Skip to main content

விடை 3733

இன்று   காலை வெளியான  வெடி
சுவரால் மறைக்கப்படாத இடம் மதிப்பு குறைவானதா? தரம் குறைவாது (5)
இதற்கான விடை:  தாழ்வாரம் = தாழ்வா + (த) ரம்
("பிறரை ஏமாற்றிப் பிழைப்பதுதான் தாழ்வு, மூட்டை சுமந்து சம்பாதிப்பதில் தாழ்வில்லை" என்பது போன்ற சொற்றொடர்களில் தாழ்வு என்ற சொல் மதிப்புக் குறைவானது என்ற பொருளிலேயே வருகிறது.)   தாழ்வாரம் வீட்டில் தெருப்புறமாகவோ அல்லது முற்றத்தை அடுத்தோ மூடு சுவரின்றி திறந்தவாறு இருக்கும்.

இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.

*******

நேற்று "பிரதாபம்" என்ற சொல்லைக் கையாண்டு ஞாபகப் படுத்தியதற்கு மகிழ்ச்சியைத்  தெரிவித்து  மீனாக்ஷி கணபதி தகவல் அனுப்பியிருந்தார்.  அதற்கு அவருக்கு நன்றி.

ஆனால் அவர் பாராட்டுவதுபோல் அச்சொல் தானே வந்து உதிரவில்லை.
 தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தகவலை சமீபத்தில் மீண்டுமொருமுறை படித்தேன். அதைக் கொண்டு புதிரமைக்க வேண்டுமென்று அப்போது மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் புதிர் அத்தகவல் குறித்து போகாமல் வீர சாதனைக்குப் போய்விட்டது.

சென்ற வாரம் பினாத்தல் சுரேஷ், ராஜேஷ் ('இலவசம்') இருவரையும் சந்தித்த போது சுஜாதாவின் கதையான "விபரீதக் கோட்பாடு" பற்றிப் பேச்சு சென்றது. அப்போது "கோட்பாடு" தானாக வந்து சிக்கியது. பலமுறை திரைப்படப் பாடல்கள் கேட்கும்போது அதில் வரும் ஒரு சொல் அகப்பட்டுக் கொள்ளும்.  இப்படி முன்தீர்மானம் இல்லாத போது (வாரம் இரண்டு முறையாவது) க்ரியா அகராதியை கண்ணை மூடிக் கொண்டு ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்து அப்பக்கதிலிருந்து ஒரு சொல்லைத் தேர்ந்தெடுப்பேன்.

ஜெர்மனியில் இருந்த சமயம்தான் பாட்டும் கேட்காமல் க்ரியா அகராதியும் பக்கத்தில் இல்லாமல் சும்மாவே யோசித்துச் செய்ய வேண்டியிருந்தது.
ஏதாவது ஒரு வகையில் வாகான சொற்கள் இப்படி கைக்குத் தட்டுப்படும் வரையில் உதிரிவெடி நீடித்து வரும்.

சுந்தரராமசாமியின் ஜேஜே ஏளனம் செய்யும் சரித்திரக் கதாசிரியரான  திருச்சூர் கோபாலன் நாயருக்கு ஏதாவது பழையபாடல்களில் வாய்ப்பான வரி கிடைத்தால் போதுமாம், அதை வைத்து எண்ணூறு பக்கத்துக்கு கதை எழுதிவிடுவாராம். எனக்கு செய்ய வேண்டியதெல்லாம் ஏழெட்டு சொற்களில் புதிரமைப்பதுதான், அதைவிட சுலபமான காரியம்.




Comments

Raghavan MK said…
அழகிய சொல்லாடலுடன் அமைந்த புதிர்!
ஆசிரியருக்கு பாராட்டுகள்!
💐💐💐
************************
சுவரால் மறைக்கப்படாத இடம் மதிப்புக்குறைவானதா? தரம் குறைவானது (5)

மதிப்புக்குறைவானதா?
= தாழ்வா?

தரம் குறைவானது
= [ த ]ரம் = ரம்

சுவரால் மறைக்கப்படாத இடம்
= தாழ்வா+ரம்
= தாழ்வாரம்
*************************
தாழ்வாரம் ன்னு நெனச்சேன் ஆனா சரியாய் விளக்க முடியல. நல்ல கட்டமைப்பு

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்