Skip to main content

விடை 3733

இன்று   காலை வெளியான  வெடி
சுவரால் மறைக்கப்படாத இடம் மதிப்பு குறைவானதா? தரம் குறைவாது (5)
இதற்கான விடை:  தாழ்வாரம் = தாழ்வா + (த) ரம்
("பிறரை ஏமாற்றிப் பிழைப்பதுதான் தாழ்வு, மூட்டை சுமந்து சம்பாதிப்பதில் தாழ்வில்லை" என்பது போன்ற சொற்றொடர்களில் தாழ்வு என்ற சொல் மதிப்புக் குறைவானது என்ற பொருளிலேயே வருகிறது.)   தாழ்வாரம் வீட்டில் தெருப்புறமாகவோ அல்லது முற்றத்தை அடுத்தோ மூடு சுவரின்றி திறந்தவாறு இருக்கும்.

இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.

*******

நேற்று "பிரதாபம்" என்ற சொல்லைக் கையாண்டு ஞாபகப் படுத்தியதற்கு மகிழ்ச்சியைத்  தெரிவித்து  மீனாக்ஷி கணபதி தகவல் அனுப்பியிருந்தார்.  அதற்கு அவருக்கு நன்றி.

ஆனால் அவர் பாராட்டுவதுபோல் அச்சொல் தானே வந்து உதிரவில்லை.
 தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தகவலை சமீபத்தில் மீண்டுமொருமுறை படித்தேன். அதைக் கொண்டு புதிரமைக்க வேண்டுமென்று அப்போது மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் புதிர் அத்தகவல் குறித்து போகாமல் வீர சாதனைக்குப் போய்விட்டது.

சென்ற வாரம் பினாத்தல் சுரேஷ், ராஜேஷ் ('இலவசம்') இருவரையும் சந்தித்த போது சுஜாதாவின் கதையான "விபரீதக் கோட்பாடு" பற்றிப் பேச்சு சென்றது. அப்போது "கோட்பாடு" தானாக வந்து சிக்கியது. பலமுறை திரைப்படப் பாடல்கள் கேட்கும்போது அதில் வரும் ஒரு சொல் அகப்பட்டுக் கொள்ளும்.  இப்படி முன்தீர்மானம் இல்லாத போது (வாரம் இரண்டு முறையாவது) க்ரியா அகராதியை கண்ணை மூடிக் கொண்டு ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்து அப்பக்கதிலிருந்து ஒரு சொல்லைத் தேர்ந்தெடுப்பேன்.

ஜெர்மனியில் இருந்த சமயம்தான் பாட்டும் கேட்காமல் க்ரியா அகராதியும் பக்கத்தில் இல்லாமல் சும்மாவே யோசித்துச் செய்ய வேண்டியிருந்தது.
ஏதாவது ஒரு வகையில் வாகான சொற்கள் இப்படி கைக்குத் தட்டுப்படும் வரையில் உதிரிவெடி நீடித்து வரும்.

சுந்தரராமசாமியின் ஜேஜே ஏளனம் செய்யும் சரித்திரக் கதாசிரியரான  திருச்சூர் கோபாலன் நாயருக்கு ஏதாவது பழையபாடல்களில் வாய்ப்பான வரி கிடைத்தால் போதுமாம், அதை வைத்து எண்ணூறு பக்கத்துக்கு கதை எழுதிவிடுவாராம். எனக்கு செய்ய வேண்டியதெல்லாம் ஏழெட்டு சொற்களில் புதிரமைப்பதுதான், அதைவிட சுலபமான காரியம்.




Comments

Raghavan MK said…
அழகிய சொல்லாடலுடன் அமைந்த புதிர்!
ஆசிரியருக்கு பாராட்டுகள்!
💐💐💐
************************
சுவரால் மறைக்கப்படாத இடம் மதிப்புக்குறைவானதா? தரம் குறைவானது (5)

மதிப்புக்குறைவானதா?
= தாழ்வா?

தரம் குறைவானது
= [ த ]ரம் = ரம்

சுவரால் மறைக்கப்படாத இடம்
= தாழ்வா+ரம்
= தாழ்வாரம்
*************************
தாழ்வாரம் ன்னு நெனச்சேன் ஆனா சரியாய் விளக்க முடியல. நல்ல கட்டமைப்பு

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...