Skip to main content

விடை 3219


இன்று (15/02/2018) காலை வெளியான  வெடி:
புலன், குறையில்லாதது, வலி அதிகரிக்காமல்  மிதக்கும் (4)
இதற்கான விடை:   முழுகாது =  "முழுக்காது ",  குறைவில்லாத பொறியான காது. வலிமிகும் இடத்தில்  'க்' நீக்கப்பட்டுள்ளது.

 (சோற்றில் பூசணிக்காயை மறைக்கும்போது 'ப்' சேர்த்து முழுப் பூசணிக்காயாக மறைப்பது போல்தான் . . . முழுக்கதையைக் கேட்டு . . .  முழுத்தொகையையும் முன்பே கட்டி ... இங்கெல்லாம் வலிமிகுவது  ஆனால் புதிருக்கு மிகாமல் வந்திருக்கிறது).)

Comments

Ambika said…
வலிக்காமல் சரியான‌ விடை அளித்தவர்கள் (22):

1) 6:04:17 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
2) 6:05:27 சித்தன்
3) 6:05:49 முத்துசுப்ரமண்யம்
4) 6:33:51 லக்ஷ்மி ஷங்கர்
5) 7:11:47 ஆர்.லதா
6) 7:12:19 எஸ்.பார்த்தசாரதி
7) 7:12:47 அம்பிகா
8) 7:23:24 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
9) 7:34:41 சந்திரசேகரன்
10) 7:48:28 கி.பாலசுப்ரமணியன்
11) 7:59:28 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
12) 8:13:56 எஸ் பி சுரேஷ்
13) 8:47:02 மீனாக்ஷி கணபதி
14) 10:56:15 மீனாக்ஷி
15) 12:27:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
16) 12:45:28 ரமணி பாலகிருஷ்ணன்
17) 13:13:23 சுபா ஸ்ரீநிவாசன்
18) 16:11:04 மரு. ப. சந்திரமொளலி
19) 16:29:16 சாந்திநாராயணன்
20) 17:09:52 SOUDHAMINI
21) 18:17:08 ஆர்.நாராயணன்.
22) 20:05:20 மைத்ரேயி சிவகுமார்

************************
Chittanandam said…
புதிர் மூளையை சரியானபடி கசக்கிவிட்டது. மூழ்காது வரை வந்துவிட்டேன். அதற்கப்பால் செல்ல வழி புலப்படவில்லை. மதியம்தான் முழு என்கிற சொல் கிடைத்தது. அதன் பின் உடனே விடையைப் பிடித்தேன். கற்பனை வளம் மிக்க புதிர். பாராட்டுகள்.
Ramiah said…
ஐம்புலன்கள் எவை? பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் ஐம்பொறிகள் எவை? கண், காது, வாய், மூக்கு, மெய் இவ்வாறு எண்ணி மாலை வரை குழம்பிவிட்டேன். புலன் என்றாலும் பொறி என்றாலும் ஒன்றுதான் என்று யோசித்தபின்னரே, மாலை 6.18 மணிக்குத்தான் விடை கிடைத்து.
போறிகள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி

புலன்கள்:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
Suba srinivasan said…
.ஐம்புலன்கள் எவை? பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் ஐம்பொறிகள் எவை? கண், காது, வாய், மூக்கு, மெய் இவ்வாறு எண்ணி மாலை வரை குழம்பிவிட்டேன்.

எனக்கும் அதே நிலைமை.

ஆனால் புலன் Is sense. பொறி Is sense organ.

How can புலன் Be காது?

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்