Skip to main content

விடை 3552

இன்று காலை வெளியான வெடி:
இனிய கரைசல் கஷ்டத்துடன் வந்த வேற்றுமை (4)
இதற்கான விடை:   பாகுபாடு = பாகு + பாடு 

விடைகளின் தொகுப்பு இங்கே:


கிறிஸ்துமஸ்-புதுவருட விடுமுறையில்  ஓர் உருப்படாத வேலை செய்ய ஆரம்பித்தேன். பதினெட்டு வருஷம் முன்பு செய்ததுதான். அது கால மாற்றத்தில் சண்டித்தனம் செய்து நான்கு வருடத்தில்  நொண்டிக் கொண்டு நின்றுவிட்டது. இப்போது புதுவிதமாய் அதைச் செய்து கொண்டிருக்கிறேன்.

விரைவில்   வேலை முடிந்து வெளிவரும்: என்னவென்று அறிந்து கொள்ள முன்னோட்டமாக இதோ ஒரு படம்:



Comments


யாப்பறிஞனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
யாப்பு எனக்கு ஆப்பு; இலக்கணம் எனக்கு விளக்கெண்ணெய்!
Will sugar be added?
Chittanandam said…
கனகசபாபதி நிலைதான் என்னுடையதும். யாப்பு அவருக்கு விளக்கெண்ணெய். எனக்கோ அது வேப்பெண்ணெய்.
உங்கள் செயல் முழு வெற்றி கண்டிட எனது மனப்பூர்வ ஆசிகள்
Rukmani Gopalan said…
Wow eagerly looking forward to yaaparignar. All the best for the launch Vanchi Sir.
எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஐயா.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்