Skip to main content

Posts

Showing posts from June, 2019

Solution to Krypton 145

Solution to Krypton 145 Today's clue: A Tamil king opposed to be in conflict ran after the objective  (9) Its solution:   RAJENDRAN = jar (to be in conflict) + end + ran   Had writer Kalki  lived a few more years my guess is he would have written another historic  novel  on this Chola king. Though Kalki's famous novel Ponniyin Selvan about  Rajajraja Colan, Kalki had more admiration for Rajendran. (Kalki named his son after him. ) It is unfortunate he  died at the age of 55 and we are deprived of many such works. Here is the list of solutions submitted for this clue.

விடை 3717

இன்று காலை வெளியான  வெடி சேனையுள்ளே யானை வெளியேறிய பின்னாடி இயற்கையான வடிகட்டி (4) இதற்கான விடை: பன்னாடை = படை + பின்னாடி - பிடி (image from https://ta.wiktionary.org/) தென்னையில் மரத்தோடு குலைக்கருகில் துணிபோல்  ஒட்டிக்கொண்டிருப்பது பன்னாடை.    இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3717

உதிரிவெடி 3717 (ஜூன் 30, 2019) வாஞ்சிநாதன் ************************* சேனையுள்ளே யானை வெளியேறிய பின்னாடி இயற்கையான வடிகட்டி (4) Loading...

விடை 3716

இன்று காலை வெளியான  வெடி பற்றி தாக்கு இறுதியாக வெற்றி வசப்படும் (4) இதற்கான விடை: குறித்து = குத்து + (வெற்) றி இதன் மூலம் சகலருக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் வெற்றி பெறுவதற்கு நேராக வந்து ஆளைப் பற்றிக் கொண்டு  தாக்க வேண்டுமென்பதாம். வாலியை ராமன் கொன்றது போல்  தூரத்திலிருந்து ஆயுதங்களை ஏவித் தாக்குவது கூடாது என்பதாம். அமெரிக்க நாட்டினர் ட்ரோன் கொண்டு ஈரானருக்கே பறந்தபோது 225 மில்லியன் டாலர் நட்டமடைந்ததும் இப்புதிரின் யோசனையை ஏற்காததாலே என்றறியவும்.   இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.

Solution to Krypton 144

Today's clue  Somehow marry and have sex outside to divide unfairly (11) Disclaimer:  This clue is not be taken as recommending adultery! Its solution: GERRYMANDER = Marry inside GENDER  Gerrymandering has been in the news as the Supreme Court of USA delivered a controversial ruling yesterday. Here is the list of submitted solutions.

விடை 3715

இன்று காலை வெளியான  வெடி ஏகாம்பரனிருக்குமிடத்தில் அவர் தலை காட்டாமல் கவனத்தை ஈர்க்கும் அழகு (5) இதற்கான விடை: கவர்ச்சி = கச்சி + (அ)வர் இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3715

உதிரிவெடி 3715 (ஜூன் 28, 2019) வாஞ்சிநாதன் *************************  ஏகாம்பரனிருக்குமிடத்தில் அவர் தலை காட்டாமல் கவனத்தை ஈர்க்கும் அழகு (5) Loading...

விடை 3714

இன்று காலை வெளியான  வெடி பாகப்பிரிவினையில் கிடைத்தது சாலையில் புழுதியைத்தான் தரும் (3) இதற்கான விடை: கப்பி = பா கப்பி ரிவினை இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3714

உதிரிவெடி 3714  (ஜூன் 27, 2019) வாஞ்சிநாதன் *************************   பாகப்பிரிவினையில் கிடைத்தது சாலையில் புழுதியைத்தான் தரும் (3)   Loading...

விடை 3713

இன்று காலை வெளியான  வெடி பட்டு பனுவல் பாதி  புரட்டி வேகவைத்து வெளியே வை (6) இதற்கான விடை: அனுபவித்து = பனு + அவித்து பல கஷ்டங்கள் பட்டு  ஆஆஆஆஆறு எழுத்து கொண்ட சொல்லைத் தேடிக் கண்டுபிடித்து உருவாக்கிய  வெடிக்கு எளிதாக விடையைக் கண்டவர்களின்  பட்டியலை இங்கே சென்று காணலாம்.

உதிரிவெடி 3713

உதிரிவெடி 3713 (ஜூன் 26, 2019) வாஞ்சிநாதன் *********************** பட்டு பனுவல் பாதி  புரட்டி வேகவைத்து வெளியே வை (6) Loading...

விடை 3712

இன்று காலை வெளியான  வெடி ஒரு நொடியில் களையெடுத்த ஆணை சேவைக்கு செலுத்த வேண்டியது (5) இதற்கான விடை : கட்டணம் = கணம் + கட்டளை - களை வயல்களில் கூலி வேலை செய்ய சில எழுதப்படாத வரையறைகள்  (எந்திரங்கள் வரும் முன்னராவது) கிராமத்து சமூகங்களில் நடைமுறையில் இருக்கின்றன. ஏர் உழுவது, அறுவடை செய்வது இதெல்லாம் ஆண்கள். களையெடுப்பது பெண்கள். இன்றைய புதிரில்  அதை மாற்றி களையெடுப்பதற்கு ஆணை அனுப்பிவிட்டோம்! இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3712

உதிரிவெடி 3712 (ஜூன் 25, 2019)  வாஞ்சிநாதன்  **********************   ஒரு நொடியில் களையெடுத்த ஆணை சேவைக்கு செலுத்த வேண்டியது (5) Loading...

விடை 3711

இன்று காலை வெளியான  வெடி குளத்தில் இருக்கும் கடல் ஊடுருவிய பகுதியில்  அண்டா விளிம்பு உடைந்து சிதைந்தது  (3) இதற்கான விடை : குவளை (அல்லிப்பூ) =  வளைகுடா - டா (வளைகுடா = கடல் ஊடுருவிய பகுதி) இக்கோடையில் மே மாதம் முழுவதும் சென்னை வெயிலை அனுபவித்த பிறகு ஜூன் மாதம் பிறந்ததிலிருந்து  இது வரை ஜெர்மனி தேசத்தின் பெர்லின் நகரில் இருந்துவிட்டு  இன்று திரும்பி வந்தேன்.  இத்தனை நாட்கள் பெர்லினில் அண்டா அளவு தண்ணீரில்  குளித்துவிட்டு கடல் தாண்டி வளைகுடா நாடுகள் மேல் பறந்து  மீண்டும் சென்னைக்கு  வந்த பின் சிக்கனமாக ஒரு குவளை நீரில் குளித்து விட்டேன்! (இப்படம் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது) தண்டின்மேல் அல்லி குளம்விரிய  தான்சிரிக்கும் பெண்டிரின்  பிச்சிப்பூ கூந்தலில்  வண்டுறையும் கொண்டாடி என்வெண்பா  கொப்பளிக்க,  நீராட அண்டா அளவின்றேல் என்? (பிச்சிப்பூ = ஜாதி மல்லிகை) தமிழ்நாட்டுக்கு வந் தா ச்சு! வெண்பாவும் திரும்பி வந்திடுச்சு!! இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3711

உதிரிவெடி 3711 (ஜூன் 24, 2019) வாஞ்சிநாதன் ********************** குளத்தில் இருக்கும் கடல் ஊடுருவிய பகுதியில்  அண்டா விளிம்பு உடைந்து சிதைந் த து  (3) Loading...

Solution to Krypton 143

Today's clue No professional  found in any tr am at Eur ope  (7) Its solution; AMATEUR The list of solutions received for this clue today is found here. Here are the  trams at the city of  Prague that provoked this clue!  

விடை 3710

இன்று காலை வெளியான  வெடி கட்டிடத்தைத் தாங்குவது வீட்டில் பாதி புழு அங்கே துடித்துக் கொண்டிருக்கும் (4) இதற்கான விடை:  தூண்டில் = தூண் + (வீட்) டில்    இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3710

உதிரிவெடி 3710 (ஜூன் 23, 2019) வாஞ்சிநாதன் ********************** கட்டிடத்தைத் தாங்குவது வீட்டில் பாதி புழு அங்கே துடித்துக் கொண்டிருக்கும் (4) Loading...

விடை 3709

இன்று காலை வெளியான  வெடி பாதி கம்பம் சுற்றி வர ஏற்ற  பரிசு (5) இதற்கான விடை: பதக்கம் = பம் + தக்க இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

விடை 3708

இன்று காலை வெளியான வெடி கோபப்பட்டுக் கொட்டு  நடுக் காடு புகுந்தது (4) இதற்கான விடை: சினந்து = சிந்து + (வ) ன (ம்)  இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3708

உதிரிவெடி 3708 (ஜூன் 21, 2019) வாஞ்சிநாதன் ********************   கோபப்பட்டுக் கொட் டு நடுக் காடு புகுந்தது (4) Loading...

விடை 3707

இன்று காலை வெளியான  வெடி அப்பா பர்மாவைப் பிடித்தபோது டில்லியைக் கைப்பற்றியவன் (3) இதற்கான விடை:  பாபர் இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3707

உதிரிவெடி 3707 (ஜூன் 20, 2019) வாஞ்சிநாதன் ******************** அப்பா பர்மாவைப் பிடித்தபோது டில்லியைக் கைப்பற்றியவன் (3)   Loading...

விடை 3706

இன்று காலை வெளியான  வெடி நினைவில் வைத்துக் கொள்ளாதவர்கள் நடத்தும் வீரமான போராட்டம் ? (5) இதற்கான விடை:   மறப்போர் = மறம்  + போர் . போர் என்ற சொல் விடையில் வரும்போது 'போராட்டம்' என்ற சொல் புதிரில் வைத்தது சரியில்லை என்று தாமதமாக எனக்கு ஞானோதயம் வந்தது. இரண்டாம் உலகப்போர், ஜெர்மனி பற்றி திரைப்படங்கள் பார்த்ததால் போர் பற்றி புதிரமைக்க வேண்டும் என்று முன்தீர்மானம் செய்து இதை கவனிக்கவில்லை. இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3706

உதிரிவெடி 3706 (ஜூன் 19, 2019) வாஞ்சிநாதன் ********************* நினைவில் வைத்துக் கொள்ளாதவர்கள் நடத்தும் வீரமான போராட்டம் ? (5) Loading...

விடை 3705

இன்று காலை வெளியான  வெடி நிலை கோத்த தச்சர் இறுதியாகக் கோத்த நெல்மணிகள்  (3) இதற்கான விடை:  கதிர் = கதி + (தச்ச) ர் இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகர்ளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3705

உதிரிவெடி 3705 (ஜூன் 18, 2019) வாஞ்சிநாதன் *********************   நிலை கோத்த தச்சர் இறுதியாகக் கோத்த நெல்மணிகள்  (3)  Loading...

விடை 3704

இன்று காலை வெளியான  வெடி சக்திக்கு உட்பட்டது  தந்து கலைத்து முன் தலையில் இருப்பது (5) இதற்கான விடை: முடிந்தது = முடி + தந்து இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம் https://docs.google.com/spreadsheets/d/1JFNSBmiNxwLCL7qCC4mU2x-jgzNuxVaiCcVpvH-Ru3I/edit?usp=sharing

உதிரிவெடி 3704

 உதிரிவெடி 3704 (ஜூன் 17, 2019) வாஞ்சிநாதன் **********************   சக்திக்கு உட்பட்டது  தந்து கலைத்து முன் தலையில் இருப்பது  (5) Loading...

விடை 3703

இன்று காலை வெளியான  வெடி ஒரு ராகம் கீதம் ரகசியமாய் வாசிக்கும் தொடக்கங்களுடன் முடிக்கும் பாணி (4) இதற்கான விடை:  கீரவாணி =  கீ தம் ர கசியமாய் வா சிக்கும்... பா ணி இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

Solution to Krypton 141

Today's clue: Following success the French author finally was a struggler autobiographically (6) Its solution: HITLER =  HIT + LE + R (Hitler's autobiography was titled Mein Kampf, meaning "My Struggle") To see the list of all the solutions submitted for this clue visit this page .

உதிரிவெடி 3703

உதிரிவெடி 3703 (ஜூன் 16, 2019) வாஞ்சிநாதன் ********************  ஒரு ராகம் கீதம் ரகசியமாய் வாசிக்கும் தொடக்கங்களுடன் முடிக்கும் பாணி (4) Loading...

விடை 3702

இன்று காலை வெளியிடப்பட்ட வெடி சிரி, எமன் தலையை வாங்கிவிட்டான் சல்லியனின் உறவினன் (4)   இதற்கான விடை:  நகுலன் = நகு + (கா) லன்   இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3702

உதிரிவெடி 3702 (ஜூன் 15, 2019) வாஞ்சிநாதன் ******************** சிரி, எமன் தலையை வாங்கிவிட்டான் சல்லியனின் உறவினன் (4)  Loading...

விடை 3701

இன்று காலை வெளியிடப்பட்ட வெடி இசை கட்டிலுக்குத் துணையாக வர அழைக்கிறது (5) இதற்கான விடை: உடன்படு இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.

உதிரிவெடி 3701

உதிரிவெடி 3701 (ஜூன் 14, 2019) வாஞ்சிநாதன் *********************       இசை கட்டிலுக்குத் துணையாக வர அழைக்கிறது (5) Loading...

விடை 3700

இன்று காலை வெளியான  வெடி  ஒரு ஞானி மண்டிக் கிடக்கும் செடிகளில்  தொடக்கமில்லாமல் ஆத்தி சூடினார் (4) இதற்கான விடை: புத்தர் = புதர் + ஆத்தி  - ஆதி (தொடக்கம்) இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே   காணலாம்

உதிரிவெடி 3700

உதிரிவெடி 3700 (ஜூன் 13, 2019) வாஞ்சிநாதன் ******************** ஒரு ஞானி மண்டிக் கிடக்கும் செடிகளில் தொடக்கமில்லாமல் ஆத்தி சூடினார் (4) Loading...

விடை 3699

இன்று காலை வெளியிடப்பட்ட வெடி குண்டான பாம்பு தீண்ட புழுவால் மறைந்தது (4) இதற்கான விடை:  கொழுத்த = கொத்த (பாம்பு தீண்ட) + ழு  (புழுவின் வால்) இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3699

உதிரிவெடி 3699 (ஜூன் 12, 2019) வாஞ்சிநாதன் ***************** குண்டான  புழுவால் மறைந்த பாம்பு தீண்ட வரும்   (4) Loading...

விடை 3698

இன்று காலை வெளியான  வெடி அது உள்ளே இருப்பது அதிக எடையுள்ளதா? பாராட்டப்படவேண்டியது  (6) இதற்கான விடை: அபாரமானது = அது + பாரமான ஆனாலும் இன்றைய புதிர் பாராட்டும்படியாக இல்லை. முதலில் 5 எழுத்து என்று 10 மணி வரை தவறாகவே இருந்துவிட்டது. அதனால் சிலர் அபாரமான என்ற விடை அளிக்கும்படி ஆகியிருக்கும். நாளையிலிருந்து சரியாகி விடும். குறிப்பு: கோடை விடுமுறையில் அதிகம் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதாலும் சரியான நேரத்தில் எல்லாம் வரும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன்.  எப்போதாவது அது தவறலாம்.அப்படித்தான் தவறைத் திருத்த இன்று 10 மணி ஆகிவிட்டது. பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3698

உதிரிவெடி 3698 (ஜூன் 11, 2019) வாஞ்சிநாதன்  ******************** அது உள்ளே இருப்பது அதிக எடையுள்ளதா? பாராட்டப்படவேண்டியது  (6) Loading...

விடை 3697

இன்று காலை வெளியான  வெடி ஏகப்பட்ட பேர்  ஓர்  ஆவணத்துடன்  தலை முழுக  குளம் (5) இதற்கான விடை:  பட்டாளம்   =  பட்டா + (கு) ளம் இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3697

உதிரிவெடி 3697 (ஜூன் 10, 2019) வாஞ்சிநாதன் ******************* ஏகப்பட்ட பேர்  ஓர் ஆவணத்துடன் தலை முழுக  குளம் (5)   Loading...

விடை 3696

இன்று காலை வெளியிடப்பட்ட வெடி:   அணி திரண்டு  கடைசியாக மசாலாவில் பயன்படுத்துவது  (3) இதற்கான விடை: பூண்டு = பூண் +  (திரண்) டு  இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

Solution to Krypton 139

Today's clue: Seizure of software about a fowl to commit an offense trapping donor ? (12) Its solution: APPREHENSION = App + re + hen + sin + o The list of submitted solutions is available here. Let us meet here next Saturday.

உதிரிவெடி 3696

  உதிரிவெடி 3696 (ஜூன் 9, 2019) வாஞ்சிநாதன் ********************  அணி திரண்டு  கடைசியாக மசாலாவில் பயன்படுத்துவது  (3) Loading...

விடை 3695

இன்று காலை வெளியான  வெடி படகு  கவிழ்ந்த ஓரிடம்  மெய் வெளிப்பட்ட செயல் (4) இதற்கான விடை:   காரியம்   = ஓரிடம் - ஓடம் +  காயம் (மெய்) இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.

உதிரிவெடி 3695

உதிரிவெடி 3695 (ஜூன் 8, 2019) வாஞ்சிநாதன் *******************  படகு  கவிழ்ந்த ஓரிடம்  மெய் வெளிப்பட்ட செயல் (4) Loading...

விடை 3694

இன்று காலை வெளியான  வெடி வேலையை நிறைவேற்றி ஒரு  மணியில் கடைசி வண்டி பிடிக்க  வேண்டும் (4) இதற்கான விடை:     முடித்து         இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3694

உதிரிவெடி 3694 (ஜூன் 7, 2019) வாஞ்சிநாதன் ******************* வேலையை நிறைவேற்றி ஒரு  மணியில் கடைசி வண்டி பிடிக்க  வேண்டும்   (4) Loading...

விடை 3693

இன்று காலை வெளியிடப்பட்ட வெடி பின்பக்கம் குலுங்க  குப்புற தும்மு (7) இதற்கான விடை:   முதுகுப்புறம் இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம். இன்றைய புதிரால் சிரித்து சிரித்து முன்பக்கம் வயிறு குலுங்கி  எடை குறைந்தவர்கள் எடைக்குறைப்பு செலவில் மிச்சமான தொகையை எனக்கு அனுப்பி வைத்துவிடவும்.   

உதிரிவெடி 3693

உதிரிவெடி 3693 ( ஜூன் 6, 2019) வாஞ்சிநாதன்  ********************* பின்பக்கம் குலுங்க  குப்புற தும்மு (7)  Loading...

விடை 3692

இன்று காலை வெளியிடப்பட்ட வெடி தலை மறையும்  ஆழம் திணற கதிகலங்கி பெருங்குரலில்  பேச்சு (5) இதற்கான விடை :   முழக்கம்   = (ஆ) ழம் + முக்க இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.

உதிரிவெடி 3692

உதிரிவெடி 3692 (ஜூன்  5, 2019) வாஞ்சிநாதன்  **************** தலை மறையும்  ஆழம் திணற கதிகலங்கி பெருங்குரலில்  பேச்சு (5) Loading...

விடை 3691

இன்று காலை வெளியான வெடி : வெகுளியிடம் பூக்களை பாதி குறைத்துப் பயன்படுத்தும் போக்கு (5) இதற்கான  விடை :  சிக்கனம்  = சினம்  (வெகுளி)  +  க்க இப்புதிருக்கு அனுப்பப்படட விடைகளைக் காண  இங்கே செல்லவும் .

உதிரிவெடி 3691

உதிரிவெடி 3691 (ஜூன் 4, 2019) வாஞ்சிநாதன்   ******************* வெகுளியிடம் பூக்களை பாதி குறைத்துப் பயன்படுத்தும் போக்கு (5) Loading...

விடை 3690

இன்று காலை வெளியிடப்பட்ட வெடி: குறைவான எண்ணிக்கையுள்ள  பந்தில் பல்லுடைக்க வலையாளி (4) இதற்கான விடை:  சிலந்தி = சில +  பந்தில் - பல் இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.

உதிரிவெடி 3690

உதிரிவெடி 3690  (ஜூன் 3, 2019) வாஞ்சிநாதன் *********************                            குறைவான எண்ணிக்கையுள்ள  பந்தில் பல்லுடைக்க வலையாளி (4) Loading...

Solution to Krypton 136 & 137

Saturday's clue: Easy-to-do-job in safe environment (8) Its solution: SINECURE = secure + in   Solutions submitted for this clue is here. ********* Sunday's clue: Defensive manoeuvre by CIA  poet with log (10)  Its solution:  APOLOGETIC  = CIA poet log  Here is the list of answers received for this clue. 

விடை 3689

இன்று காலை வெளியான வெடி: வாசனை குறைந்த கதிரும் அதிர்ந்து இளையராஜாவால் மேற்கத்திய இசையில் வந்தது (6) இதற்கான விடை: திருவாசகம் = வாச (னை)  + கதிரும் இளையராஜாவின் திருவாசக இசைக்கோவையிருந்து ஒன்று  இங்கே  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

Krypton 137

Krypton 137 (2nd June 2019) Vanchinathan *************** Yesterday's puzzle was incomplete without the form for submission. Here is the corrected version.   Defensive manoeuvre by CIA  poet with log (10)  Loading...

உதிரிவெடி 3689

உதிரிவெடி 3689 (ஜூன் 2, 2019) வாஞ்சிநாதன்   *******************   வாசனை குறைந்த கதிரும் அதிர்ந்து இளையராஜாவால் மேற்கத்திய இசையில் வந்தது (6) Loading...

விடை 3688

இன்று காலை வெளியான வெடி: சத்குரு தியானத்திலிருக்கும்போது இறந்தவர்களுக்கு ஓடாதது (3) இதற்கான விடை:  குருதி இன்றைய புதிருக்கு வந்த விடைகளின் தொகுப்பு இங்கே .

உதிரிவெடி 3688

உதிரிவெடி 3688 (ஜூன் 1, 2019) வாஞ்சிநாதன் ******************** சத்குரு தியானத்திலிருக்கும்போது இறந்தவர்களுக்கு ஓடாதது (3) Loading...

Krypton 136 (REVISED)

Krypton 136 ( 1st June, 2019) Vanchinathan **************** [Due to to trvelling, I was posting 3 days posts in advance and I missed including the form for this clue today. So I repeat this with the form.  ] Easy-to-do-job in safe environment (8) Loading...