Skip to main content

விடை 3563

இன்றைய வெடி:

ஜராசந்தனுக்கு இறுதியில் நேர்ந்தது போல் கதைவிடு, இதுவும் அது போல்தான் (4) 

இதற்கான விடை:  விடுகதை ("இது" என்பது இந்தப் புதிரை. புதிர் என்பதும் விடுகதை போல்தான்)

தன்னை இரண்டு துண்டாக வெட்டினாலும் துண்டுகள் இரண்டும்  நகர்ந்து வந்து  ஒன்றாகச் சேர்ந்து கொள்ளும் வரத்தைப் பெற்றவன் ஜராசந்தன்.  மஹாபாரதப் போரில் அவனைக் கொல்ல  கிருஷ்ணனின் சைகை படி பீமன் அவனை இரண்டு துண்டாக வெட்டி இடது வலது பாகங்களை மாற்றிப் போட்டு இணையமுடியாமல் செய்து அவனைக் கொன்றான்.
 அதே கதியைப் பெற்றால் கதை விடு --> விடுகதை

விடை களின் பட்டியல் 

Comments

Ramiah said…
விடைகள் பட்டியல் ?
Ambika said…

பட்டியல் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.