நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள் வெள்ளி, நீலம், நெல், மரவள்ளி, கருணை நான் எண்ணிப்பார்க்காத ஆனால் சுவாரசியமான விடைகள் வந்துள்ளன. கருணை என்பது மட்டும் மனதின் உணர்ச்சி மற்றவை பொருள்கள் என்பது ஓரளவுதான் சரி, ஏனென்றால் மொட்டையாக பொருள்கள் என்பது நெருக்கமான தொடர்பைக் காட்டவில்லை. இதே நான்கு சொற்களை இயற்கை வளங்கள் என்று பிணைக்கலாம் அல்லது தவரங்களைச் சார்ந்தவை என்று வெள்ளியை நீக்கி மற்றவற்றைக் கூறலாம். மண்ணுக்குள்ளா அல்லது மேலா என்ற வகையில் நெல் தனித்திருப்பது என்கிறார்கள். என்னுடைய விளக்கம் இதோ: தனித்த சொல் மரவள்ளி . மற்றவை பற்றி: வெள்ளி (சுக்கிரன் என்றும் அழைக்கப்படும்) நவகிரகங்களில் ஒன்று. நீலம் (sapphire), நவரத்தினங்களில் ஒன்று. நெல் நவதானியங்களில் ஒன்றாகவும், கருணை நவரசங்களில் ஒரு ரசம் என்றும் ஒன்பது ஒன்பதாக வகைப்படுத்தப்படுபவையில் ஒன்றாக உள்ளன. மீண்டும் அடுத்த சனிக்கிழமை வேறொரு திரிவெடியில் பார்க்கலாம். புதிதாக வந்துள்ளவர்கள் இன்று உதிரிவெடியையும், க்ரிப்டான் என்ற ஆங்கிலப் புதிரையும் எட்டிப் பாருங்கள். மேலே மூன்றுபட்டையை அழுத்தி பழைய புதிர்களைப் பாருங்கள், ஆன...