Skip to main content

Posts

Showing posts from May, 2018

விடை 3324

நேற்றைய அறிவிப்பைப் படித்து உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும். இன்றைய வெடி: இறுதி அங்காடி இறுதிக் காட்சி (3) இதற்கான விடை: கடைசி

உதிரிவெடி 3324

உதிரிவெடி 3324 (31/05/2018) வாஞ்சிநாதன் ****************** இறுதி அங்காடி இறுதிக் காட்சி (3) Loading... நேற்றைய அறிவிப்பைப் படித்துவிட்டீர்களா?

விடை 3323

இன்று (30/05/2018) காலை வெளியான வெடி: ஒரு  பாத்திரத்தை எறிந்த ஒற்றனிடம் இருக்கின்றன (2) இதற்கான விடை:   உள   (வாளி) --------------------- இந்த வலைப்பதிவின்  கருத்துரையில் விவாதங்கள் குறைவாகவே உள்ளன. வாட்ஸப் குழுவில் உதிரிவெடி வந்தபோது நிறைய கருத்துரைகள் சுவரசியாமாகப் பரிமாறிக் கொண்டோம், அக்குழுவுக்கு புத்துயிர் அளித்தால் நன்றாக இருக்குமே என்று மு க ராகவன் தீவிரமாகவும் வேறு சிலர் அவ்வப்போதும் கேட்டு வருகிறார்கள். அப்படி வாட்ஸப் குழு தொடங்க உங்கள் விருப்பம் அறிய விழைகிறேன். (வலைப்பதிவில் புதிர் வந்து கொண்டேயிருக்கும். அதில் மாற்றமிருக்காது). இரண்டு முக்கியமான விதிகளைக் கடைப்பிடித்தால் இது பயனுள்ளதாயிருக்கும், தொல்லைகளின்றியும் இருக்கும்: 1. இக்குழுவில் இரவு 9 மணி வரை விடையை வெளியிடக் கூடாது. அதிகக் குறிப்புகள் அளிக்கக் கூடாது. 2. அநாவசியமாக அரசியல் செய்திகள், பிறந்த நாள், பண்டிகை நாள் வாழ்த்து, சாகச வீடியோக்கள், சுய முன்னேற்ற ஊக்கமொழிகள்,  உபயோகமான தகவல் என்று புதிருக்குத் தொடபற்ற விஷயங்கள் எதையும் அனுப்பக் கூடாது. கீழ்க்கண்ட படிவத்தில் உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள

உதிரிவெடி 3323

உதிரிவெடி 3323 (30/05/2018) வாஞ்சிநாதன் ******************** ஒரு  பாத்திரத்தை எறிந்த ஒற்றனிடம் இருக்கின்றன (2) Loading...

விடை 3322

இன்று (29/05/2018) காலை வெளியான வெடி: அருள் புரிவதில் முதலானவர் நிர்ணயித்த எல்லை? (4) இதற்கான விடை:  வரம்பு

உதிரிவெடி 3322

உதிரிவெடி 3322 (29/05/2018) வாஞ்சிநாதன் ********************** அருள் புரிவதில் முதலானவர் நிர்ணயித்த எல்லை? (4) Loading...

விடை 3321

இன்று (28/05/2018) காலை வெளியான வெடி: குடித்து விட்டு மாலையில் இரண்டாம் விருந்து (4) இதற்கான விடை:  அருந்தி 

உதிரிவெடி 3321

உதிரிவெடி 3321 (28/05/2018) வாஞ்சிநாதன் ******************** குடித்து விட்டு மாலையில் இரண்டாம் விருந்து (4) Loading...

Solution to Krypton 34

Today's clue: Tendency for writer to hold a session secretly finally (10) Its solution: PROPENSITY = PRO  PEN SIT  Y Solved by 14 persons:      6:01:46    S.Parthasarathy      6:06:49    Ramarao      6:14:57    K.BALASUBRAMANIAN      6:23:27    R.Narayanan.      6:32:22    Kesavan      6:35:15    S.R.BALASUBRAMANIAN      6:55:14    Ambika shankar      7:21:29    Ravi Subramanian      7:27:27    S P Suresh      7:41:57    Rukmani Gopalan      9:40:41    Siddhan     12:35:28    M.K.RAGHAVAN.     13:04:13    Meenakahi Ganapathi     15:47:15    NT NATHAN      20:59:04 Ambika

விடை 3320

இன்று (27/05/2018) காலை வெளியான வெடி: ஒளி குன்ற  வளம்  குன்ற கடைசியாகப் பாட்டு (5) இதற்கான விடை:    மங்களம் = மங்க +  (வ)ளம் 

Solution to Krypton 33

Saturday's  (26/05/2018) clue: Fall apart as a measure of memory  in profit  disintegrates (7) Its solution: CRUMBLE   =  MB + LUCRE Solved by 12  persons:     6:14:00    S.Parthasarathy       6:43:47    M.K.RAGHAVAN.         6:47:45    Ravi Subramanian          6:50:55    Kesavan         7:31:58    NT NATHAN         7:40:18    S.R.BALASUBRAMANIAN         8:23:52    Meenakshi Ganapathi         13:33:09    K.BALASUBRAMANIAN       13:42:14    S P Suresh         16:49:31    Rukmani Gopalan         20:56:35    Radha Desikan         22:40:38    Ramarao     

உதிரிவெடி 3320

உதிரிவெடி 3320 (27/05/2018) வாஞ்சிநாதன் ******************** To see this Sunday's English clue, click here. ஒளி குன்ற  வளம்  குன்ற கடைசியாகப் பாட்டு (5) Loading...

விடை 3319

இன்று (27/05/2018) காலை வெளியான வெடி: தைவதமின்றி  நீண்ட தூரம்  செல் கடைசியாக சுருதி சேர்த்த ராகம் (4) இதற்கான விடை: காம்போதி   = காதம் - த (தைவதம்)   + போ (செல்) + தி குறிப்பு: இன்று விடையளித்தோர் பட்டியலை ராஜி ஹரிஹரன் வெளியிடுவார். இப்பணியை ஏற்றுக் கொண்டதற்கு அவருக்கு நன்றி. Solution   and solvers   Krypton will  published Sunday night. 

உதிரிவெடி 3319

உதிரிவெடி 3319 (26/05/2018) வாஞ்சிநாதன் ******************** To see this Saturday's English clue click here.    தைவதமின்றி  நீண்ட தூரம்  செல் கடைசியாக சுருதி சேர்த்த ராகம் (4) Loading...

Krypton 33

Krypton 33 (27/05/2018) Vanchinathan *****************   Fall apart as a measure of memory  in profit  disintegrates (7) . . . .

விடை 3318

இன்று (25/05/2018) காலை வெளியான வெடி: பெற்றெடுத்து இறுதியில் அன்னை மையமாய்  நுழைந்தாள் (3) இதற்கான விடை: ஈன்று   = ஈறு  + ன்  (அன்னை என்பதன் மையம்)

உதிரிவெடி 3318

உதிரிவெடி 3318 (25/05/2018) வாஞ்சிநாதன்  ******************** பெற்றெடுத்து  இறுதியில் அன்னை மையமாய் நுழைந்தாள் (3) Loading...

விடை 3317

இன்று (24/04/2018) காலை வெளியான வெடி: பயத்தில்  கல்லெறிந்து  பழந்துணியைக் கட்டிக் கொண்டு பரிசு வெல்ல ஓட்டம் (5) இதற்கான விடை: பந்தயம் = பயம் + ந்த (கந்தல் -  கல்)

உதிரிவெடி 3317

உதிரிவெடி 3317 (24/05/2018) வாஞ்சிநாதன் ********************* பயத்தில் கல்லெறிந்து பழந்துணியைக் கட்டிக் கொண்டு   பரிசு வெல்ல ஓட்டம் (5) Loading...

விடை 3316

இன்று (23/05/2018) காலை வெளியான வெடி: தாரம் ஆக்கிக்கொள்வதற்கேற்ற தரம் (2) இதற்கான விடை: முறை  மூன்று தரம்  என்றால்   மூன்று முறை. அத்தை, மாமன் மகள் என்றால் அந்தப் பெண் முறை (திருமணம் செய்து கொள்வதற்கு)  என்பது வழக்கம்.

விடை 3315

இன்று (22/05/2018) காலை வெளியான வெடி: அரசனின் ஆட்சிக்குட்பட்டோர் அருந்த வேண்டும் மது (4) இதற்கான விடை: குடிகள் விடையளித்தோர் பட்டியல் 9.45  மணிக்கு  வெளியிடப்படும்.

உதிரிவெடி 3315

உதிரிவெடி 3315 (22/05/2018) வாஞ்சிநாதன் ********************* இப்போது இந்திய அரசு காந்தி ஜயந்தியன்று மதுபானம் விற்பதை நிறுத்த வேண்டும் என்று திட்டமிடுவதாகச் செய்தி வந்திருக்கிறது. தமிழக அரசே மதுபானக் கடை  நடத்தும் போது?  இதைப் பற்றி எண்ணியதன் விளைவே இன்றைய  வெடி. அரசனின் ஆட்சிக்குட்பட்டோர்  அருந்த வேண்டும் மது (4) Loading...

விடை 3314

இன்று (21/05/2018) காலை வெளியான வெடி: சிதை முனையை வெட்டி  நெகிழவை  (4) இதற்கான விடை: உருக்கு   =  உருக்குலை (சிதை)  - லை

Solution to Krypton 32

The clue for today (20/05/2018): An actor against entry of media (8) Its solution:   COMEDIAN = Con (against, as in pros and cons ) + Media Perhaps the brief nature of the clue made it seem tougher than it actually is. Or possibly "an actor" was interpreted to stand for a specific person  in the profession of acting.  Only  12 persons have  solved this: * ) 6:02:54  Ramarao --> 1) 6:04:32    S,Parthasarathy    2) 6:09:23    R. Ravishankar.    3) 6:14:34    K.BALASUBRAMANIAN    4) 6:29:06    Kesavan    5) 6:41:01    Ravi Subramanian     6) 6:48:39    Lakshmi Shankar    7) 7:05:47    R.Narayanan    8) 8:40:38    S P Suresh    9) 13:14:11    Siddhan 10) 17:38:19    Meenakshi Ganapathi    11) 18:45:08    Bala    12) 20:20:23    Radha Desikan   

விடை 3313

இன்றைய (20/05/2018) வெடி: மா, பலா விற்குமிடத்தில்  முடிவை மாற்றி உண்டாக்கிய பரிச்சயம் (5) இதற்கான விடை: பழக்கம் = பழக்கடை - டை + ம்  

உதிரிவெடி 3313

உதிரிவெடி 3313 (20/05/2018) வாஞ்சிநாதன் ******************** To see this Sunday's English clue, click here.  மா, பலா விற்குமிடத்தில்  முடிவை மாற்றி உண்டாக்கிய பரிச்சயம் (5) Loading...

Solution to Krypton 31

Krypton 31, clue: Speak softly and repeatedly kill eliminating the German (6) Its solution: MURMUR = MUR DER MUR DER This was  solved by the following 23 persons: 1 )    6:11:43    S P Suresh        2 )    6:12:36    Bhuvana Sivaraman        3 )    6:13:39    S.Parthasarathy        4 )    6:15:23    Kesavan        5 )    6:17:45    R.Narayanan.        6 )    6:25:15    M.K.RAGHAVAN.        7 )    6:32:24    NT NATHAN        8 )    6:45:14    Dr.B. Chandramouli        9 )    6:46:14    siddhan        10 )    6:46:30    Lakshmi Shankar        11 )    7:01:04    Meenakshi Ganapathi        12 )    7:11:02    ravi sundaram        13 )    7:16:56    S.R.BALASUBRAMANIAN        14 )    7:37:22    Radha Desikan        15 )    7:37:47    Sundar Vedantham        16 )    8:06:16    Kalyani  Desikan         17 )    8:17:59    Suba srinivasan        18 )    8:48:51    Govindarajan        19 )    9:04:25    Rukmani Gopalan         20 )    9:34:53    Ramani Balakrishnan        21 )    11:34:37 

விடை 3312

இன்று (19/05/2018) காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி  அதிகபட்ச  வளர்ச்சியடைய கடைசி கட்டம் (4)  இதற்கான விடை:  முற்றம் = முற்ற +  கட்ட ம்

உதிரிவெடி 3312

உதிரிவெடி 3312 (19/05/2018) வாஞ்சிநாதன் ********************* To see today's English clue, click here. வீட்டுப் பகுதி  அதிகபட்ச  வளர்ச்சியடைய கடைசி கட்டம் (4)  Loading...

விடை 3311

இன்று (18/05/2018) காலை வெளியான வெடி: வயதானவர் வரி மாற்றி  போட்ட நாமம் (5)  இதற்கான விடை: பெரியவர் = பெயர் + ரிவ

விடை 3310

இன்று (17/05/2018) காலை வெளியான வெடி: செல்வம் தலை சீவி போனபின் மாப்பிள்ளை வீட்டார் கேட்பது (3) இதற்கான விடை: தனம் ; மாப்பிள்ளை வீட்டார் கேட்பது சீதனம், அதில் சீவி என்ப‌தன் தலையான சீ போன பின் எஞ்சுவது தனம் = செல்வம்

உதிரிவெடி 3310

உதிரிவெடி 3310  (17/05/2018) வாஞ்சிநாதன் ********************* செல்வம் தலை சீவி போனபின் மாப்பிள்ளை வீட்டார் கேட்பது (3)  Loading...

விடை 3309

இன்று (16/05/2018) காலை வெளியான வெடி அதிர்ந்து  நடுக்களம் புகும் குதிரையின் லாடம் அங்கே காணலாம் (4) இதற்கான விடை:  குளம்பு = ள (நடுக் களம்)  + புகும் 

உதிரிவெடி 3309

உதிரிவெடி 3309 (16/05/2018) வாஞ்சிநாதன் ********************* அதிர்ந்து  நடுக்களம் புகும் குதிரையின் லாடம் அங்கே காணலாம் (4) Loading...

விடை 3308 & 3307

நேற்றைய (14/05/2018) இரண்டாம் வெடி: பல்வகை புல் (2) இதற்கான விடை: கோரை (ஒரு வகைப்  புல், பாய் செய்வதற்குப் பயன்படுவது.  முன்பல், கடைவாய்ப் பல் தவிர நடுவில் இருக்கும் கூரிய  மூன்றாம் வகைப் பல், கோரைப்பல்) இரண்டாம்  வாய்ப்பில் சரியான விடை கண்டவர்கள் 6  பேர்: கு.கனகசபாபதி, மும்பை, லட்சுமி மீனாட்சி , மும்பை , வி ன் கிருஷ்ணன்,  ருக்மணி கோபாலன், நாதன் நா தோ, புவனா சிவராமன். இன்று (15/05/2018) காலை வெளியான வெடி கண்ணுக்குத் தெரிவதில் பெரிய தெய்வம் (4) இதற்கான விடை  ; காமாட்சி = காட்சி + மா எல்லோருடைய  இஷ்ட தெய்வங்களும்  என் பெயரை எழுது என்று சொல்லிவிட்டதாலோ என்னவோ என்றுமிலாத அளவுக்கு இன்று இத்தனை வகை விடைகள் வந்துள்ளன. வந்த தவறான விடைகள்: மகாதேவன், கைலாசம், சூரியன், லிங்கம், பிரமன், பரமன், கடவுள், மானிடன், பெருமான், பெரியார்.

உதிரிவெடி 3308

உதிரிவெடி 3308 (15/05/2018) வாஞ்சிநாதன் *********************   பிரம்மனுக்குக் கோவில் இல்லாததற்கும் சிவன்கோயில்களில் தாழம்பூ   பூஜைக்கு நிறுத்தப்பட்டதற்குமான கதையை  16/12/2017  அன்று  வேறொரு வெடி  தொடர்பாகக் கூறியிருக்கிறேன். அந்த கதை இன்றைய புதிரிலும் தொடர்கிறது.  அவரவர்கள் இஷ்ட தெய்வத்தை    "காமம் செப்பாது கண்டது மொழிமோ " என்று  வேண்டிக் கேட்டுத் தெரிந்துகொண்டு  நல்ல விடையை அளியுங்கள். கடவுளை நம்பாதவர்கள் விலகி வழிவிட்டு   எங்காவது ஓரத்திலோ அல்லது, மய்யத்திலோ போய் நின்றுகொள்ளுங்கள். கண்ணுக்குத் தெரிவதில் பெரிய தெய்வம் (4) Loading...

விடை 3307

இன்று (14/05/2018) காலை வெளியான வெடி சாப்பிடும்போது கிழிக்கும் புல் (2) இதற்கான விடையை 35 பேர் கண்டுபிடித்திருக்கிறார்கள். விடையைக் கொடுப்பதற்கு பதிலாக  அதற்கே வேறொரு குறிப்பை அளிக்கிறேன். இதுவரை விடையளிக்காதவர்கள்,  அதே படிவத்தில் விடையளிக்க முயலுங்கள் ( இங்கே கருத்துரையாக பொதுவில் விடையை வெளியிட வேண்டாம்).  பல்வகை புல் (2)

Solution to Krypton 30

Today's clue: Crucial moment violently cut right into a month ( 8) Its solution: JUNCTURE = JUNE CUT R Solved by the following 19 persons:  1 )  6:03:49    Sundar Vedantham  2 )  6:04:11    NT NATHAN  3 )  6:05:07    Ramarao  4 )  6:06:39    Muthusubramanyam  5 )  6:07:07    S.Parthasarathy  6 )  6:07:14    R. Ravishankar..  7 )  6:14:04    Ravi Subramanian  8 )  6:15:40    Kesavan  9 )  6:15:48    K.Balasubramanian 10 )  6:16:40    Siddhan 11 )  6:26:30    R.Narayanan 12 )  7:11:00    Meenakshi Ganapathi 14 )  7:12:11    Sankakarasubramanian 15 )  7:30:57    Nanganallur Chittanandam 16 )  7:31:40    Rukmani Gopalan 17 )  7:36:41    Suba Srinivasan 18 )  10:39:36    Maithreyi 19 )  12:58:41    M.K.RAGHAVAN

விடை 3306

இன்று காலை (13/05/2018)  வெளியான வெடி: நடு நடுவே நடு மண்டை சிண்டுடன் குழந்தைகள் (3) இதற்கான விடை: நண்டு

உதிரிவெடி 3306

உதிரிவெடி 3306 (13/05/2018) வாஞ்சிநாதன் ****************** To see this Sunday's English clue visit this page.    நடு நடுவே நடு   மண்டை  சிண்டுடன் குழந்தைகள் (3) Loading...

விடை 3305

இன்று (12/05/2018) காலை வெளியான வெடி கங்கைக்கரை நகரில் ஏறக்குறைய மாட்டி கரும்புடன் அம்பிகை (4) இதற்கான விடை:  காமாட்சி =  காசி +  மாட் டி

உதிரிவெடி 3305

உதிரிவெடி 3305 (12/05/2018) வாஞ்சிநாதன் ******************** கோடையில் மழை வருமா? இங்கே சென்று படிக்கவு ம். To see this Saturday's English clue, click here. கங்கைக்கரை நகரில் ஏறக்குறைய மாட்டி கரும்புடன் அம்பிகை (4) Loading...

கோடையில் மழை வரும்?

கோடை தகிக்க ஆரம்பித்துவிட்டது.  ஆனால் மரங்களுக்கு சென்னையில் இப்போதுதான் கொண்டாட்டம்.  ஒதியமரம் (Indian Ash tree, Lannea coromandelica)  இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்டு பச்சையாகப் பூக்களைக் முடிந்துவிடாதக் கூந்தல் போல் சரிய விட்டுக் கொண்டிருக்கிறது.   அரக்குநிறக் காய்களைக் கொண்ட copperpod என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மயில் கொன்றை தரையெங்கும் பூக்களைக் கொட்டி இறைத்துள்ளது. கொய்யா, நெல்லி இவற்றைவிட நோஞ்சானாக இருக்கும் சரக்கொன்றை (Cassia Fistula, Indian Laburnum, Amaltas) மரம் கோடையில் மட்டும்தான்  பூப்பேன் என்று  பூத்துக் குலுங்குகிறது. பொன்னியின் செல்வனில் சேந்தன் அமுதன் எப்போதும் பொன்னார் மேனியனே என்று சிவனைக் கொன்றை அணிந்தவன் என்ற விவரிக்கும் பாடலைப் பாடுவான். ஆனால் அதைவிட சுவாரசியமான தகவல்கள் சங்கப்பாடல்களில் இருக்கின்றன.    தலைவி  வெளியூர் சென்ற தலைவன் திரும்புவதற்காகக் காத்திருக்கிறாள். கார்காலத்தில் திரும்பி வருவதாக வாக்களித்துச் சென்றவன், இன்னும் வரவில்லை. கொன்றைகளோ பூத்துக்  கார்காலம் வந்ததை அறிவித்துவிட்டன.  தன்னைத்தானே தேற்றிக் கொள்ள த

விடை 3304

இன்று (11/05/2018) காலை வெளியான வெடி சவால் கூறை பிய்க்க இருபத்தேழு பெற்றவன் ஆசையோடு அளித்தது (3) இதற்கான விடை:  அவல்; குசேலன் துவாரகைக்குச் சென்று கண்ணனைச் சந்திக்கும்போது கொடுத்தது. சவால் = அறைகூவல்; அதில் கூறை நீங்க அவல்.  உரிமைத் துறப்பு : வெறும் வாயை மெல்லுவதற்கு வேண்டுமென்று கூறைப்புடவையைக் பிய்த்திக் கிழித்துப் பார்க்க வேண்டாமென்று புதிர் ஆர்வலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதையும் மீறி அவ்வாறு நீங்கள் செய்தால் நான் அதற்கு பொறுப்பல்ல. நாளை சனிக்கிழமை ஆங்கிலப்புதிரோடு இன்னொரு புதிய விஷயமும் இருக்கிறது

உதிரிவெடி 3304

உதிரிவெடி 3304 (11/05/2018) வாஞ்சிநாதன் ******************* சவால் கூறை பிய்க்க இருபத்தேழு  பெற்றவன் ஆசையுடன் அளித்தது  (3) Loading...

விடை 3303

இன்று (10/05/2018) காலை வெளியான வெடி:  திட்டி, பற்களால் நொறுக்கி, மெலிந்து விகாரமடை (4) இதற்கான  விடை:  கடிந்து =    கடி த் ந்து இலக்கணத்தில் மெலிதல் விகாரம் என்றால் வல்லினம் மெல்லினமாக மாறுவது (ஆனால் பொருள் மாறாமல்!) . திருநாவுக்கரசரின்  "மாசில் வீணையும் மாலை மதியமும்..." என்ற பாடல் முடியும்போது இணையடி நீ ழலே  என்று  செல்லும். நிழலே என்றால் வெண்டளை வராமல் தவறிவிடும். அதற்காக மாற்றியதை நீட்டல் விகாரம் என்கி றார்கள். நேற்றைய புதிரில்  ஆச்சரியக்குறி பயன்படுத்தியது  பற்றிய கேள்வி எழுந்துள்ளது. ஆங்கிலத்தில் உள்ள வழக்கப்படி, காற்புள்ளி, அரைப்புள்ளி இவை எதுவும் புதிரை விடுவிக்க உதவுவதற்கு இல்லை. திசை திருப்புவதற்கே.

உதிரிவெடி 3303

உதிரிவெடி 3303 (10/05/2018) வாஞ்சிநாதன் ******************** திட்டி, பற்களால் நொறுக்கி, மெலிந்து விகாரமடை (4) Loading...

விடை 3202

இன்று (09/05/2018) காலை வெளியான வெடி: சேரா!  கத்தி எறிந்து  கூவிளம் தந்த சுவடு (5) இதற்கான விடை: அடையாளம் = அடையா (சேரா)  +  கூவி ளம்

விடை 3301

இன்று (08/05/2018) காலை வெளியான வெடி முழுமையானது பூப்பறித்ததால் உண்டான காயம் (3) இதற்கான விடை:  ரணம்   = பூரணம் - பூ புதிர் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க, விவாதிக்க இங்கே செல்லவும். 

விடை 3300

இன்று (07/05/2018) காலை வெளியான வெடி ஊர்வது நடு இடம்  சுற்றும் போக்கு (4) இதற்கான விடை:  நடத்தை = நத்தை + ட

விடை 3299

இன்று (06/05/2018) காலை வெளியான வெடி: கெட்டி உருண்டை  உருட்டி எடுக்க  கடலிலேயே இல்லாதது (3) இதற்கான விடை: கெண்டை  Carp in Englush.    இவ்வகை மீன் ஆறு குளங்களில்  வாழ்வது.  புதிர் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க, விவாதிக்க இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3299

உதிரிவெடி 3299 (06/05/2018) வாஞ்சிநாதன் ****************** To see Sunday's English clue click here . கெட்டி உருண்டை  உருட்டி எடுக்க  கடலிலேயே இல்லாதது (3) Loading...

விடை 3298

இன்று (0 5 /05/2018) காலை வெளியான வெடி: முதல் தாரம் நீங்கும்  முன் வேலைக்காரன் கடைசியாகப் போனால் தின்பண்டம் (5) இதற்கான விடை  :  பணியாரம் = பணியா ள் + தா ரம் புதிர் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க, விவாதிக்க இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3298

உதிரிவெடி 3298 (05/05/2018) வாஞ்சிநாதன்  ******************** To see Saturday's English clue, click here . முதல் தாரம் நீங்கும்  முன் வேலைக்காரன் கடைசியாகப் போனால் தின்பண்டம் (5) Loading...

விடை 3297

இன்று (04/05/2018) காலை வெளியான வெடி சுரத்துடன் இருக்கும் உடல் உயிரிழந்த சில நாட்கள் பின் செய்வது (4) இதற்கான விடை: காரியம் = காயம் + ரி புதிர் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க, விவாதிக்க இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3297

உதிரிவெடி 3297 (04/05/2018) வாஞ்சிநாதன் ******************* சுரத்துடன் இருக்கும் உடல் உயிரிழந்த சில நாட்கள் பின் செய்வது (4) Loading...

விடை 3296

இன்று (03/05/2018) காலை வெளியான வெடி: கடையிரண்டு  பெற்று அவ்விதம் சாப்பாடு தயாராகுமிடம் (5) இதற்கான விடை: அடுப்படி = அப்படி (அவ்விதம்)  +  டு ( "கடை" இரண்டு) புதிர் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க, விவாதிக்க இங்கே செல்லவும் .

உதிரிவெடி 3296

உதிரிவெடி 3296 (03/05/2018) வாஞ்சிநாதன் ************************ கடையிரண்டு  பெற்று அவ்விதம் சாப்பாடு தயாராகுமிடம் (5) Loading...

விடை 3295

இன்று (02/05/2018) காலை வெளியான வெடி காஞ்சியில் சேனாதிபதி பிற்காலத்தில் பெரிய தொண்டாற்றவில்லை (5) இதற்கான விடை: பரஞ்சோதி . காஞ்சியிலிருந்து ஆண்ட நரசிம்ம வர்ம பல்லவனின் சேனாதிபதியாக இருந்தவர் பரஞ்சோதி(யார்).இவர் மூலம் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தார் நரசிம்மர். பரஞ்சோதியார்தான்  சாளுக்கியத் தலைநகர் வாதாபியிலிருந்து பிள்ளையாரைக் கொண்டுவந்து தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது என்கிறார்கள். (வாதாபி கணபதிம் என்று கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடப்படுவது இந்த கணபதிதானோ?) வென்று காஞ்சிக்குத் திரும்பியபின் பதவியைத் துறந்து  சைவசமயத்தில் முற்றிலும் ஆழ்ந்தார் அவர்.  சிறுதொண்டர் என்ற பெயரில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரானார். இவருக்கு   சிவபெருமான் கொடுரமான கட்டளையிட்டார். பரமசிவன், பரஞ்சோதியாயிருந்த சிறுதொண்டரை, பரமசோதித்தார்.  இதயபலவீனமானவர்களுக்குத் தாங்காது என்பதால் நான் அதைச் சொல்ல விரும்பவில்லை. அது சரி, சிறுதொண்டரா? சிறுத்தொண்டரா? சிறுபிள்ளை, சிறுகுழந்தை, சிறுசேரி (சென்னையருகில் இருக்கிறது), என்பதையெல்லாம் பார்க்கும்போது  சிறுத்தொண்டர் என்று எழுதுவது ச

உதிரிவெடி 3295

உதிரிவெடி 3295 (02/05/2018) வாஞ்சிநாதன் **************** காஞ்சியில் சேனாதிபதி பிற்காலத்தில் பெரிதாகத் தொண்டாற்றவில்லை (5) Loading...

விடை 3294

இன்று  (01/05/2018) காலை வெளியான  வெடி: ஒரு துளி குருதி  கொண்ட உடல் பார் (3) இதற்கான விடை:  மேதினி கோடை தகிக்கத் தொடங்கிவிட்டது. மே மாதம் ஆரம்பித்துவிட்டது. சிறுவயதில் வீட்டிற்கு எப்போதும் என்தந்தையைப் பார்க்க வரும் தோழர்கள் பள்ளிவிடுமுறையான கோடை நாளில் ஊர்வலத்துக்கு என்னையும் அழைத்துப் போவார்கள்.  இதே வெயிலில்தான் ஏழெட்டு வயதில் தஞ்சைத் தெருக்களில் புரட்சி ஓங்குக, உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று நானும் கூக்குரலிட்டுச் சென்றது நினைவுக்கு வருகிறது. இன்று குளிர்ப்பதன அறையிலேயே இருக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சோதி  நிறைந்து சுடர்விடும் செங்கதிரோன் மேதினத்தில் மேதினியைக் காத்து