தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
உதிரிவெடி
************
துள்ளித்திரியும் பச்சிளம் கன்றிது
ஓராண்டு நிறைவுற்ற தருணமிது
தேன்பாகாய் புதிரைச்
சுவைத்து
மெத்த மகிழ்வுற்ற நாட்கள் பலவுண்டு
விடியலில் புதிர்களிடும் புள்ளிக்கோலங்கள்
முத்தாய் தெறித்திடும் முற்றத்தில்
முரண்டு பிடிக்கும் புதிர்களுமுண்டு
திரண்டு வரும் திரட்டு பாலுமுண்டு
வற்றாத சோலையிது
திகட்டாத தேனமுது
நித்தமும் துயிலெழுப்ப
பூபாள மிசைக்கும்
இன்று போல் என்றும் நம்
உள்ளத்தில் உவகைக்கு
வித்திட விழைகின்றேன் பித்தாய் மாறினோம் புதிர்களால்
சத்தான வெடிகளை
விருந்தாய் படைத்திடும்
குன்றின் விளக்காம்
அன்பர் வாஞ்சியாருக்கும்
உதிரிப்பூக்களை
சரமாய் தொடுத்து
மணம் பரப்பும்
குழு உறுப்பினர்களுக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஒராண்டை கடந்து
வெற்றிநடைபோடும்
உதிரிவெடி குழு
ஆல் போல் வளர்ந்து இமயத்தைத் தொட
இந்நாளில் வாழ்த்திடுவோம்
வையத்துள் புகழுடன்
வாழ்க! வளர்க!
💐🙏💐
எம்கேயார்
Bangalore. 01-01-2019