Skip to main content

விடை 3215

இன்று (11/02/2018) காலை வெளியான வெடி:
அம்பா விழியோரம் ஒரு நகை (4)
இதற்கான விடை: கணையாழி = கணையா + ழி; கணை = அம்பு;  ழி = விழி ஓரம்;
கணையாழி = மோதிரம்

Next clue in English will be published on Saturday, the 17th February.
So far only 10 correct answers have been received for  the violent clue about a story involving bloodshed. So the deadline for submitting
answers is  being extended up to  9 pm on P G Wodehouse's death anniversary.

Comments

Vanchinathan said…
கணையாழியை கண்டு பிடித்தவர்கள் (28) :
=================================
1 6:07:21 மரு. பா. சந்திரமௌலி
2 6:09:20 எஸ்.பார்த்தசாரதி
3 6:19:56 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
4 6:36:07 ஆர்.நாராயணன்.
5 6:43:25 கேசவன்
6 6:58:26 சாந்திநாராயணன்
7 7:01:52 சுந்தர் வேதாந்தம்
8 7:17:31 சித்தன்
9 7:44:10 கி.பாலசுப்ரமணியன்
10 8:23:18 மீனாக்ஷி கணபதி
11 8:56:15 ஸௌதாமினி
12 9:12:22 K.BALASUBRAMANIAN
13 10:05:00 லதா
14 10:05:08 வானதி
15 10:05:55 வித்யா ஹரி
16 10:25:48 மீ கண்ணன்
17 10:48:39 ராஜி ஹரிஹரன்
18 11:11:29 ராமராவ்
19 11:16:07 மீனாக்ஷி
20 12:13:02 நங்கநல்லூர் சித்தானந்தம்
21 12:58:26 விசீ சந்திரமௌலி
22 12:59:06 ஶ்ரீவிநா
23 14:07:19 சங்கரசுப்பிரமணியன்
24 14:10:19 மீ பாலு
25 14:49:47 நாதன் நா தோ
26 16:02:21 எஸ் பி சுரேஷ்
27 20:36:55 ஏ.டி.வேதாந்தம்
28 20:37:53 பத்மாசனி
Muthu said…
நகைக்கும் எனக்கும் வெகு தூரம்!
Chittanandam said…
அம்பா. Highly misleading word. Congratulations.
Chittanandam said…
அம்பை, அம்பிகை, அம்பாலிகை, அம்மன் என்று பல்வேறு சொற்கள் மனதில் தோன்றின. எதுவும் புதிருடன் பொருந்தவில்லை. பின்னர் மின்னலடித்தாற் போல அம்பு என்கிற வேர்ச்சொல்லில் விளையாடியிருக்கிறாரோ என்ற எண்ணம் உதித்தது. விடை சட்டெனக் கிடைத்துவிட்டது. மிகவும் மனநிறைவு. மகிழ்ச்சி. பாராட்டுகள்.
Muthu said…
அம்பாள் என்று சொல்லாமல் அம்பா என்று சொன்னது வைத்தே தெரிந்திருக்க வேண்டும். நானும் அம்பா = மகா பாரத அம்பா, அம்மா என்று
யோசித்தேனே தவிர கணையா என்று எடுக்கவில்லை; 4 எழுத்து உள்ள
நகைப் பெயர் மோதிரம், அட்டிகை, (புன்னகை) எல்லாம் வந்தது, கணையாழி
வரவில்லை. என் தம்பிகள் இருவர், தங்கை ஒருத்தி - சென்னை வாசிகள் - சரியான விடை கண்டு பிடித்து விட்டார்கள். (என் ட்ரெயினிங்க்!)
S P Suresh said…
தமிழ்ப்புதிரைக் காலையிலேயே அவிழ்த்துவிட்டேன். ஆங்கிலம் தான் மாலை நான்கு வரை வரமாட்டேன் என்று அடம்பிடித்து கடைசியில் வந்தது!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.