Skip to main content

Posts

Showing posts from November, 2019

விடை 3885

இன்று காலை வெளியான வெடி: அத்தானை விட்டுவிட்டு  வர மறுக்கும்  கடைசி ஆட்டமும்  வராகனும் ஒன்று  (5) அதற்கான விடை:  அவதாரம் = அதா + வர  + ம் வராகன் = திருமாலின் (பத்து) அவதாரங்களில் ஒன்று அதா = அத்தானை (விட்டுவிட்டு) வர ம்  = மறுக்கும் கடைசி இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட  விடைகளின் பட்டியல் இங்கே.

Krypton 188

Krypton 188  (30th November 2019) Vanchinathan ************************   A nonagenarian has gravity in one where there is lack of gravity    (9) Kesavan pointed out a blunder in the above clue (shown as struck off). He also gave a good alternative. I apologize for the confusion I caused and thank Kesavan.  Here comes his version:   A nonegenarian has gravity in one, though lacking energy, in a place lacking gravity (9) Loading...

உதிரிவெடி 3885

உதிரிவெடி 3885 (நவம்பர் 30, 2019) வாஞ்சிநாதன் ******************* அத்தானை விட்டுவிட்டு  வர மறுக்கும்  கடைசி ஆட்டமும்  வராகனும் ஒன்று  (5) Loading…

விடை 3884

இன்று காலை வெளியான வெடி: நிறைவான உடல் இச்சை தொடர்பான உறவில் இறுதியாக ஈடுபட்ட பெண் இப்படி இருப்பாள்! (5) அதற்கான விடை: முழுகாமல் =  முழு  + காம + ல் முழு = நிறைவான காம = உடல் இச்சை தொடர்பான ல் = உறவில் இறுதியாக கருவுற்ற பெண்களை முழுகாமல் இருப்பதாகச் சொல்வது  பேச்சு வழக்கு. புதிரின் முதல் பகுதியை இரு முறை படிக்க வேண்டுமென்பதற்காக  "!" வியப்புக்குறி. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3884

உதிரிவெடி 3884  (நவம்பர் 29,  2019) வாஞ்சிநாதன் ********************  நிறைவான உடல் இச்சை தொடர்பான உறவில் இறுதியாக ஈடுபட்ட பெண் இப்படி இருப்பாள்! (5) Loading…

விடை 3883

இன்று காலை வெளியான வெடி: எங்கேயென்று அலைந்து  நடு இரவு  வந்த இடம் கோவிலுக்கருகில் இருக்கும் (3) அதற்கான விடை:  தேரடி = தேடி + ர சென்ற வருடம்  ராஜேஷ் வைத்யாவின் வீணை இசைக் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். அன்றைய நிகழ்ச்சியில்  கர்நாடக இசையில் அமைந்த திரைப்படப் பாடல்களும் வாசிப்பார் என்று குறிப்பிட்டிருந்ததால்  கொஞ்சம் சங்கீத அறிவையும் வளர்த்துக் கொள்ளலாமென்று ஒரு நப்பாசை.  அன்று பல பாடல்கள் வாசித்தாலும்  ஒரு பாடலை வாசிக்கும் முன்னால்  தனக்குத் தெரிந்து  திரைப்படங்களில் அந்தப் பாடல் மட்டும்தான் அந்த ராகத்தில் அமைந்தது என்று குறிப்பிட்டு  "நிக்கட்டுமா, போகட்டுமா நீலக் கருங்குயிலே" என்று வாசித்தார். வீட்டிற்கு வந்ததும் அப்பாடலை  இணையத்தில் தோண்டிப் பார்த்துக் கேட்டேன்.  அது கிராமத்துப் பாட்டாகத்தான்  தெரிந்தது. நேற்றும் ஒருமுறை அதைக் கேட்டேன். ஒரு சங்கீதமும் ஒரு ராகமும் பிடிபடவில்லை. "தேரடி வீதியிலே..." என்ற வார்த்தை சிக்கி ஒரு புதிர் அகப்பட்டதுதான் மிச்சம். வாசஸ்பதியாவது, வனஸ்பதியாவது ஒன்றும் விளங்கவில்லை. ...

உதிரிவெடி 3873

உதிரிவெடி 3873  (நவம்பர் 28,  2019) வாஞ்சிநாதன் ******************** எங்கேயென்று அலைந்து  நடு இரவு  வந்த இடம் கோவிலுக்கருகில் இருக்கும் (3) Loading…

விடை 3882

இன்று காலை வெளியான வெடி: ஆதி பராசக்தியுடன்  அடிக்க  சிவனும் கடைசியாக வந்ததால் அமைதியற்ற நிலை (5) அதற்கான விடை: பதட்டம் = ப + தட்ட + ம் ப = 'ஆதி' பராசக்தி தட்ட = அடிக்க ம் = சிவனும் கடைசியாக வந்தது இன்று காலையில் பிரசாத் வேணுகோபால் எனக்குத் தனியாகத்  தெரிவித்தது: "பதற்றம்: என்பதுதானே சரியான தமிழ்ச் சொல். இப்புதிரின் மூலம் பிழையான வடிவத்தைத் தவிர்த்து சரியான வடிவத்தை அளிக்கலாமே" என்பது அவருடைய பரிந்துரை.  "பதற்றம்" என்பது சரியான வடிவம் என்றால் அதன்  பேச்சு/கொச்சை வடிவம் "பதட்டம்" என்று கொள்வதா?  ஆனால் அதில் ஒரு சிக்கல் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.   பேச்சுவழக்கில் "ற்ற/ற்றி/ற்று" என்பது "த்த/த்தி/த்து" என்ற வடிவத்தில்தான் வருகிறது. (மஹாராஷ்டிராவில்  அரசு அமைக்க  நேத்து நெத்தியடி வாங்கித்  தோத்தவர்களின் வெத்துப் பேச்சைக் கேட்டால் இது புரியும். ) அதனால் பதட்டம் என்பது பதற்றத்திற்கு  ஓர் இலக்கிய அந்தஸ்துள்ள மாற்றுவடிவம் என்று கொள்ளலாம். கொச்சை வடிவமாக இருக்க முடியாது என்பது என் வாதம்.  சரிதானா? இவ்வெடிக்கு அனுப்...

உதிரிவெடி 3882

உதிரிவெடி 3882 (நவம்பர் 27, 2019) வாஞ்சிநாதன் **********************   ஆதி பராசக்தியுடன்  அடிக்க  சிவனும் கடைசியாக வந்ததால் அமைதியற்ற நிலை (5) Loading…

விடை 3881

இன்று காலை வெளியான வெடி: எஜமான் முன்னே மிகுதி சுழியெடுத்து முந்தி இடையுடன் வர ஆலோசனை (5) அதற்கான விடை: பரிந்துரை = பரி + ந் + துரை; பரி = உபரி (மிகுதி)  - உ ந் = முந்தி இடை எஜமான் = துரை இதற்கு அனுப்பப்பட்ட விடைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3881

உதிரிவெடி 3881 (நவம்பர் 26, 2019) வாஞ்சிநாதன் ******************* எஜமான் முன்னே மிகுதி சுழியெடுத்து முந்தி இடையுடன் வர ஆலோசனை (5)   Loading…

விடை 3880

இன்றைய வெடி: வாகனங்களை இயக்கப் பயன்படும்   ஒரு எண்ணெய் வித்து ஐந்து பொரி கலவை (5)  அதற்கான விடை: எரிபொருள்   = எள் + ரு + பொரி எள் = ஒரு எண்ணெய் வித்து ரு = எண் 5 இன் தமிழ் எழுத்து வடிவம்.  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்றால் காணலாம். Play this.

உதிரிவெடி 3880

உதிரிவெடி 3880 (நவம்பர் 25, 2019) வாஞ்சிநாதன் ******************** வாகனங்களை இயக்கப் பயன்படும்   ஒரு எண்ணெய் வித்து ஐந்து பொரி கலவை (5)  Loading…

விடை 3879

இன்று காலை வெளியான வெடி: வீணைக்காரி ஸ்வர பேதம் மறைத்த மனைவி  (5) அதற்கான விடை: சரஸ்வதி = சதி (மனைவி)  + ஸ்வர விடைகளைக் காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.

Solution to Krypton 187

Today's clue: Deviate from the straight direction then another,  veer off course (6) Its solution:  SWERVE = SW for directions and VEER rearranged. It is a delightful coincidence  that though  VEER appears in the clue not for the meaning,  its meaning is close to swerve! Click here to see the list of solutions submitted today.

விடை 3878

இன்று காலை வெளியான வெடி: பூச்சிக் கடியின் விளைவு கொஞ்சம் ஓடி ஒளிந்து  பிழை  (4) அதற்கான விடை:  தடிப்பு = தப்பு (பிழை) + டி ('கொஞ்சம்' ஓடி) ( புதிர் வாக்கியத்தை மாற்றி எழுத வெட்டி ஒட்ட முயன்ற போது "கொஞ்சம்" என்ற சொல் ஒட்டிக் கொள்ளாமல் கொஞ்சநேரம் ஓடி ஒளிந்திருந்தது.15 மிடங்கள் கழித்துதான் திருத்தினேன்.) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே;

உதிரிவெடி 3878

உதிரிவெடி 3878 (நவம்பர் 23, 2019) வாஞ்சிநாதன் ****************** பூச்சிக் கடியின் விளைவு கொஞ்சம் ஓடி ஒளிந்து  பிழை  (4) Loading…

விடை 3877

இன்று காலை வெளிவந்த வெடி: கட்டி உருட்டி கடைசியாக நுழைந்து முன்னே செல் (4) அதற்கான விடை:  முடிந்து   = முந்து (முன்னே செல்)  + டி (உருட்டியின் கடைசி எழுத்து) கூந்தலைக் கட்டுவது = கூந்தலை முடிந்து கொள்வது . இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைப் பார்க்க இங்கே செல்லவும்.

விடை 3876

ஒரு பழைய சொல் விளையாட்டு இருக்கிறது. முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்! ஆற்றுப் பக்கம்  சென்ற போது ஐந்து முட்கள் கொண்ட நெருஞ்சியின் காய் குத்தியது என்பதைத்தான் ஒரு புலவர் அப்படிச் சொன்னாராம்.   அதைக் கேட்ட மற்றொரு புலவர் கூறிய பதில்: "பத்துரதன் புத்திரனின் சத்துருவின் பத்தினியின் பெயரில் கால் நீக்கித் தேய் " தசரதனின் மகனான ராமனின்  எதிரியான  வாலியின் மனைவியின் தாரை என்ற பெயரில் காலை எடுத்து,  தரையில், தேய்த்தால் முள் குத்திய இடம் சரியாகி விடும்! அப்படிப்பட்ட பிரபலமான நெருஞ்சி உதிரிவெடியில் முதன்முதலாக இடம்பெற்றதைப் பலரும் திரளாக வந்து கலந்து கொண்டு சரியான விடையளித்துள்ளீர்கள். இம்முள்ளின் படம்:  செடியில் இருக்கும் படம்: இன்றைய  வெடி: நெருஞ்சியில் இருப்பதை அருளில்லாத வட்டாரத்திற்கு வெளியே வைத்த  அறிவில்லாதவன்(4) இதற்கான விடை:  முட்டாள் = முள் (நெருஞ்சிச் செடியில் இருப்பது)    + வட்டாரம்  - வரம் (அருள்) ஒருவரும் தவறான விடையளிக்கவில்லை. அன...

உதிரிவெடி 3876

உதிரிவெடி 3876 (நவம்பர் 21, 2019) வாஞ்சிநாதன் *********************   நெருஞ்சியில் இருப்பதை அருளில்லாத வட்டாரத்திற்கு வெளியே வைத்த  அறிவில்லாதவன் (4) Loading…

விடை 3875

இன்று காலை வெளியான வெடி முன்னால் இருக்கும் மரியாதைக்குரியவர் விலக அவள் கடைசியாக ஒட்டிக் கொண்டாள் (4) அதற்கான விடை: நீங்கள் = நீங்க (விலக)  +  (அவ) ள் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று காணலாம்.

உதிரிவெடி 3875

உதிரிவெடி 3875 (நவம்பர் 20, 2019) வாஞ்சிநாதன் ********************** முன்னால் இருக்கும் மரியாதைக்குரியவர் விலக அவள் கடைசியாக ஒட்டிக் கொண்டாள் (4) Loading…

விடை 3874

இன்று காலை வெளியான வெடி: இணைத்துக் கட்ட மூன்றாம் கண்ணிற்கு வெளியே தெரியாத காரணம் (4) அதற்கான விடை: பின்னணி  = பின்ன  (இணைத்துக் கட்ட)  + ணி (மூன்றாம் 'கண்ணிற்கு') ஒரு நிகழ்சிக்கு வெளியே தெரியாத காரணத்தையும் பின்னணி என்பார்கள். ( உண்மையான பின்னணி தெரிந்தால் மாணவர்களின் போராட்டத்தை விமர்சிக்க மாட்டோம். ) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகள் இங்கே.

உதிரிவெடி 3874

உதிரிவெடி 3874 (நவம்பர் 2019) வாஞ்சிநாதன் **********************  இணைத்துக் கட்ட மூன்றாம் கண்ணிற்கு வெளியே தெரியாத காரணம் (4) Loading…

விடை 3873

இன்றைய வெடி: பல்லில் வைத்து சோகமான  வியாபாரி லாபத்திற்காக செய்யும் அநியாயச் செயல்  (5) அதற்கான விடை:  பதுக்கல் = பல் + துக்க இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3873

உதிரிவெடி 3873 (நவம்பர் 18, 2019) வாஞ்சிநாதன் ********************** பல்லில் வைத்து சோகமான  வியாபாரி லாபத்திற்காக செய்யும் அநியாயச் செயல்  (5) Loading…

Solution to Krypton 185

Today's clue: Keeper, not his brother's keeper,  has doubts, kills first brother  violently  (9) Its solution:  CUSTODIAN CAIN + DOUBTS - B In a biblical story Cain killed his brother Abel and when God  asked about Abel  responded "Am I my brother's keeper?" Here is the list of answers received today.

விடை 3872

இன்று காலை வெளியான வெடி அண்ணனைக் கொன்றவன் தலையைக் கொய்து வெற்றி பெற்றவன் (3) அதற்கான விடை: ஜயன் ; தனது அண்ணனான கர்ணனைக் கொன்றவன் விஜயன்; விஜயன் - வி = ஜயன் இப்புதிருக்கு வந்த விடைகளை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3872

உதிரிவெடி 3872 (நவம்பர் 17, 2017) வாஞ்சிநாதன் ********************* அண்ணனைக் கொன்றவன் தலையைக் கொய்து வெற்றி பெற்றவன் (3) Loading…

விடை 3871

இன்று காலை வெளியான வெடி: கண்ணுக்கும் மேலானது  இளமையைக் கொஞ்சகாலம் இழந்தவன் வம்சம் பாதி போனது (4) இதற்கான விடை: புருவம் = புரு + வம்(சம்) யயாதியின் மகன் புரு. நீண்டநாட்கள் இளமையாக இருக்க வேண்டுமென்று விரும்பிய யயாதிக்கு, புரு தன் இளமையை அளிக்கிறான். இது மகாபாரதக் கதை. (இளமையை  எந்த பாத்திரத்தில் அளந்து கொடுத்தான் என்ற கேள்வியெல்லாம் என்னைக்  கேட்காதீர்கள்) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைன் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3871

உதிரிவெடி 3871 (நவம்பர் 16, 2019) வாஞ்சிநாதன் ******************** கண்ணுக்கும் மேலானது  இளமையைக் கொஞ்சகாலம் இழந்தவன் வம்சம் பாதி போனது (4) Loading...

விடை 3870

இன்று காலை வெளியான வெடி: ஆதி பகவன் ஏற்ற இறக்கம் இறுதி வெற்றிக்குப் பரிசு (5) அதற்கான விடை: பதக்கம் = ப + தக்க + ம் ப = ஆதி பகவன் தக்க = ஏற்ற‌ ம் = இறக்கம் என்ற சொல்லின் இறுதி (எழுத்து) இப்புதிருக்கு அனுப்பப்ப‌பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3870

உதிரிவெடி 3870 (நவம்பர் 15, 2019) வாஞ்சிநாதன் *********************** ஆதி பகவன் ஏற்ற இறக்கம் இறுதி வெற்றிக்குப் பரிசு  (5) Loading...

விடை 3869

இன்று காலை வெளிவந்த வெடி: சிக்கு ஆட்டி இடை வைத்த விலங்கொன்று (3) அதற்கான விடை:  மாட்டு =   மாடு (விலங்கு)  +  (ஆ) ட் (டி) இப்புதிருக்கு விடைகளை அனுப்பியவர்கள் பட்டியல் இங்கே இருக்கிறது.

விடை 3868

இன்று காலை வெளியான வெடி தரையைப் பார்த்தபடி ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருப்பவர் (4) அதற்கான விடை:  குப்புற =  "ஊருக்குப் புறப்பட்டு" என்ற சொற்கள் விடையை உள்ளே கொண்டுள்ளன.  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று காணலாம்.

உதிரிவெடி 3868

உதிரிவெடி 3868 (நவம்பர் 13, 2019) வாஞ்சிநாதன் ************************ தரையைப் பார்த்தபடி ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருப்பவர் (4) Loading...

விடை 3867

இன்றுகாலை வெளியான வெடி: ஒரு வகை  அழும் முறையை விட்டு கோயிலில் வணங்குவது (6) அதற்கான விடை: விக்கிரகம் = விக்கி (அழும் முறை )  + ரகம் (வகை) விட்டு என்றால் நீக்குதல் என்ற பொருள் தவிர சேர்த்தல் என்ற  (எதிரான) பொருளும் உண்டு!   ( பாலில் கொஞ்சம் தேன் விட்டுக் குடித்தால் உடம்புக்கு நல்லது) . வாக்கிய அமைப்பு சீராக இருக்க வேண்டுமென்று  முதலைல் ரகம், பின்னர் அழும் முறை என்று மாற்றிச் சொன்னேன். (பக்தர்கள்) கோவிலில் வணங்குவது விக்கிரகத்தை. இன்றைய புதிருக்கு விடைகளை இப்பக்கம் சென்று காணலாம்.

உதிரிவெடி 3867

உதிரிவெடி 3867 (நவம்பர் 12, 2019) வாஞ்சிநாதன் ******************** ஒரு வகை  அழும் முறையை விட்டு கோயிலில் வணங்குவது (6) Loading...

விடை 3866

இன்று காலை வெளியான வெடி: சண்டை நடக்குமிடத்தில் வீரர்கள் இறுதியாக வீழ செய்யப்பட்ட தந்திரம் ? (4) அதற்கான விடை:  கள்ளம் = களம் + (வீரர்க) ள் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.

உதிரிவெடி 3866

உதிரிவெடி 3866 (நவம்பர் 11, 2019) வாஞ்சிநாதன் ******************** சண்டை நடக்குமிடத்தில் வீரர்கள் இறுதியாக வீழ செய்யப்பட்ட தந்திரம் ? (4) Loading...

Solution to Krypton 183

Today's clue: Leaders of  local  insurgents  like Tom  support for survival  (8) Its solution:   LIFELINE = L I + FELINE  L, I as leading letters of Local & Insurgents. 'LIKE TOM' = Feline The solutions received for this clue are found in this page.

விடை 3865

இன்று காலை வெளியான வெடி: தூக்கத்தின்போது பாதுகாப்பு கொலை விழுந்தபின்  சாதத்திலிட்ட  நிலையானது (5) இதற்கான விடை: சாசுவதம் = சாதம், அதில் 'சுவ' இட வேண்டும் ;  சுவ = கொசுவலை - கொலை (கொசுவலை, தூக்கத்தின்போது பாதுகாப்பு அளிப்பது, திருடர்களிடமிருந்து என்று நான் சொல்லவில்லை!) இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3865

உதிரிவெடி 3865 (நவம்பர் 10, 2019) வாஞ்சிநாதன் ********************** தூக்கத்தின்போது பாதுகாப்பு கொலை விழுந்தபின்  சாதத்திலிட்ட  நிலையானது (5) Loading...

விடை 3864

இன்று காலை வெளியான புதிர்: நூறு வயது போர்வையை உதறி நுழைந்த நட்சத்திரம்  (4)   அதற்கான விடை:  சதயம் = சதம் +  (வ)ய (து ) ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திர தினம் தஞ்சாவூரில் கொண்டாடப்பட்டது என்ற செய்தியைப் படித்தேன். அதைப் புதிராக்கிக்  கொண்டேன். (25 வருடங்களுக்கு  முன்பு  அந்நாளில் தஞ்சையில் விடுமுறை  உண்டு. இப்போது என்னவென்று தெரியவில்லை) இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Solution to Krypton 182

Today's clue: Where  secluded men  wander set on Mary  (9) Its solution: MONASTERY  = anagram of  "set on mary" (An hour after posting the clue  I felt Where secluded are found wandering set on Mary  would be more precise. Already  so me 15  answers had been submitted by then. So I let it stand.)

விடை 3863

இன்று காலை வெளிவந்த வெடி: கொடூரமான வன்செயலில் நிதி  விளையாடி ஆவியாகிவிடும் தருணம் (4) அதற்கான விடை:  கொதிநிலை = கொலை + நிதி இன்றைய புதிருக்கு வந்த விடைகளைக் காண இப்பக்கம் சென்று பாருங்கள்.

உதிரிவெடி 3863

உதிரிவெடி 3863  (நவம்பர் 8, 2019) வாஞ்சிநாதன் ***********************   கொடூரமான வன்செயலில் நிதி  விளையாடி ஆவியாகிவிடும் தருணம் (4) Loading...

விடை 3862

இன்று காலை வெளியான வெடி: மண்டை ஓரத்தை மறைத்த பரு துண்டிப்பு (4) இதற்கான விடை: உடைப்பு = உப்பு (பரு, குண்டாகு)  + (மண்) டை   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

விடை 3861

இன்று காலை வெளியான வெடி: தெய்வாம்சம் கொண்ட குரு,  அவள் உமிழ  விட்டுவிட்டுப் பிடித்துக் கலக்கினார் (5)  ( இது ஒரு போலி சாமியார் பக்தையுடன் செய்த லீலை பற்றியது அல்ல, சும்மா ஒரு தமாஷ் புதிர். அவ்வளவுதான். ) இதற்கான விடை: அருள்மிகு = குரு + அள்மி ( அ வ ள் உ மி ழ ="அவள் உமிழ"  இவற்றில் விட்டுவிட்டு எழுத்துகளைக் கொள்ள)   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

உதிரிவெடி 3861

உதிரிவெடி 3861 (நவம்பர் 6, 2019) வாஞ்சிநாதன் *********************** தெய்வாம்சம் கொண்ட குரு,  அவள் உமிழ  விட்டுவிட்டுப் பிடித்துக் கலக்கினார் (5) Loading...

விடை 3860

இன்று காலை வெளியான வெடி: உதவி செய்பவர் வள்ளல் இல்லை, ஆனால் அவருக்குத் துணையோ? (4) இதற்கான விடை: உபகாரி  = உப + காரி இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

உதிரிவெடி 3860

உதிரிவெடி 3860 (நவம்பர் 5, 2019) வாஞ்சிநாதன் *************************** உதவி செய்பவர் வள்ளல் இல்லை, ஆனால் அவருக்குத் துணையோ? (4) Loading...

விடை 3859

இன்று காலை வெளிவந்த வெடி: மைசூர் ஆண்டவர் முன்பே பல்லவர்களின் ஆரம்ப வெளியீடு  (4) அதற்கான விடை: பதிப்பு  = ப(ல்லவர்)  + திப்பு ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விடையனுப்பி அதில் ஒன்றும் தவறில்லாமல் வந்திருக்கிறது. அனைவருக்கும்  பாராட்டுகள். விடையளித்தோர் விவரத்தைப்  பார்க்க இங்கே சொடுக்கவும்.  

உதிரிவெடி 3859

உதிரிவெடி 3859 (நவம்பர் 4, 2019) வாஞ்சிநாதன் ****************** மைசூர் ஆண்டவர் முன்பே பல்லவர்களின் ஆரம்ப வெளியீடு  (4) Loading...

விடை 3858

இன்று காலை வெளியான வெடி: எடை கூடிய மக்கள் இறுதியாகப் பாடுவது? (3) இதற்கான விடை:  பள்ளு = பளு +  (மக்க) ள் பள்ளு  தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று, எழுதப்படுவது. பாடவும்படும்.   பாரதியாரின் "ஆடுவோமே, பள்ளு பாடுவோமே ..." இப்புதிருக்கு வந்து சேர்ந்த விடைகளின் பட்டியல்.

Solution to Krypton 181 (3rd Nov 2019)

Today's clue: Where races can be seen deep against outside influences (9) Its solution:  SPEEDWAYS  i.e., racetracks.  DEEP reversed,  with SWAYS outside (swaying -= influencing) Congratulations to Sundar Vedantham and MK Raghavan for cracking what, in hindsight,   seems to be a tough one. Here is the list of solutions re ceived.

Solution to Krypton 180

Today's clue: The most important product is silver, be silent,  inside and turn over (8) Its solution: FLAGSHIP = FLIP (turn over) with AG and SH inside Kasturi & Sons has many publications, but THE HINDU is their flagship.   To see the answers sent for this visit this link.

விடை 3857

இன்று காலை வெளியான வெடி: கடைசித் திருவிழா சென்ற படி செய் (3) இதற்கான விடை: ஆக்கு = ஆழாக்கு ‍- ழா படி என்றால் 8 ஆழாக்குதானே, இது எப்படி பொருந்தும் என்று கேள்வி எனக்குத் தனியாக வந்தது. அதற்கு நான் அளித்த அதே பதிலை இப்போது பொதுவில் சொல்லிவிடுகிறேன். வழக்கிலிருக்கும் இரண்டு உதாரண‌ங்களைச் சொன்னாலே போதும்.  " ஆழாக்கு மாதிரி இருந்துகிட்டு அவன் செய்யும் காரியத்தைப் பாரேன் ". " அவர்கள் வீட்டில் இருக்கும் முத்துகளை ப் படியால் அளந்து பங்கு போட்டுக் கொண்டார்களாம் " இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

விடை 3856

இன்று காலை வெளிவந்த வெடி: இரண்டாம் மாறவர்மன்   தாக்கி   வெளியே வந்தவள் வள்ளியாக இருக்கலாம் (4) அதற்கான விடை:  குறத்தி = குத்தி (= தாக்கி)  + ற ( = இரண்டாம் மாறவர்மன்) இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைக் காண இங்கே சொடுக்கவும்.

உதிரிவெடி 3856

 உதிரிவெடி 3856 (நவம்பர் 1, 2019) வாஞ்சிநாதன் ********************** இரண்டாம் மாறவர்மன்   தாக்கி   வெளியே வந்தவள் வள்ளியாக இருக்கலாம் (4) Loading...