இன்று வெளியான வெடி
செல்வத்துள் தலையாயது வழிகாட்டி வேறுதிசையிற் செல்ல உள்ளேவிடு (3 )
இதற்கான விடை: செருகு ( உள்ளேவிடு) = செ + குரு (வழிகாட்டி)
வழிகாட்டியே திசை மாறிச் சென்றுவிட்டதால் இன்று விடையளிக்க முற்பட்டவர்கள் சிலர் திசை மாறிவிட்டனர்.
இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.

Comments
புதிரின் குருவே−உம்
புலமை சிறப்பே! −நான்
குறள் வழிச் சென்றும்
குறைத் தீரவில்லை
வேறு திசையில் செல்ல
எனக்கேன் தோன்றவில்லை?
1. செல்லவத்துள் தலையாயது =செவி
அப்புறம் உள்ளேவிடு னு இருக்கு. So செல்வி யா? நுழைவி போன்ற அர்த்தமா இருக்குமோ? அப்போ வழிகாட்டி வேறு திசையிற் செல்ல =?
2. வழிகாட்டி னா கலங்கரை விளக்கம்
3."வேறுதிசையிற் செல்ல" ன்னா போக வ திருப்பி போட்டா "கபோ". அப்போ "கபோதி" யா?
இப்படி எல்லாம் அலைஞ்சு திரிஞ்சு, ஒருவழியா "செல்வத்துள் தலையாவது" செ ன்னு வெச்சுகிட்டு, உள்ளே விடு அர்த்ததுக்கு வேற சொற்கள் தேடினேன்.
புகுத்து, நுழை ....செருகு. ஓ வழிகாட்டி "குரு" வ வேறு திசையிற் செல்ல=ருகு
ஆக மொத்தம் "செருகு". விடை கிடைத்தது! Eureka!!!