் போகும்போதே அவர் இயற்றிவிட்டாராம். உவேசாவின் வார்த்தைகளில் "மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பது போல் அவர் பாடல்களை சொல்லிக் கொண்டே வந்தார்". அதைக் கேட்டு எழுதிக் கொள்ள உவேசா சிரமப்பட்டார். இவ்வாறாக அவர் தன்னுடைய வாழ்நாளில்  லட்சத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.   ஏன் அப்பாடல்கள் நாம் அதிகம் கேள்விப்படவில்லை என்று எனக்குத் தோன்றியது.  மீ.சு.பிள்ளை எழுதிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்ற நூல் கிடைத்தது. அதில் ஒரு பக்கம்: அவர் இறந்த ஐந்தாண்டு கழித்து எட்டயபுரத்தில்  பிறந்த ஒருவர்  வாழ்நாள் முழுதும் எழுதியதை 400 பக்கத்துக்குள் அடக்கிவிடலாம். அதிலிர...

உதிரிவெடி 3807

உதிரிவெடி 3807 (செப்டம்பர் 28, 2019) வாஞ்சிநாதன் *************************** கடல் மணலிலும் ஏமாறிய கண்ணிற்குத் தெரிவதிலும் புதைந்திருக்கும் (3) Loading...

விடை 3806

இன்று காலை வெளியான புதிர்: இனிய கரைசல் பத்தில் இரண்டு இறுதியாய் வேறுபாட்டைக் காட்டு (6 )  இதன் விடை :  பாகுபடுத்து = பாகு + பத்து +  (இரண்) டு இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைக் காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.

உதிரிவெடி 3806

 உதிரிவெடி 3806 (செப்டம்பர் 27,  2019) வாஞ்சிநாதன் **********************    இனிய கரைசல் பத்தில் கடைசியாகக் கொட்டு  வேறுபாட்டைக் காட்டு (6) Loading...

விடை 3805

இன்று காலை வெளியான வெடி: இனிமை மது கொட்டி உள்ளே ஒழுக வெளியே தெரியாதது (5) இதன் விடை : ரகசியம் டாஸ்மாக் கடைக்குப் போய் சரக்கை  வாங்கி, பிளாஸ்டிக் பையில் எடுத்து வருவதுதான் சரியாக இருக்கும். கண்ணாடி பாட்டில், வழியில் எங்கேயாவது இடித்தாலும்  மது உள்ளே கொட்டி ஒழுகுவது, வெளியே தெரியாமல் இருக்கும். இப்படி வாழ்க்கைக்கு முக்கியமான தத்துவத்தை அடக்கிய இன்றைய வெடியை விளக்கி ஒரு மூன்றடி வெண்பா. ஒழுகாப்பை  உள்வைத்த  ஓர்சரக்கு காப்பாம் விழுந்தால் கசிந்து வெளிக்கொட்டும்  பையால் இழுக்குண்டு கெட்டார் குடி.   இந்த ஒப்பரிய தத்துவத்தைப் புரிந்து விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம் .

உதிரிவெடி 3805

உதிரிவெடி 3805 (செப்டம்பர் 26,  2019) வாஞ்சிநாதன் ********************** இனிமை மது கொட்டி உள்ளே ஒழுக வெளியே தெரியாதது (5) Loading...

விடை 3804

இன்று காலை வெளியான புதிர்: காரியத்தைச் செய்யும் முறை புதிரின்றி வெட்டி  வைப்பது  உறுதி (4)   அதற்கான விடை:  திட்டம் = திடம் + ட் உறுதி = திடம்  வெட்டி - வெடி (புதிர்) = ட் முதலில் இப்புதிரைப் பிழையாக வெளியிட்டதில் குழம்பாமல் சரியான விடை கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள். இரண்டு மாதங்களாக சில புதியவர்கள் புதிரில் பங்கேற்பதைப் பார்க்கின்றேன். பெரும்பாலும் எனக்குத் தெரிந்தவர்கள், அவர்கள் என்னிடம் சொல்லியனுப்பியவர்கள் என்றே இருந்தது இப்போது மாறிவிட்டது. அந்தவகையில்  புதிதாக வந்து சேர்ந்த "அகிலா, ஜோசப் அமிதராஜ், XYZ, சங்கரா, பூமா பொன்னுசாமி" அவர்களை வரவேற்கிறேன். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகள் என்னவென்று தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தைப் படிக்கவும்.

உதிரிவெடி 3804

உதிரிவெடி 3804 (செப்டம்பர் 25,  2019) வாஞ்சிநாதன் ********************** காரியத்தைச் செய்யும் முறை  புதிரின்றி வெட்டி  வைப்பது  உறுதி (4) Loading...

விடை 3803

இன்று காலை வெளியான புதிர்: அணிய  விரும்பும் கடைசியான பொருள் காற்றில் மாயமாகும் (3)   அதற்கான விடை:  சூடம் = காற்றில் மாயமாகும் பொருள். அணிய = சூட   + ம்  (விரும்பும் கடைசியான)    நேற்றைய புதிர் விடைப் பதிவில் கருத்துரை வந்திருப்பதிலிருந்து  அணு குண்டு சலசலைப்பைக் கொஞ்சம் ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரிகிறது. சலசலைப்பைத் தெரிவித்த மு க ராகவன், முத்து சுப்ரமண்யம்  இருவருக்கும் நன்றி.  இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்களின் விவரங்களை இங்கே சென்றால் காணலாம்.

உதிரிவெடி 3803

உதிரிவெடி 3804 (செப்டம்பர் 24,  2019) வாஞ்சிநாதன் ********************** அணிய  விரும்பும் கடைசியான பொருள் காற்றில் மாயமாகும் (3) Loading...

விடை 3802

இன்று காலை வெளியான புதிர்:   பேரழிவையளிப்பது சாப்பிட்டு  சுழியில்லாமல்  தொடர நெருங்கு (2, 3) அதற்கான விடை:  அணு குண்டு = அணுகு  + உண்டு  - உ நெருங்கு = அணுகு சுழியில்லாமல் சாப்பிட்டு = உண்டு - உ இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்களின் விவரங்களை இங்கே சென்றால் காணலாம்.

உதிரிவெடி 3802

உதிரிவெடி 3802 (செப்டம்பர் 23,  2019) வாஞ்சிநாதன் ********************** பேரழிவையளிப்பது சாப்பிட்டு  சுழியில்லாமல்  தொடர நெருங்கு (2, 3)  Loading...

Solution to Krypton 169

Today's clue: Definite to remove the obstacles and skip the classes (5, 3) Its solution: CLEAR CUT   ( It was a clear cut case of  murder for revenge.   All the fallen trees had been cleared from the road and yet students cut the classes saying no buses were running on that road . ) The answers sent in response to this clue may be found here.

விடை 3801

இன்று காலை வெளியான புதிர்: வேரைப் பிளந்து யமன் தலையுடன் தாறுமாறாக வாகனம்  ஓட்டிய  நெருக்கமான நபர் (6)   அதற்கான விடை:   வேண்டியவர் = வேர் + வண்டி + ய (மன்) இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்களின் விவரங்களை இங்கே சென்றால் காணலாம்.

உதிரிவெடி 3801

உதிரிவெடி 3801 (செப்டம்பர் 22,  2019) வாஞ்சிநாதன் ********************** வேரைப் பிளந்து யமன் தலையுடன் தாறுமாறாக வாகனம்  செலுத்திய நெருக்கமான நபர் (6) Loading...

விடை 3800

இன்று காலை வெளியான புதிர்: ஒரு பகுதி அழகில்லாதது என்றாலும் சிங்காரி தலை சீவினாள் (4)   அதற்கான விடை:   அங்கம்; அழகில்லாதது = அசிங்கம் சிங்காரி தலை = சி 'சி' சீவியபின் அசிங்கம் = அங்கம், (ஒரு பகுதி) இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்களின் விவரங்களை இங்கே சென்றால் காணலாம்.

உதிரிவெடி 3800

உதிரிவெடி 3800 (செப்டம்பர் 21, 2019) வாஞ்சிநாதன் *********************   ஒரு பகுதி அழகில்லாதது என்றாலும் சிங்காரி தலை சீவினாள் (4) Loading...

விடை 3799

இன்று காலை வெளியான புதிர்: கல்யாணம் செய்துகொள் பெட்டியைத் தூக்க உதவும் (4)   அதற்கான விடை:   கைப்பிடி  பாரதியாரின் கும்மிப் பாடல்: காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன்       காரியம் யாவினும் கைகொடுத்து மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்      மாட்சி பெறச்செய்து வாழ்வமடி! இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்களின் விவரங்களை இங்கே சென்றால் காணலாம்.

உதிரிவெடி 3799

உதிரிவெடி 3799 (செப்டம்பர் 20,  2019) வாஞ்சிநாதன் ********************** கல்யாணம் செய்துகொள் பெட்டியைத் தூக்க உதவும் (4) Loading...

விடை 3798

இன்று காலை வெளியான புதிர்: வள்ளல் போனபின் துக்கப்பாடலுடன் உறவு சேர்ந்து செய்த உடன்படிக்கை (6) அதற்கான விடை:  ஒப்பந்தம் = ஒப்பாரி - பாரி  + பந்தம் துக்கப்பாடல் = ஒப்பாரி வள்ளல் = பார், போன பின்   "ஒப்" உறவு = பந்தம் உடன்படிக்கை = ஒப்பந்தம் இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்களின் விவரங்களை இங்கே சென்றால் காணலாம்.

உதிரிவெடி 3798

உதிரிவெடி 3798 (செப்டம்பர் 19,  2019) வாஞ்சிநாதன் ********************** வள்ளல் போனபின் துக்கப்பாடலுடன் உறவு சேர்ந்து செய்த உடன்படிக்கை (6)   Loading...

விடை 3797

இன்று காலை வெளியான புதிர்:   எண்ணெய் துளித் துளி  கலந்து செய்வதற்கு அதிக முயற்சி தேவையில்லை (3) அதற்கான விடை:  எளிது = எ(ண்ணெய்) + துளி   இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்களின் விவரங்களை இங்கே சென்றால் காணலாம்.

உதிரிவெடி 3797

உதிரிவெடி 3797 (செப்டம்பர் 18,  2019) வாஞ்சிநாதன் ********************** எண்ணெய் துளித் துளி  கலந்து செய்வதற்கு அதிக முயற்சி தேவையில்லை (3) Loading...

விடை 3796

இன்று காலை வெளியான புதிர்: நிறம்  கால்வாசி போனாலும் மீதி பாதி என்பது உறுதி (4)   அதற்கான விடை: திண்ணம் = வண்ணம் - வ + தி. வ = 1/4, அல்லது "வண்ணம்" என்ற நாலெழுத்துச் சொல்லில் கால்வாசி! தி = "மீதி" என்பதில் பாதி. கால்வாசி போனால் மிச்சம் இருப்பது பாதி, கணக்கு புரியவில்லையென்றால் பிஜி வுட்ஹவுஸின்  பெர்ட்ராம்  வூஸ்டரைக் கேட்கவும்: " This proves the well-known fact that half the world does not know what the rest of the three quarters is doing " இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்களின் விவரங்களை இங்கே சென்றால் காணலாம்.

உதிரிவெடி 3796

உதிரிவெடி 3796 (செப்டம்பர் 17,  2019) வாஞ்சிநாதன் ********************** நிறம்  கால்வாசி போனாலும் மீதி பாதி என்பது உறுதி (4)  Loading...

விடை 3795

இன்றைய வெடி: ஓர் உணவாலான வீட்டுக்குப் பாதுகாப்பளிப்பதும் இன்பத்தையளிக்கும்  (7) அதற்கான  விடை: களிப்பூட்டும் = களி +  பூட்டும் ஆனால் 'ப்' எப்படி வந்தது என்பதற்கு விளக்கம் இல்லையே என்று தோன்றலாம். தமிழில் சொற்களை சேர்த்து எழுதும் போது அதாவது சேர்த்தெழுதும்போது புது எழுத்து முளைப்பதும் இயல்பு. அதனால் விட்டுவிடுவது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இந்த பக்கத்தில் காணலாம்.

உதிரிவெடி 3795

உதிரிவெடி 3795 (செப்டம்பர் 16, 2019) வாஞ்சிநாதன் ********************** ஓர் உணவாலான வீட்டுக்குப் பாதுகாப்பளிப்பதும் இன்பத்தையளிக்கும்  ( 7) Loading...

விடை 3794

இன்று காலை வெளியான வெடி: ராமன் சீதையைக் கைப்பிடித்த போது முறித்த வில்லிலிருந்து  ஒலித்தது (3) திருமணம் செய்யும் போது (ராமன் சீதையைக் கைப்பிடித்த போது) ஒலிப்பது = தவில். முறித் த வில் லிலிருந்து  என்பதில் "தவில்" ஒளிந்துள்ளது. இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம் .

உதிரிவெடி 3794

உதிரிவெடி 3794 (செப்டம்பர், 2019) வாஞ்சிநாதன் **********************   (நேற்றிரவு உதிரிவெடிக்கான விடையளித்தோர் பட்டியலுக்கு பதிலாக ஆங்கிலப் புதிருக்கான விடைகளின் பட்டியலே இணைத்திருந்தேன். தாமதமாக சரி செய்துவிட்டேன்.) ராமன் சீதையைக் கைப்பிடித்த போது முறித்த வில்லிலிருந்து  ஒலித்தது (3) Loading…

விடை 3793

இன்று காலை வெளியான வெடி: போதி உண்ட பழங்களில்  தேங்காய்தான்  சிறந்ததாம், எல்லாம்  தலையெழுத்து! (4) அதற்கான விடை:  உபதேசி = உ ண்ட ப ழங்களில் தே ங்காய்தான் சி றந்ததாம், இந்த நான்கு சொற்களின் 'தலை'யெழுத்துகளைக் கோத்து உருவாக்கப்பட்டது விடை; போதிப்பது = உபதேசிப்பது; இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3793

உதிரிவெடி 3793 (செப்டம்பர் 14,  2019) வாஞ்சிநாதன் ********************** போதி உண்ட பழங்களில்   தேங்காய்தான்  சிறந்ததாம், எல்லாம் தலையெழுத்து! (4) Loading...

விடை 3792

இன்று காலை வெளியான புதிர்: கையிடுக்கில் அலைய அணுவைப் பிளந்து வரும் சக்தியின் வெளிப்பாடு  (7) அதற்கான விடை:  கதிரியக்கம் = கக்கம் + திரிய (புளூடோனியம், யுரேனியம் போன்ற தனிமங்கள் சிதைந்து வெளிவரும் ஆற்றல்) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று பார்க்கவும்.  

உதிரிவெடி 3792

உதிரிவெடி 3792 (செப்டம்பர் 13,  2019) வாஞ்சிநாதன் ********************** கையிடுக்கில் அலைய அணுவைப் பிளந்து வரும் சக்தியின் வெளிப்பாடு  (7) Loading...

விடை 3791

இன்று காலை வெளியான புதிர்: ஒரு பூ வாயிலிருப்பது சோழமண்டலக் கடற்கரை நாடு (6) அதற்கான விடை:   நாகலிங்கம் = நா + கலிங்கம் கலிங்க நாடு இப்போது ஒரிஸா மாநிலம் மட்டுமல்ல ஆந்திராவின் வட பகுதியும் கொண்டதாக இருந்தது. அது சோழமண்டலக் கடற்கரையின் வடக்கு எல்லை. இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று பார்க்கவும்.  

விடை 3790

இன்று காலை வெளியான வெடி மன எழுச்சி அளித்து கடைசி நேரத்தில் சிக்க வைக்கும் பொறி (4)   இதற்கான விடை: தூண்டில் = தூண்டி + (நேரத்தி) ல் இன்றைய புதிருக்கு வந்து சேர்ந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3790

உதிரிவெடி 3790 (செப்டம்பர் 11,  2019) வாஞ்சிநாதன் ********************** மன எழுச்சி அளித்து கடைசி நேரத்தில் சிக்க வைக்கும் பொறி (4) Loading...

விடை 3789

இன்று காலை வெளியான புதிர்: உள்ளங்கையில் வாங்கும் நீர் காலியாக்கிய   பாத்திரம்  கடைசியாக வந்தது (5) அதற்கான விடை:   தீர்த்தம் = தீர்த்த (காலியாக்கிய)  + ம் தீர்த்தம் = கோயிலில் தீபாராதனை காட்டியபிறகு பக்தர்கள் உன்ள்ளங்கையில் வாங்கிக் கொள்ளும் நீர். இப்புதிருக்கு வந்த விடைகளின் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3789

உதிரிவெடி 3789  (செப்டம்பர் 10, 2019) வாஞ்சிநாதன் ************************ உள்ளங்கையில் வாங்கும் நீர் காலியாக்கிய   பாத்திரம்  கடைசியாக வந்தது (5) Loading...

விடை 3788

(ஒரு முக்கிய வேலையை முடித்து விட வேண்டியிருந்ததால் இப்போதுதான் விடையை வெளியிட முடிந்தது)ப். இன்று காலை வெளியான புதிர்: நகர் உள்ளே  கிழக்கே போகும்  உவேசா தேடியது ஓயாமல் ஒலிப்பது  (2,2) அதற்கான விடை: அலை ஓசை = அசை + ஓலை. அசைதல் = நகர்தல்;  ஓலை = உவே சா தேடியது. அது "லை ஓ" என்று கிழக்கிலிருந்து வருமாறு எழுதப்பட வேண்டு. தவறுதலாக கிழக்கே போகும் என்று எழுதி விட்டேன். ஆங்கிலத்தில் குறுக்கெழுத்துப் புதிரில் misdirection அதாவது திசை திருப்பி விடுவது என்பார்கள். நான் தப்பாக எழுதித்  திசை  திருப்பி விட்டேன். ஆனாலும் என்னுடைய குழப்பத்தால்   தடுமாறாமல்  பலரும் சரியாக விடையளித்து விட்டீர்கள்.   இன்றைய வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.  இன்று கல்கியின் பிறந்தநாள் என்பதால் அவர் தான் எழுதிய கதைகளில் பெரிதும் பெருமைப்பட்ட "அலை ஓசை" விடையாக அமைத்தேன். உவேசாவும் எதிர்பாராமல் வந்து  சேர்ந்துவிட்டார்.

உதிரிவெடி 3788

உதிரிவெடி 3788 (செப்டம்பர் 9,  2019) வாஞ்சிநாதன் **********************   நகர் உள்ளே  கிழக்கே போகும்  உவேசா தேடியது  ஓயாமல் ஒலிப்பது  (2,2) நகர் உள்ளே  கிழக்கிலிருந்து வரும்  உவேசா தேடியது  ஓயாமல் ஒலிப்பது  (2,2) Loading...

Solution to Krypton 165

Today's clue: A complicated procedure  to set up a  device for a spy going around  topless bar  (9)   Its solution:  RIGMAROLE =  rig + mole + (b) ar To rig = to set up a device; mole = spy ar =  'topless' bar RIGMAROLE = a long complicated procedure. The list of solutions sent today can be found  here

விடை 3787

இன்று காலை வெளியான புதிர்: களங்கம் உடையான்  அம்மணமாய்ப் புற்றில் வாழ்வது!  (4) அதற்கான விடை:    கறையான் = கறை + உடையான் - உடை கறை = களங்கம் கறையான் = புற்றில் வாழும் உயிரினம். (கரையான் என்றும் சில சமயம் இது எழுதப்படுகிறது. ஆனால் இப்புதிருக்கு களங்கம் என்ற பொருளுள்ள சொல் தேவை என்பதால்  கறையான்தான் சரியான விடை.) இப்புதிருக்கு விடையனுப்பியவர்கள் விவரங்களை இங்கே சென்று காணலாம்.

உதிரிவெடி 3787

உதிரிவெடி 3787  (செப்டம்பர் 8, 2019) வாஞ்சிநாதன் ********************** களங்கம் உடையான்  அம்மணமாய்ப் புற்றில் வாழ்வது!  (4) Loading...

விடை 3786

இன்று காலை வெளியான புதிர்: கடைசியாகச் சாப்பிட்டவர் போனபின்  மனதில் தோன்றுவது  சாப்பாடு  (3 ) அதற்கான விடை:    உணவு   = உணர்வு - ர்   (சாப்பிட்டவ"ர்") இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3786

உதிரிவெடி 3786 (செப்டம்பர் 7, 2019) வாஞ்சிநாதன் *********************** கடைசியாகச் சாப்பிட்டவர் போனபின்  மனதில் தோன்றுவது  சாப்பாடு  (3) Loading...

விடை 3785

இன்று காலை வெளியான புதிர்: வெறும் சம்பிரதாயத்துக்கு   வடிவத்தைப் போக்கி  உருக்கு  முன்னே இணங்கு (5) அதற்கான விடை:   ஒப்புக்கு = ஒப்பு (இணங்கு)  + உருக்கு - உரு இரண்டு நாட்கள் முன்பு  இந்து ஆங்கில செய்தித்தாளில் வெள்வந்த புதிரில் ஒரு வெடி, ஜப்பானிய வீர்கள் தங்கள் உயிரைத் தாமே மாய்த்துக் கொள்வதற்கான சொல்லான செப்புக்கு என்ற விடை வருமாறு அமைக்கப்பட்டிருந்தது. செப்புக்கு  என்பது கேட்பதற்குத் தமிழ் போல் இருந்தது. இரண்டு மூன்று முறை அதைச் சொல்லி பார்த்துக் கொண்டேன், "செப்புக்கு, தப்புக்கு,  ஒப்புக்கு" என்று வாயில் வார்த்தை வந்தது. அதிலொன்றைப் பிடுத்துக் கொண்டு இன்று புதிராக்கிவிட்டேன். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட அனைத்து விடைகளையும் காண இப்பக்கம் செல்லவும்.

உதிரிவெடி 3785

உதிரிவெடி 3785 (செப்டம்பர் 6,  2019) வாஞ்சிநாதன் ********************** வெறும் சம்பிரதாயத்துக்கு   இணங்கு, வடிவத்தைப் போக்கி  உருக்கு   (5) Loading...

விடை 3784

இன்று காலையில் வீசப்பட்ட வெடி: சந்திரனில்  முதல் மூன்று அடி வைத்து நடப்பதெல்லாம் சாதாரணம் (4) சில நாட்களாக அடிக்கடி சந்தியான் விண்கலம் பற்றிய செய்திகள் வந்த வண்ணமாய் இருக்கிறது: இன்று அதன் சுற்றுப் பாதை உயர்த்தப்பட்டது, இன்று பூமியின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு சந்திரனை வட்டமிடத் தொடங்கிவிட்டது, இன்று தரையிறங்கும் கலம் பிரிக்கப்பட்டது ... இப்படி.  அதைத் தொடர்ந்து இன்றைய புதிர்.  மூன்றடிவைத்து  பிரபஞ்சத்தையே அளந்த வாமனன் கதை பேசப்படும் நாட்டில்  நமது இஸ்ரோ விரைவில் சந்திரனில் நடப்பதை சாதாரண நிகழ்ச்சியாக்கும்படி முன்னேறும்.  இன்றைய வெடிக்கான  விடை:  சகஜம் = ச(ந்திரனில்)  + கஜம் (3 அடி) சகஜம் = சாதாரணமாய் நடைபெறுவது. இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இப்பக்கத்தில் காணலாம் .

உதிரிவெடி 3784

உதிரிவெடி 3784 (செப்டம்பர் 5,  2019) வாஞ்சிநாதன் **********************   சந்திரனில்  முதல் மூன்று அடி வைத்து நடப்பதெல்லாம் சாதாரணம் (4) Loading...

விடை 3783

இன்றைய வெடி: துளி கெளுத்தி வால் பிடித்த மீனவர் வைத்திருப்பது (3) அதற்கான விடை: திவலை = (நீரின்) துளி;  = (கெளுத்) தி + வலை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3783

உதிரிவெடி 3783 (செப்டம்பர் 4, 2019) வாஞ்சிநாதன் ********************** துளி கெளுத்தி வால் பிடித்த மீனவர் வைத்திருப்பது (3) Loading...

விடை 3782

இன்று காலை வெளியான புதிர்: கூழாக்கி  கூழாக்கும் கருவியில் சிதறிய துளி  (4) அதற்கான விடை:    மசித்து (கூழாக்கி)  = மத்து + சி(தறிய) இந்த வெடிக்கு வந்த  விடைகள் கொண்ட பட்டியலை இங்கே சென்று பார்க்கலாம்.

உதிரிவெடி 3782

உதிரிவெடி 3782 (செப்டம்பர் 3,  2019) வாஞ்சிநாதன் ********************** கூழாக்கி  கூழாக்கும் கருவியில் சிதறிய துளி  (4) Loading...

விடை 3781

இன்றைய வெடி: குழந்தை அடிமை பன்னிரண்டு அங்குலம் குறைந்த தூரம்! (3) இதற்கான விடை:  சேய்மை = சேய் + அடிமை - அடி அண்மை = அருகில் சேய்மை = தொலைவில் இலக்கணக்குறிப்பில்  "முருகா, அப்பனே" என்பதையெல்லாம் சேய்மை விளி என்பது வழக்கம். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின்  தொகுப்பைக் காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.

உதிரிவெடி 3781

உதிரிவெடி 3781 (செப்டம்பர் 2,  2019) வாஞ்சிநாதன் ********************** குழந்தை அடிமை பன்னிரண்டு அங்குலம் குறைந்த தூரம்! (3) Loading...

விடை 3780

இன்று காலை அளிக்கப்பட்ட புதிர்: குடும்பத் தலைவன் இடியாப்பம் பிழிந்த பின் இந்த நிலைக்கு வரும் (7) அதற்கான விடை:  இப்படியாகும் = இந்த நிலைக்கு வரும்.         = இடியாப்பம் + கு (டும்ப) இன்றைய புதிருக்கு வந்து சேர்ந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3780

உதிரிவெடி 3780 (செப்டம்பர் 1, 2019) வாஞ்சிநாதன் ********************** குடும்பத் தலைவன் இடியாப்பம் பிழிந்த பின் இந்த நிலைக்கு வரும் (7) Loading...