Skip to main content

விடை 3586

இன்றைய வெடி:
ஓர் ஆவணத்தைத் துரத்தும் நேர்நிரை கத்தியை எறிந்த கூட்டம் (5)

இதற்கான விடை: பட்டாளம் =  பட்டா + கூவிளம் - கூவி (கத்தி)
பட்டாளம் = கூட்டம் (அவளைப் பெண்பார்க்க ஒரு பெரிய பட்டாளமே வந்து விட்டது)

இப்புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகளைக் காண இப்பக்கம் செல்லவும்.

Comments

Raghavan MK said…


A peek into today's riddle!
***********************
*_நிலம் சம்பந்தமான ஆவணங்கள்._*

*_பட்டா_*
ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
*_சிட்டா_*
குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை *ஆவணம்* .
*_அடங்கல்_*
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை *ஆவணம்* .
***********************
வசதிக்காக _அசைகள்_ பின்வருமாறு பெயரிடப்படுகிறது.
நேர்நேர் = தேமா
நிரைநேர் = புளிமா
_நேர்நிரை_
= *கூவிளம்*
நிரைநிரை = கருவிளம்.
***********************
_ஓர் ஆவணத்தைத் துரத்தும் நேர்நிரை கத்தியை எறிந்த கூட்டம்(5)_
_ஓர் ஆவணம்_
= *பட்டா*
_நேர்நிரை_
= *கூவிளம்*
_கத்தி_
= *கூவி*
_நேர்நிரை கத்தியை எறிந்த_
= *கூவிளம்* - *கூவி*
= *ளம்*
_ஓர் ஆவணத்தைத் துரத்தும்_
= *பட்டா+ளம்*
= *பட்டாளம்*
_கூட்டம்_ = *பட்டாளம்*
---------------------------------
Oxford dictionary
தமிழ் 
*பட்டாளம்* யின் அர்த்தம்
_பட்டாளம்_ பெயர்ச்சொல்
1 பேச்சு வழக்கு ராணுவம். ‘என் தம்பி அப்பாவிடம் கோபித்துக்கொண்டு பட்டாளத்தில் சேர்ந்துவிட்டான்’

2 (பெரும்பாலும் பிற பெயர்ச்சொற்களோடு இணைந்து) *_கூட்டம்_* .
_‘மாணவர் பட்டாளம்’_ _‘சிறுவர் பட்டாளம்_
************************
💐🙏🏼💐
Raghavan MK said…


********************
My dear Vanchi!

_Today's riddle is superbly constructed!_

இன்றைய புதிர் மிகவும் இரசிக்கும்படியாக அமைந்துள்ளது.

I enjoyed solving today's riddle!

_I wish to appreciate your efforts in bringing out such fine riddles to suit everyone's palate._

Congrats!
***********************

🌸🌸🌸🌸🌸

_இன்றைய புதிர் கண்டது_
_இனிய தொரு சொல்லாடல்--_
_ஆர்வலர்கள் சிலர் அடைந்தது_
_தாளம் தப்பிய தள்ளாடல்_ 😌

🌸🌸🌸🌸🌸🌸

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்