Skip to main content

விடை 3206 மற்றும் புதிதாய் ஒரு பீட்டர்

இன்று (02/02/2018) காலையில் ஒரு குறள் வெடியை அளித்திருந்தேன்:

கொட்டியபின் நீளம் குறைத்திடுவார் மேற்கொண்டு
கட்டிடுவார் கொத்தனார் ஆங்கு (6)

இதற்கான விடை: அடித்தளம் = அடித்த  + (நீ) ளம்
அடித்தளம் இட்டபின் மேற்கொண்டுதான் (வீடு) கட்டுவார்கள்.

மேளத்தை அடிப்பதை மேளம் கொட்டுவது என்று கூறுகிறோம். (தெலுங்குக்காரர்கள் தொட்டதெற்கெல்லாம் கொட்டுகிறார்கள். தமிழில் கல்யாணம், காட்சிக்கு மட்டும் கொட்டுகிறோம்.)

இரண்டு நாட்களாக வெடிகளில் நான் குழற,  குறள ஆரம்பித்துவிட்டேன் என்று நினைப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி. நாளை வழக்கமான பாணியில் புதிர் வரும்.

கொசுறு:
நேற்று இந்து செய்தித்தாளில்  ஆங்கிலப் புதிரைப் படித்த போது மனதில் தோன்றிய ஒரு வெடியை அளிக்கிறேன்:

 Baby deliverer  tale has a different ending (5)

இதற்கான விடையை அனுப்பியே தீருவேன் என்பவர்கள் காலை குறள் வெடியின் படிவத்திற்கே மீண்டும் சென்று அனுப்புங்கள்.

நல்லாத்தானே இருந்தார் ஏன் இப்பிடி  பீட்டர் விடப் போய்ட்டார் என்று நினைக்கிறவர்கள் திட்டவேண்டிய நபர் நானில்லை, அதற்கு முழுப் பொறுப்பு ஆர்டன்:
 Arden's clue in The Hindu February 1, 2018 (Puzzle  12229):

Stray animal, head is different (7 )

 இதனால் சகலருக்கும் தெரிவித்துக்  கொள்ளப்படுவது என்னவென்றால், இது போல்  
பீட்டரிடம் திருடி பால் கணக்கைத் தீர்க்கும் வழியும் இந்த வலைப் பதிவில்  இடம் பெறும் என்பதாம்.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (23):

6:31:05 நங்கநல்லூர் சித்தானந்தம்
7:32:50 மீனாக்ஷி கணபதி
7:52:05 லக்ஷ்மி ஷங்கர்
8:09:16 எஸ் பி சுரேஷ்
8:22:11 கேசவன்
8:24:28 ராஜி ஹரிஹரன்
8:34:35 அன்பன்
8:40:29 ராஜா ரங்கராஜன்
8:51:37 வி சீ சந்திரமௌலி
8:58:52 ஶ்ரீவிநா
9:10:33 சங்கரசுப்பிரமணியன்
9:32:03 எஸ்.பார்த்தசாரதி
9:56:44 ஆர்.நாராயணன்.
10:24:57 சுபா ஸ்ரீநிவாசன்
10:31:43 மைத்ரேயி சிவகுமார்
10:47:09 அம்பிகா
10:50:38 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
10:54:38 ரமணி பாலகிருஷ்ணன்
13:50:47 நாதன் நா தோ
16:33:13 வானதி
16:41:04 மு.க.இராகவன்
17:00:57 கி.பாலசுப்ரமணியன்
17:25:34 சித்தன்

************************
நான் கொத்தளம் என்று அனுப்பியிருந்தேன். "கொத்த'' (கொத்த நாரிலிருந்து ) + "ளம்". நிறைய பேர் இது போல் எழுடியிருந்தர்களா? கொத்தளம் என்பது மேல்தளம் என்றாகலாம்.
Muthu said…
கொட்டிய = அடித்த என்று தோன்றவில்லை; சிவில் பொறியாளராகப்
படித்துப் பல பட்டங்கள் பெற்று, இரண்டு கண்டங்களில், மூன்று நாடுகளில்
“பேரா”சிரியராகப் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற 13 ஆண்டுகளில் எல்லாம்
மறந்து விட்டேன்! அடித்தளம் போய்விட்டது! மேல்தளம் ஆட்டம் கண்டுகொண்டிருக்க்கிறது!
Raghavan MK said…

கொத்தளம் என்பது, கோட்டை மதில்களில் இருந்து வெளித் துருந்திக் கொண்டிருக்கும் ஓர்அமைப்பு ஆகும். சுற்று மதில்களின் மூலைகளிலும், சில சமயங்களில் நேரான மதில் பகுதிகளிலும் கொத்தளங்களை அமைப்பது உண்டு. இவை கோட்டையைத் தாக்கும் எதிரிகள் மீது பதில் தாக்குதல் நடத்துவதற்கு வசதியான இடங்களாக அமைகின்றன
Muthu said…
விவரத்திற்கு நன்றி. கோட்டை, கொத்தளங்கள் என்று சேர்த்தே சொல்லிக் கேட்பதுண்டு. ஆனால் கொத்தளம் என்றால் என்ன என்று
யோசித்ததும் இல்லை!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்