Skip to main content

உதிரிவெடி 3538

உதிரிவெடி 3538 (ஜனவரி 1, 2019)
வாஞ்சிநாதன்
*******************

அனைவருக்கும் 2019 ஆம் ஆண்டு இனிதாகத் தொடங்கி இனிதாகச் செல்ல வாழ்த்துகள்.

கால் சறுக்க தொடர்ந்து மூன்றடி  சாதாரணமாக நடப்பது (4)


Comments

Raghavan MK said…



உதிரிவெடி
************
துள்ளித்திரியும் பச்சிளம் கன்றிது
ஓராண்டு நிறைவுற்ற தருணமிது

தேன்பாகாய் புதிரைச்
சுவைத்து
மெத்த மகிழ்வுற்ற நாட்கள் பலவுண்டு

விடியலில் புதிர்களிடும் புள்ளிக்கோலங்கள்
முத்தாய் தெறித்திடும் முற்றத்தில்

முரண்டு பிடிக்கும் புதிர்களுமுண்டு
திரண்டு வரும் திரட்டு பாலுமுண்டு

வற்றாத சோலையிது
திகட்டாத தேனமுது
நித்தமும் துயிலெழுப்ப
பூபாள மிசைக்கும்

இன்று போல் என்றும் நம்
உள்ளத்தில் உவகைக்கு
வித்திட விழைகின்றேன் பித்தாய் மாறினோம் புதிர்களால்

சத்தான வெடிகளை
விருந்தாய் படைத்திடும்
குன்றின் விளக்காம்
அன்பர் வாஞ்சியாருக்கும்
உதிரிப்பூக்களை
சரமாய் தொடுத்து
மணம் பரப்பும்
குழு உறுப்பினர்களுக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஒராண்டை கடந்து
வெற்றிநடைபோடும்
உதிரிவெடி குழு
ஆல் போல் வளர்ந்து இமயத்தைத் தொட
இந்நாளில் வாழ்த்திடுவோம்
வையத்துள் புகழுடன்
வாழ்க! வளர்க!

💐🙏💐

எம்கேயார்
Bangalore. 01-01-2019
Vanchinathan said…
தமிழில் பல முத்துகள் இறைந்து கிடைக்கின்றன. தேடும்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதைப் புதிராக்கிப் பகிர்ந்து கொள்வது என் விருப்பம். அப்புதிர்களை அவிழ்ப்பதில் நாட்டமுடையவர்கள் இருப்பதால் உற்சாகமாகச் செய்ய முடிகிறது.
Chittanandam said…
நன்றி. தொடரட்டும் தங்கள் ணி.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்