Skip to main content

விடை 3542

இன்றைய வெடி
பொருள் முதலில் இல்லாத இதுவரையில் இல்லாதது (3) 
இதற்கான விடை: தனம் (பொருள்)
 நூதனம் = புதியது, இதுவரை இல்லாதது
முதலில் இல்லாத நூதனம் = தனம்

விடையனுப்பிய அனைவரது பெயர் பட்டியல்
இதோ:  https://docs.google.com/spreadsheets/d/1rDhvUVhB6UcOpc4x-yUDVJfcmjci574pa2o2zlPcYwk/edit?usp=sharing

Comments

Muthu said…
நான் யோசித்த வரை: 1. பொருள்(3) = முதலில் இல்லாத (?) + இதுவரையில் இல்லாதது (?) (or) 2. பொருள் முதலில் இல்லாத (2) + இதுவரையில் (1) = இல்லாதது (3) (or) 3. பொருள் (?)+முதலில் (?)+இல்லாத (?) = இதுவரையில் இல்லாதது (3); பொருள் = வஸ்து, ஆஸ்தி, பணம் தோன்றியது; (இது வரை) இல்லாதது = புதிது, நாஸ்தி தோன்றியது; ஒய்வு பெற்ற உபாத்தியாயருக்கு "தனம்" தோன்றாதது ஒன்றும் "நூதனம்" அல்லவே!
Muthu said…
மொத்த இரசிகர்கள் 65க்கும் மேல்; இந்தப் புதிருக்கு விடையாளித்தோர் 27; அதில் சரியான விடை அளித்தோர் 2 (இருவர்) மட்டுமே! அந்த இரு ஜாம்பவான்களாகிய திரு. பார்த்தசாரதி மற்றும் திரு.நாராயணன் இருவருக்கும் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன்!
Muthu said…
ஒவ்வொரு உதிரி வெடியையும் "இதுவரை இல்லாத" "நூதன" வெடியாக அமைத்து நம் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் முழ்கடித்து மறுநாள் மீட்டெடுக்கும் முனைவர் வாஞ்சி நீடுழி வாழ்க!
Vanchinathan said…
நானும் கூட ஓராசிரியன் அதாவது பேராசிரியன். அதனால் பேரளவு தனம் சேர்க்கவில்லையென்றாலும் பெயரளவில் (வார்த்தையாக) தனம் கிடைத்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்!