இன்று காலை வெளியான வெடி:
தூய நிறங்கொண்ட பால் அரை சேர் பெரும்பாலும் நாலடி கொண்டது (3)
இதற்கான விடை: வெண்பா = வெண் + பா
வெண்பாக்கள் எல்லாம் அந்த காலத்தில் அவ்வைப் பாட்டியும் வாழ்க்கையே நிலையானதில்லை என்று புத்திமதி கூறும் சமண முனிவர்களும்தான் (நாலடியார்) எழுதினார்கள் என்று நினைத்திருந்தேன்.
காளமேகம் பல சிலேடைகள் வெண்பா வடிவில் எழுதியுள்ளார். "காக்கைக்கா காகூகை" என்று ககர எழுத்துகளை மட்டுமேயும் "தாதிதூதோ தீது" என்று தகரங்களை மட்டுமே கொண்டும் வெண்பாவை எழுதியுள்ள காளமேகம் இக்காலத்தில் இருந்தால் அப்படியே ஓரத்தில் ஏகப்பட்ட குறுக்கெழுத்துப் புதிர்களை உருவாக்கியிருப்பார், என்னுடைய புதிரிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்திருக்கும்!
சரி, இக்காலத்திலும் பலர் திறம்பட வெண்பாக்கள் எழுதி வருகின்றனர். என்ன இணையம் கோலோச்சும் காலத்திலா ? ஆமாம் அமெரிக்காவில் 1999ல் பெரியண்ணன் சந்திரசேகரன் என்ற அட்லாண்டாகாரர் "வெண்பா வடிக்கலாம் வா" என்ற இணைய விவாதமேடை நடத்தி வந்தார்.
நானும் சென்னை ஆன்லைன் இணைய இதழில் 2000-2001 ஆண்டுகளில் சுமார் 60 வாரங்கள் பலரும் எழுதிய வெண்பாக்களை சுடச்சுட "வெண்பாமேடை" என்ற தலைப்பில் வெளியிட்டு வந்தேன்.
பாரதியார், கம்பன், மஹாபாரதம் இவையெல்லாம் ஆழ்ந்து படித்த கவிஞர் ஹரிகிருஷ்ணன் இப்போது வெண்பாவுக்கு ஒரு வாட்ஸப்குழுவை "ஈற்றடி என்றும் இனிப்பு" என்ற பெயரில் ஆறு மாதங்களாக நடத்தி வருகிறார்.
அவர் அளிக்கும் ஈற்றடிக்குக் குழுவில் பலரும் சில நிமிடங்களில் பல வேறுபட்ட கருத்துகளைக் கொண்ட பாடல்களை அசரவைக்கும்படி எழுதுகின்றனர்.
உதாரணமாக "விண்ணில் விழுந்த/விதைத்த விதை" என்ற ஈற்றடி அக்டோபர் 8ஆம் தேதிக்கு அளிக்கப்பட்டபோது வெளிவந்த பாடல்களில் இரண்டு மாதிரிகள்
காய்ந்த சிவகாசிக் கந்தகத் தோட்டத்தில்
சேய்கள் விளைவித்த தீக்கனிகள் -- போய்எங்கும்
மண்ணில் வெடித்தெழும்பி வானில் சிதறியதால்
விண்ணில் விழுந்த விதை --- (சங்கரசுப்ரமணியன்)
கரியாய்க் கிடந்து கணப்பொழுதில் ஓர்நாள்
பெரிதாய் வெடித்துப் பெருகியதாம் அண்டமாய்
எண்ணம் குடைகிறது ஏனெதற்கு யார்போட்டார்
விண்ணில் விதைத்த விதை --- (பினாத்தல் சுரேஷ்)

Comments
இரண்டடி, மூன்றடியை எட்டாத நிறைய பேர் நான்கடியை எட்டிவிட்டார்கள்!
1) 6:02:14 மீ பாலு
2) 6:02:45 முத்துசுப்ரமண்யம்
3) 6:02:59 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
4) 6:03:11 அம்பிகா
5) 6:03:24 லதா
6) 6:03:51 கோவிந்தராஜன்
7) 6:04:06 சதீஷ்பாலமுருகன்
8) 6:04:07 Suba Srinivasan
9) 6:04:12 திருமூர்த்தி
10) 6:04:15 மடிப்பாக்கம் தயானந்தன்
11) 6:04:23 ராஜா ரங்கராஜன்
12) 6:05:28 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 6:11:39 கேசவன்
14) 6:12:17 K.R.Santhanam
15) 6:16:42 பா நடராஜன்
16) 6:16:49 புவனா சிவராமன்
17) 6:20:06 Siddhan
18) 6:21:34 சுந்தர் வேதாந்தம்
19) 6:21:57 கே.ஆர்.சந்தானம்
20) 6:23:19 ரவி சுப்ரமணியன்
21) 6:25:29 கி மூ சுரேஷ்
22) 6:25:57 மு.க.இராகவன்.
23) 6:28:26 லட்சுமி சங்கர்
24) 6:32:31 KB
25) 6:35:33 உஷா
26) 6:35:58 ராமராவ்
27) 6:38:45 ஆர்.நாராயணன்.
28) 6:40:31 மீ கண்ணன்
29) 6:43:44 கலாராணி
30) 6:43:58 மீனாக்ஷி கணபதி
31) 6:44:08 மீனாக்ஷி
32) 6:54:53 நாதன் நா தோ
33) 7:00:21 பாலா
34) 7:04:55 வி சீ சந்திரமௌலி
35) 7:08:08 விஜயா
36) 7:08:41 மு க பாரதி
37) 7:10:52 எஸ்.பார்த்தசாரதி
38) 7:11:08 பாலாஜி மணியன்
39) 7:13:50 சங்கரசுப்பிரமணியன்
40) 7:15:29 எஸ் பி சுரேஷ்
41) 7:15:57 ஶ்ரீதரன்
42) 7:29:15 திருக்குமரன் தங்கராஜ்
43) 7:49:13 ரவி சுந்தரம்
44) 7:52:58 ராதா தேசிகன்
45) 7:54:57 மும்பை
46) 8:06:53 பானுமதி
47) 8:09:02 ஆர். பத்மா
48) 8:11:18 ஏ.டி.வேதாந்தம்
49) 8:11:41 பத்மாசனி
50) 8:13:55 மாலதி
51) 8:16:52 இரா.செகு
52) 8:27:57 பினாத்தல்
53) 9:07:35 கு.கனகசபாபதி, மும்பை
54) 9:19:12 மாதவ்
55) 9:32:24 பானுபாலு
56) 10:03:12 ராஜி ஹரிஹரன்
57) 10:07:38 பிரசாத் வேணுகோபால்
58) 10:19:26 ருக்மணி கோபாலன்
59) 11:42:19 ஆர்.வானதி
60) 12:36:18 சாந்தி நாராயணன்
61) 14:51:27 ரமணி பாலகிருஷ்ணன்
62) 20:13:33 Sandhya
**********************
ஔவையை முருகன் ஓன்று இரண்டு என வரிசைப்படுத்தி
பாட சொன்னது
போல உங்களையும் வரிசை படுத்தி
புதிர் அமைக்கச்
சொல்லி விட்டாரோ??☺️
தாய்த் தந்த மொழியாம் மதுரத்தமிழின்
ஆய் சொற்கள் அனைத்தும் ஆய்ந்து
தூய நிறங்கொண்ட பால்போல்; பிழையற
*வெண்பா படைப்பதில் வேந்தர் வாஞ்சி*