Skip to main content

விடை 3585

இன்று காலை அளிக்கப்பட்ட வெடி:
வலிந்து உள்ளே தள்ளப்பட்டு அம்பு குத்திவிட்டது (4)
இதற்கான விடை: புகுத்தி   (அம்பு குத்திவிட்டது என்ற இரு சொற்களின் உள்ளே ஒளிந்திருக்கிறது).

இப்புதிரில் "தள்ளப்பட்டு" என்று கொடுத்திருப்பது "புகுத்தி" என்பதற்கு இலக்கண வகையில் பொருந்தவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார் நங்கநல்லூர் சித்தானந்தம்.

புதிரில் "தள்ளி" என்ற வார்த்தை இருந்தால் சரியாயிருந்திருக்கும்.
இது மாதிரி பிழை நான் செய்திருக்கக் கூடாது. ஆர்வலர்கள் பொறுத்தருளவும்.

இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.