Skip to main content

Posts

Showing posts from August, 2019

Solution to Krypton 162

Today's clue: Where law makers are found to have a role hiding returned  mail in plenty centrally (10) Its solution: PARLIAMENT, place where lawmakers are found; Role= PART Returned mail = LIAM plenty centrally = EN Click this link to see all the submitted entries for this clue.

விடை 3779

இன்று காலை வெளியான புதிர்: தர்மாவதியில் தொடங்கிய குன்னக்குடியார் கையில் இருக்கும் வாத்தியம்  (3) அதற்கான விடை:   தவில் =  த + வில், ஒரு வாத்தியம்; வயலின் வாசிக்கும் குன்னக்குடி வைத்தியநாதன் கையில் இருப்பது வில். தர்மாவதியில் முதலெழுத்து த. இப்புதிருக்கு அனுப்பப்பட்ட  விடைகளின் பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3779

உதிரிவெடி 3779  (ஆகஸ்டு 31, 2019) வாஞ்சிநாதன் ********************** தர்மாவதியில் தொடங்கிய குன்னக்குடியார் கையில் இருக்கும் வாத்தியம்  (3) Loading...

Krypton 162

Krypton 162 (31 August. 2019) Vanchinathan ********************** Where law makers are found to have a role hiding returned  mail in plenty centrally (10) Loading...

விடை 3778

இன்று காலை வெளியான வெடி: ருசியில்லா துவையல் பாதி  வெளியே வட்டமிட வந்தது (5) அதற்கான விடை:    சுவையற்ற = வைய (துவையல் பாதி) + சுற்ற இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3778

உதிரிவெடி 3778 (ஆகஸ்டு 30, 2019) வாஞ்சிநாதன் ********************** ருசியில்லா துவையல் பாதி  வெளியே வட்டமிட வந்தது (5) Loading…

விடை 3777

இன்று காலை வெளியான வெடி: பற்றிய கையை விலக்கி ஓர் ஒப்பந்தத்தில்  இறுதியாக வெற்றி  (4) அதற்கான விடை:  குறித்த = பற்றிய; ( நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வு குறித்த மசோதாவில் அனைத்து கட்சிகளும் ஒருமித்து வாக்களித்தன .) குத்தகை = ஓர் ஒப்பந்தம்; குத்தகை - கை + றி இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3777

உதிரிவெடி 3777 (ஆகஸ்டு 29, 2019) வாஞ்சிநாதன் ********************** பற்றிய கையை விலக்கி ஓர் ஒப்பந்தத்தில்  இறுதியாக வெற்றி  (4) Loading...

விடை 3776

இன்று காலை வெளியான வெடி: அதற்கான விடை:  கழிமுகம், ஆறு கடலில் சேருமிடம். இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம். வாட்டும் வறட்சியால் வற்றிய பொன்னியின்று மேட்டூர் நிரம்பிடவே மேல்வழிந்து பாய்ந்து சுழித்து நுரைபொங்க சோலைவழி சென்று கழிமுகம் சேர்ந்தது காண்.

உதிரிவெடி 3776

உதிரிவெடி 3776  (ஆகஸ்டு 28, 2019)  வாஞ்சிநாதன் ********************** உதாரணமாகப் பூம்புகார்  அகத்தின் அழகைக் காட்டும் முன்னே நீக்கு (5) Loading...

விடை 3775

இன்று காலை வெளியான புதிர்: அவமானம்,  கேட்பதற்கே முதலில் இடமில்லை (4)   அதற்கான விடை:    கேவலம் = கே + வலம் இடம் , வலம் (இடது,  வலது என்றும் சொல்லப்படும்) இரண்டும் எதிர்ப்பதங்கள். இந்தப் புதிருக்கு விடையனுப்பியவர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

விடை 3774

நேற்றைய புதிரை விடையளிப்பதற்கான படிவத்தை இணைக்காமல் வெளியிட்டேன். அதற்கு காரணம் ஒரே நாளில் அடுத்த இரண்டு நாட்களுக்கான புதிர்களையும், ஆங்கிலப்புதிரையும் அவசர அவசராமாகச் செய்ததுதான். சென்ற வாரம் முழுவதும் கணித மாநாட்டுக்காக வெளியூர் சென்றது, குடும்ப நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்து விதவிதமாக ஏகப்பட்ட பதார்த்தங்களுடன் சாப்பாடு, பின்னர் இனிப்புகள். அதையெல்லாம் சாப்பிட்டுக்கொண்டே இருந்ததால் வேறெதிலும் சிந்த்னை செல்ல மறுத்து இன்றைய வெடியை அமைத்தேன்: காலையில் தொடங்கி மாலையில் முடிந்த சாப்பாடு! (4)   அதற்கான விடை:   ஆகாரம்; கழுத்தில் சூடிக்கொள்ளும் மாலையான ஆரத்தில் முடிந்து வைக்க வேண்டியது காலையின் முதலெழுத்தான கா, ஆரம் + கா ( அவள், தன் புருஷனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாள் ). இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3774

உதிரிவெடி 3774 (ஆகஸ்டு 26, 2019) வாஞ்சிநாதன் ********************** காலையில் தொடங்கி மாலையில் முடிந்த சாப்பாடு! (4) Loading...

விடை 3773

இன்று காலை வெளியான வெடி: எல்லையில்லா நீரின் அளவு குறைய  எல்லைகளில்லா ஏற்றம்  (5) அதற்கான விடை:    மட்டற்ற = மட்ட (ம்) + (ஏ)ற்ற(ம்)  வெளியூர் செல்லும் அவசரத்தில்  படிவமில்லாமல் புதிரை அனுப்பிவிட்டேன். கணினி இல்லாப்ப்யணம் என்பதால்  தெரிந்தபின்னும் அதைச் சரி செய்யவும் முடியவில்லை. தவறுக்கு  வருந்துகிறேன். இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3773

உதிரிவெடி 3773 (ஆகஸ்டு 25, 2019) வாஞ்சிநாதன் ********************** எல்லையில்லா நீரின் அளவு குறைய  எல்லைகளில்லா ஏற்றம்  (5)

விடை 3772

இன்று காலை வெளியான வெடி: பயத்தில் கசடதபற காட்டை அழித்து  வாத்தியக் கச்சேரி (5) அதற்கான விடை:  பல்லியம் = பயம் +  வல்லினம் - வனம் இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3772

உதிரிவெடி 3772 (ஆகஸ்டு 24, 2019) வாஞ்சிநாதன் **********************  பயத்தில் கசடதபற காட்டை அழித்து  வாத்தியக் கச்சேரி (5) Loading...

விடை 3771

இன்று காலை வெளியான வெடி:   முன்னே இருப்பவரைக் காட்டும் கடைசித் தேரோட்டி முன்னே இருக்கும் பார்த்தசாரதீ  ! (4) அதற்கான விடை:  கண்ணாடி = கண்ணா + (தேரோட்) டி பார்த்தசாரதி = கண்ணன் பார்த்தசாரதீ  (எட்டாம் வேற்றுமை)  = கண்ணா இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3771

உதிரிவெடி 3771 (ஆகஸ்டு 23, 2019) வாஞ்சிநாதன் **********************  முன்னே இருப்பவரைக் காட்டும் கடைசித் தேரோட்டி முன்னே இருக்கும் பார்த்தசாரதீ ! (4) Loading...

விடை 3770

இன்று காலை வெளியான வெடி: ஒரு தானியம் துளி ரத்தம் பிடிக்கும் (4) அதற்கான விடை:  கொள்ளும் = கொள்ளு + ம் இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3769

உதிரிவெடி 3769 (ஆகஸ்டு 21, 2019) வாஞ்சிநாதன் **********************   மக்களாட்சியின் அம்சம் எரிபொருளில்லா வாகனத்துடன் மகள் உலகைத் துறந்தது (4) Loading…

விடை 3768

இன்று காலை வெளியான வெடி: என்னப்பா, ராமு! கம்பனில் மூழ்கி கண்டுகொள்ளாமல் இருக்கிறாயே (5)   அதற்கான விடை:  பாராமுகம் = என்னப் பா ராமு கம் பனில் மூழ்கி... இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3768

உதிரிவெடி 3768 (ஆகஸ்டு 20, 2019) வாஞ்சிநாதன் ********************** என்னப்பா, ராமு! கம்பனில் மூழ்கி கண்டுகொள்ளாமல் இருக்கிறாயே (5) Loading...

விடை 3767

இன்று காலை வெளியான வெடி: மாலையோடு மரம் ஆடுவதை அம்மியை மிதித்த பின் காணலாம் (5) அதற்கான விடை: அருந்ததி = அந்தி (மாலை) + தரு (மரம்) இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3767

உதிரிவெடி 3767 (ஆகஸ்டு 19, 2019) வாஞ்சிநாதன் ********************** மாலையோடு மரம் ஆடுவதை அம்மியை மிதித்த பின் காணலாம் (5)   Loading...

விடை 3766

இன்று காலை வெளியான புதிர்: கற்க கல்வி இடை எடை அறிய உதவும் (5) அதற்கான விடை:  படிக்கல் = படிக்க + (க) ல் (வி) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைப் பார்க்க   இங்கே செல்லவும்.

விடை 3765

இன்று காலை வெளியான புதிர்: வேலையில்லாப் பட்டாணி இருக்குமிடம் எது? அது நெருங்க முடியாது (4)   அதற்கான விடை:  எட்டாது = எது + (ப) ட்டா (ணி) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைப் பார்க்க   இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3765

உதிரிவெடி 3765 (ஆகஸ்டு 17, 2019) வாஞ்சிநாதன் ********************** வேலையில்லாப் பட்டாணி இருக்குமிடம் எது?  நெருங்க முடியாது (4) Loading...

விடை 3764

இன்று காலை வெளியான புதிர்: உடைந்து  பின்பற்றி நுழைந்து முன்செல் (4) அதற்கான விடை:  முறிந்து = முந்து (முன்செல்)  + றி (பின்பற்றி) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைப் பார்க்க    இங்கே செல்லவும்.

விடை 3763

இன்று காலை வெளியான புதிர்: உள்ளே நுழைந்து துளி ரவிக்கை கணிகையைச் சூழ்ந்த பைத்தியம் (6) அதற்கான விடை:   பிரவேசித்து = பித்து + ர + வேசி இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக்  காண இப்பக்கத்திற்குச் செல்லவும். 

உதிரிவெடி 3763

உதிரிவெடி 3763 (ஆகஸ்டு 15, 2019) வாஞ்சிநாதன் ********************** உள்ளே நுழைந்து துளி ரவிக்கை கணிகையைச் சூழ்ந்த பைத்தியம் (6) Loading...

விடை 3762

இன்று காலை வெளியான புதிர்: அழகி இடை விட்டு அளித்து  வளை (3) அதற்கான விடை:  வங்கி = வழங்கி (அளித்து)  - ழ இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைப் பார்க்க    இங்கே செல்லவும்.

விடை 3761

இன்று காலை வெளியான புதிர்: இரண்டாம் வெளியீடு, கணவனே வெளியேறு, இல்லை இல்லை (4)   அதற்கான விடை:  மறுப்பு = மறுபதிப்பு - பதி இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைப் பார்க்க   இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3761

உதிரிவெடி 3761 (ஆகஸ்டு 13, 2019) வாஞ்சிநாதன் **********************   இரண்டாம் வெளியீடு, கணவனே வெளியேறு, இல்லை இல்லை (4) Loading...

விடை 3760

இன்று காலை வெளியான புதிர்: கரிப்பானது விளையுமிடம் பெருக்க வெள்ளம் பாதி வடிந்தது (5) அதற்கான விடை:  உப்பளம் = உப்ப + (வெள்) ளம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை அறிந்துகொள்ள  இந்த சுட்டியைச் சொடுக்கவும்.

உதிரிவெடி 3760

உதிரிவெடி 3760 (ஆகஸ்டு 12, 2019) வாஞ்சிநாதன் ********************** கரிப்பானது விளையுமிடம் பெருக்க வெள்ளம் பாதி வடிந்தது (5) Loading...

விடை 3759

இன்று காலை வெளியான புதிர்: மாற்று, மஞ்சத்திற்குச் செல், நாட்டத்துடன் வேலைசெய் (4)   அதற்கான விடை:    ஈடுபடு ; ஈடு = மாற்று; ( விடுமுறையில்  இருக்கும் அதிகாரிக்கு  மாற்றாக இவர் வந்திருக்கிறார் ). இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை அறிந்துகொள்ள  இந்த சுட்டியைச் சொடுக்கவும்.

உதிரிவெடி 3759

உதிரிவெடி 3759 (ஆகஸ்டு 11, 2019) வாஞ்சிநாதன் **********************   மாற்று, மஞ்சத்திற்குச் செல், நாட்டத்துடன் வேலைசெய் (4) Loading...

விடை 3758

இன்று காலை வெளியான புதிர்: பழம் பாலை இறுதியாகச் சேர்த்ததால் உண்டான உபாதை (3) அதற்கான விடை:   தொல்லை = தொல் + (பா) லை; (தொல்பொருளாய்வு = பழங்காலத்தியப் பொருள்களை பற்றிய ஆய்வு) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை அறிந்துகொள்ள  இந்த சுட்டியைச் சொடுக்கவும்.

உதிரிவெடி 3758

உதிரிவெடி 3758 (ஆகஸ்டு 10, 2019) வாஞ்சிநாதன் **********************     பழம் பாலை இறுதியாகச் சேர்த்ததால் உண்டான உபாதை (3) Loading...

விடை 3757

இன்று காலை வெளியான புதிர்: இருட்டத் தொடங்கிய பின் சூறைக்காற்று சுழலும் தன்மை (4) அதற்கான விடை:   இயல்பு = இ(ருட்ட) + புயல்  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை அறிந்துகொள்ள  இந்த சுட்டியைச் சொடுக்கவும்.

உதிரிவெடி 3757

உதிரிவெடி 3757 (ஆகஸ்டு 9, 2019) வாஞ்சிநாதன் ********************** இருட்டத் தொடங்கிய பின் சூறைக்காற்று சுழலும் தன்மை (4) Loading...

விடை 3756

இன்று காலை வெளியான புதிர்: அழைப்பின்றி தர்க்கம் விளைவித்த முறை (3) அதற்கான விடை:  விதம் =  விவாதம் - வா விதம் = முறை (அவர் சொல்லித்  தந்த  விதத்தில் தேங்காயை உடைப்பது எளிதாக இருந்தது) இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

விடை 3755

இன்று காலை வெளியான புதிர்: காணிக்கை செலுத்துமிடம் பட்டியலில் இரண்டை நீக்கும் முன்பே சாப்பிடு (5) அதற்கான விடை:  உண்டியல் = உண் + (பட்) டியல் இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3755

உதிரிவெடி 3755 (ஆகஸ்டு 7, 2019) வாஞ்சிநாதன் **********************   காணிக்கை செலுத்துமிடம் பட்டியலில் இரண்டை நீக்கும் முன்பே சாப்பிடு (5) Loading...

விடை 3754

இன்று காலை வெளியான புதிர்: வரவழைத்து மரத்துடன் விதையைப் போடு (5) அதற்கான விடை: தருவித்து = தரு + வித்து இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

விடை 3753

இன்று காலை வெளியான புதிர்: நண்டு கால் சிக்கிய நீர்ப்பறவை தாக்குவதற்கு கூரிய முனை கொண்ட உறுப்பு  (4) அதற்கான விடை:  கொடுக்கு = கொக்கு + டு இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3753

உதிரிவெடி 3753 (ஆகஸ்டு 5, 2019) வாஞ்சிநாதன் ********************** நண்டு கால் சிக்கிய நீர்ப்பறவை தாக்குவதற்கு கூரிய முனை கொண்ட உறுப்பு (4) Loading...

விடை 3752

இன்று காலை வெளியான புதிர்: ஒரு நட்சத்திரம் வா உள்ளே என்று தேனீக்களை இழுக்கும் (4) அதற்கான விடை:  பூவாசம் =  பூசம் + வா இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3752

உதிரிவெடி 3752 (ஆகஸ்டு 4, 2019) வாஞ்சிநாதன் **********************   ஒரு நட்சத்திரம் வா உள்ளே என்று தேனீக்களை இழுக்கும் (4) Loading...

Solution to Kyrypton 154

Today's clue: Disgusting to be among the dead reptile's initial expression of amusement (8) Its solution:  LAUGHTER = UGH (disgusting) in LATE (dead)  R (eptile) To see the list of answers submitted for this clue visit this page.

விடை 3751

இன்று காலை வெளியான புதிர்: உள்ளுக்குள் சுவர் உள்ளுக்குள் சீனர் ஒழுங்கில்லை (4) அதற்கான விடை:   மனதில் ; சீர் = ஒழுங்கு; சுவர் = மதில்; சீரில்லாச் சீனர் மதில் உள்ளே  வர,  மனதில் (=உள்ளுக்குள்). இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம். சீரான ஆங்காங்கை சீனா அடக்கிடவே நேராகக் கைக்கொளுஞ் சட்டமாம் -- போராடி வீழ்ந்திடாமல் நாள்தோறும் வீறுகொண்ட மாந்தரவர்   சூழ்ந்ததால் சாயும் சுவர்.

உதிரிவெடி 3751

உதிரிவெடி 3751 (ஆகஸ்டு 3, 2019) வாஞ்சிநாதன் ********************** உள்ளுக்குள் சுவர் உள்ளுக்குள் சீனர் ஒழுங்கில்லை (4) Loading...

விடை 3750

இன்று காலை வெளியான புதிர்: சந்தேகம் நீக்கி முன்னிலை போக்கி கலந்து ஒன்றிய நிலை (5) அதற்கான விடை:    ஐக்கியம் = ஐயம் + நீக்கி - நீ இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3750

உதிரிவெடி 3750 (ஆகஸ்டு 2, 2019) வாஞ்சிநாதன் **********************   சந்தேகம் நீக்கி முன்னிலை போக்கி கலந்து ஒன்றிய நிலை (5)   Loading...

விடை 3749

இன்று காலை வெளியான புதிர்: எங்கேயும் செல்ல வேண்டாம் முதலில் புறப்படுவது ஓர் உலோகம் (4) அதற்கான விடை:  இரும்பு   = இரும் + பு(றப்படுவது) இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3749

உதிரிவெடி 3749 (ஆகஸ்டு 1, 2019) வாஞ்சிநாதன் ********************** எங்கேயும் செல்ல வேண்டாம் முதலில் புறப்படுவது ஓர் உலோகம் (4) Loading...