Skip to main content

விடை 3735

இன்றைய புதிர்:  
அந்த அரசன்  பெண் தெய்வம்  (4)
அதற்கான விடை:
அம்மன்; மன் = அரசன், அம்மன் = 'அந்த அரசன்', பெண் தெய்வம்.

ஒருவரின் பெயர் தமிழில் 'ன்' என்ற எழுத்தில் முடிந்தால் ஆணின் பெயர் என்றுதான் இருக்கும்.
மனோகரன், சீமான், தனபாலன், வாஞ்சிநாதன், குமரன்  என்று பல உதாரணங்களைப் பார்க்கலாம்.
தொழிற்பெயரிலும், தச்சன், பால்காரன், காவலன், அரசன் என்று பார்க்கலாம்.
ஆனால் பெண் தெய்வத்துக்கு "அம்மன்"!

பிரெஞ்சு மொழியில் பெயர்ச்சொற்கள் எல்லாமும் (நாற்காலி, கோபம், காற்று என்று எதுவாக இருந்தாலும்) ஆண்பாலாகவோ, பெண்பாலாகவோ இருக்க வேண்டும் என்று இலக்கணம் சொல்கிறது.  ஆனால் எது ஆண்பால்  எது பெண்பால் என்று தெரிந்து கொள்வதுதான் சிக்கல்.
நாற்காலி உடைந்தான் என்று சொல்வதா, நாற்காலி உடைந்தாள் என்று சொல்வதா? சில பொது விதிகள் உள்ளன. A word ending in a doubled consonant followed by 'e' is feminine. அதன்படி terre (பூமி), elle (அவள்) famille (family) இவையெல்லாம்  பெண்பால். ஆனால் homme என்ற சொல்லின் பொருள் "ஆண்"! இதைத் தெரிந்துகொண்ட பின் பிரெஞ்சு கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை  மூட்டை கட்டி வைத்துவிட்டேன்!!

இந்த வெடிக்கு வந்திருக்கும் விடைகளை அறிந்து கொள்ள இப்பட்டியலைப் பார்க்கவும்.


Comments

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்