Skip to main content

விடை 3217

இன்று (13/02/2018) வெளியான புதிர்:
கம்பி எண்ணுபவள் பத்ரியுடன் இணைவதைத் தெரிவிக்கும் அழைப்பிதழ்? (5)

இதற்கான விடை: பத்திரிகை = பத்ரி + கைதி (கம்பி எண்ணுபவள் )

பத்திரிக்கை என்று 'க்' சேர்த்து  ஆறெழுத்துச் சொல்லாக்கினால்தான்
அழைப்பிதழ், இல்லையெனில் அது தினசரி/வார/மாத இதழ் என்று பொருள் படும் என்று கி.பாலசுப்ரமணியன் எனக்குத் தனியாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். 

இப்படி ஒரு சூட்சுமம் இருப்பது எனக்குத் தெரியாது. ஒரே சொல்லை இரு விதமாக எழுதும் முறை என்றுதான் நினைத்திருந்தேன்.

இச்சமயத்தில் ஒன்றை நினைவு கூர விரும்புகிறேன். இதுபோல் கருத்து இருந்தால் மின்னஞ்சலுக்கு பதிலாக புதிர் வெளியான பக்கத்திலேயே கருத்துரையாக அளித்தால் எல்லோருக்கும் அது சேரும். அக்கருத்து வெளிவரவேண்டுமென்றால் நீங்கள் அதற்கு முன்பே ஜிமெயில் தளத்தில் நுழைந்திருக்க வேண்டும் (வேறொரு சாளரத்தில் நீங்கள் ஜிமெயிலில் நுழைந்து கொள்ளுங்கள்).

Comments

Ambika said…
This comment has been removed by the author.
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (55):

1 6:01:57 லக்ஷ்மி ஷங்கர்
2 6:02:40 எஸ்.பார்த்தசாரதி
3 6:02:45 ஶ்ரீவிநா
4 6:03:35 சாந்திநாராயணன்
5 6:03:44 சித்தன்
6 6:03:51 கேசவன்
7 6:03:59 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8 6:04:27 ரமணி பாலகிருஷ்ணன்
9 6:04:34 மைத்ரேயி சிவகுமார்
10 6:04:48 வீ.ஆர். பாகிருஷ்ணன்
11 6:05:20 வி ன் கிருஷ்ணன்
12 6:07:09 சுந்தர் வேதாந்தம்
13 6:07:24 லதா
14 6:08:29 சுபா ஸ்ரீநிவாசன்
15 6:10:17 சந்திரசேகரன்
16 6:16:33 விசீ சந்திரமௌலி
17 6:22:08 ஆர். பத்மா
18 6:23:09 கு. கனகசபாபதி, மும்பை
19 6:27:05 மரு. ப. சந்திரமௌலி
20 6:34:47 ரங்கராஜன் யமுனாச்சாரி
21 6:35:54 ராஜா ரங்கராஜன்
22 6:38:21 வானதி
23 6:40:41 ரா. ரவிஷங்கர்..
24 6:41:03 அம்பிகா
25 6:42:58 மீனாக்ஷி கணபதி
26 6:49:49 நாதன் நா தோ
27 6:57:22 அன்பன்
28 7:00:37 ராதா தேசிகன்
29 7:02:39 சங்கரசுப்பிரமணியன்
30 7:10:47 விஜயா ரவிஷங்கர்
31 7:11:07 நங்கநல்லூர் சித்தானந்தம்
32 7:16:00 இரா.செகு
33 7:18:16 ரவி சுந்தரம்
34 7:23:26 பானுபாலு
35 7:26:36 பானுமதி
36 7:34:54 ருக்மணி கோபாலன்
37 7:36:46 எஸ் பி சுரேஷ்
38 7:45:01 ஆர்.நாராயணன்.
39 7:48:35 முரளி
40 7:51:38 மீ கண்ணன்
41 7:59:30 கி.பாலசுப்ரமணியன்
42 8:04:28 Sandhya
43 8:33:28 ரவி சுப்ரமணியன்
44 8:41:20 முத்துசுப்ரமண்யம்
45 8:49:15 மாலதி
46 9:01:10 ராஜி ஹரிஹரன்
47 9:25:42 ஸௌதாமினி
48 9:27:02 மீனாக்ஷி
49 9:32:57 பாலா
50 10:33:20 சதீஷ்பாலமுருகன்
51 13:06:43 மீ பாலு
52 14:13:56 மு க பாரதி
53 14:48:34 மு.க.இராகவன்
54 17:24:24 கல்யாணி தேசிகன்
55 19:34:13 செந்தில் சௌரிராஜன்

***********************************
Muthu said…
http://dev.neechalkaran.com/p/dictionary.html#.WoMKcqinFdj
இங்கு பல அகராதிகள் தொகுக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இவை
அதிகார பூர்வமான அகராதிகள் எனத் தோன்றுகிறது (பல்கலைக் கழகங்களால் தயாரிக்கப்பட்டு/ஆதரிக்கப்பட்டு வெளிவந்தவை).
இவற்றில் பலவற்றில் பத்திரிகை தான் இருக்கிறதே தவிர பத்திரிக்கை
இல்லை. எனக்குத் தெரிந்து பத்திரிக்கை என்ற சொல் வழக்கு நான் சென்னையில் இருந்த வரை கேட்டதில்லை (1978).
Muthu said…
இன்னும் தீவிரமாகப் பார்க்கப் போனால், தூய தமிழில் “இதழ்” என்றுதான் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது; விக்கிபீடியாவில் பத்திரிக்கை, பத்திரிகை தேடினால் இதழுக்கு இழுத்துச் சென்று விடுகிறது!
Chittanandam said…
பத்திரிகை என்பது பத்ர எனும் வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது. பத்ரிகா எனில் செய்தி இதழ் என்று பொருளாகிறது. எனவே பத்திரிகை என்பதே சரியானதாக இருக்கும் என எண்ணுகிறேன். திரு.முத்து சுப்பிரமணியன் கூறுவது சரியென்றே படுகிறது.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.