Skip to main content

விடை 3551

இன்று வெளியான புதிர்:
இனிய மரம் கரம்  பற்றிட விறகு  காற்றுக்களிப்பது  (5)
இதற்கான விடை: கரும்புகை = கரும்பு (இனிய 'மரம்'!) + கை

சென்ற வருடம் இதே சமயம் வந்த  உதிரிவெடி 3185



விடையளித்தவர்களின் பட்டியல் இங்கே:

Comments

கரும்பு ஒரு மரம் என்பது இந்த மர மண்டைக்கு ஏனோ தோன்றவே இல்லை!! கரும்பாலேயே தலையில் அடித்துக்கொள்ள வேண்டியதுதான்!
"Trees are plants with a single main trunk having several branches bearing leaves and other parts. Sugercanes are tall perennial grasses.They belong to monocotyledons (including grasses and mostly herbs) and hence do not show a tree habit. So we can conclude that sugercane is a plant and is definitely not a tree."

An idiotic interpretation from Google search!
Vanchinathan said…
நன்றி கனகசபாபதி அவர்களே! ஒற்றை விதையிலைத் தாவரமான கரும்பு மரமாக இருக்கமுடியாது என்ற அறிவியல் உண்மையைச் சுட்டிக் காட்டிவிட்டீர்கள். கரும்பு இரண்டுங்கெட்டான் வகையில் இருப்பதால் எதைச் சொன்னாலும் குறையாக இருக்கும்/சரியென்று வாதிடலாம். இந்த திரிசங்கு நிலையே புதிராசிரியர்களுக்கு வரம்/வசதி (Regard a bug as a feature as they say in software industry). அதனால் ஒருநாள் கரும்பை மரம் என்று சொல்லியும் இன்னொரு நாள் புல் என்ற பொருளிலும் பயன்படுத்தி புதிராக்கிப் புல்லையும் ஆயுதமாக்கும் வல்ல புதிராசிரியனாவேன்.

அறிவியல் உண்மையும் பொதுவான புரிதலும் சில சமயம் மாறுபடுவது ண்டு. விகிபீடியாவில் வாழையைப் பற்றிப் படித்துவிட்டு "வாழை மரம்" என்று கூறிய தமிழர்களை மூடர்கள் என்று கூறமுடியாது. சந்திரன் கோளில்லை என்பதும், சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அறிவுயல் உண்மைகள். ஆனாலும் பொதுவான புரிதிலைல் நட்சத்திரம் என்பது சூரியன் மறைந்த பின் இருட்டில் பொடிப்பொடியாயக் கண் சிமிட்டும் வஸ்து.
Vanchinathan said…
Excerpt from https://en.wikipedia.org/wiki/Banana :
The banana plant is the largest herbaceous flowering plant.[7] All the above-ground parts of a banana plant grow from a structure usually called a "corm".[8] Plants are normally tall and fairly sturdy, and are often mistaken for trees
A titbit:
மரக்கறி என்பது மரம், செடி, கொடி, புல், பூண்டு ஆகிய தாவரங்கள் தரும் காய், பழம், இலை அதாவது கீரை, கிழங்கு, மலர், கொட்டை, விதை, தானியங்கள், சாறு ஆகியனவும் மற்றும் இவைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவுமாகும்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்