Skip to main content

விடை 3547


இன்றைய வெடி:
தொழிலாளர் நல அமைப்பு காப்பவனின் கையில் இருக்கும் (4)
இதற்கான விடை:  சங்கம் = காக்கும் தொழில் செய்யும் கடவுள் கையில் இருக்கும் சங்கு; இது இலக்கியத்தில் சங்கம் என்றும் கூறப்படும். திருநீறணியாத ஊர், விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊர், இதெல்லாம் ஊரல்ல அடவி காடே என்று ஒரு சிவபக்தர்  சாடியிருக்கிறார்.

 தொழிலாளர்கள் இணைந்த அமைப்பு சங்கம்.  தொழிலாளர் மட்டுமல்ல மற்றவகைகளிலும் சங்கங்கள் அமைக்கப்படுகின்றன என்றாலும் இது அதிகமாக இருக்கிறது:  தமிழ்ச் சங்கம்,  அமெரிக்காவாழ் ஆந்திர மருத்துவர்கள் சங்கம், சென்னை வாழ் கோவில்பட்டி நாடார் சங்கம்,  இடைநிலை ஆசிரியர் சங்கம்,   சங்கங்களுக்கா பஞ்சம்?

நேற்றைய புதிருக்கு சிலர் சங்கமம் என்ற விடையளித்திருந்தனர். அந்த சொல் இதுவரை எப்படிப் புதிரில் சிக்காமல் போனது என்று நினைத்ததில் உருவானது  இன்றைய புதிர்.

விடைகளின் பட்டியல்  இதோ:



Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.