Skip to main content

விடை 3548

இன்றைய வெடி:  இறுதியான வெடி சிரிப்பில் அவளுடைய செய்கை உண்மையல்ல (3)
புதிர் சரியாக அமைவதற்காக  இலக்கணத்தில்  பிழையுடன் வெளியிட்டுவிட்டேன்.  "வெடிச் சிரிப்பில்" என்று வலி மிக எழுதியிருக்க வேண்டும்.  நமுத்துப் போய் "வெடி சிரிப்பில்" என்று போய் விட்டது.  என்னுடைய செய்கையும் உண்மையல்ல!

வெடிதனில் வேண்டும் சுவையென்று  செய்த
பொடியான குற்றம் பொறுப்பீர் --  இடிபோல்
அடித்துமது ஆர்வத்தைத் தூண்ட அடியேன்
நடித்தேன் செயவில்லை நன்று


இன்றைய புதிருக்கான விடை: நடிகை = நகை (சிரிப்பு)  +  டி (இறுதி வெடி)  

இன்று பெறப்பட்ட விடை விவரம் இதோ.



Comments

Partha said…
பழுது பிறர் காணாமல் புதிரமைத்து வாழ்வார் வாஞ்சி, மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்
பார்த்தசாரதி

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்