Skip to main content

Posts

Showing posts from February, 2018

விடை 3232

இன்று (28/02/2018) காலை வெளியான வெடி: எல்லையில்லா தீப்பிடிக்க அதற்கு முன்பே இறைவன் அருள்  (6) இதற்கான விடை: வரம்பற்ற = வரம் + பற்ற

உதிரிவெடி 3232

இன்றைய (28/02/2018) உதிரிவெடி வாஞ்சிநாதன் **************** எல்லையில்லா தீப்பிடிக்க அதற்கு முன்பே இறைவன் அருள்  (6) . . .

விடை 3231

இன்று (27/02/2018) வெளியான  வெடி: நடுக் கூடம் சுற்றிய ஆடு கூட்டமாய் பெண் (4) இதற்கான விடை:  மடந்தை = மந்தை + ட (நடுக் கூடம்) இன்று விடையளித்தோர்  பட்டியல் தாமதமாக 10 மணிக்கு மேல் வெளியிடப்படும்.

விடை 3230

இன்று (26/02/2018) காலை வெளியான வெடி: எட்டு வயதான அன்னம் (3) இதற்கான விடை: அமுது = அ  (8) + முது (வயதான); அமுது = அன்னம், சோறு குறிப்பு: விடையளித்தோர் பட்டியலை ராஜி ஹரிஹரன் ஒன்பதரை மணிக்கு வெளியிடுவார்.

Solution to Krypton 8

Today's clue:   Are lawyers expected to follow what the  billing machines read? (3,4) Solution: Bar Code Solved by the following 22 persons: S.Parthasarathy R. Ravishankar... Ravi Subramanian K.BALASUBRAMANIAN Lakshmi Shankar Kesavan R.Narayanan. Dr.B.chandramouli Maithreyi Sivakumar Meenakshi Ganapathi S.R.Balasubramanian Vijaya Sundar Vedantham Sankarasubramanian Suba Srinivasan Raja Rangarajan S P Suresh Kalyani Desikan Srivina Nanganallur Chittanandam M K RAGHAVAN Ambika

விடை 3229

இன்று (25/02/2018) காலை வெளியான வெடி: ஓரம் முனை கிள்ளிய காம்பு முன்பு அழை (4) இதற்கான விடை: --> விளிம்பு =   விளி ( அழை)  +  (கா) ம்பு

Solution to Krypton 7

Today's clue: Sad event to get rid of old experiment (3) Solution: TRY = TRAGEDY - AGED This has been solved by the following 16 persons: R.Narayanan. Srivina R. Ravishankar. Ravi Subramanian S.R.Balasubramanian S.Parthasarathy Lakshmi Shankar Bhuvana Sivaraman Siddhan Bala Meenakshi Ganapathi Raji Hariharan Kesavan R Padma Ramani Balakrishnan  Raja Rangarajan

விடை 3228

இன்று(24/02/2018) காலை வெளியான வெடி: அரியணை காணக் கிடைக்காத கருணை  செங்கோலுடன் சேர்ந்தது (4) இதற்கான விடை: --> அரியணை  = அரிய + ணை (அரசர் பதவிக்கான அடையாளங்களைப் பட்டியலிட்டால் மகுடம். செங்கோல், வெண்கொற்றக் குடை என்பதோடு நிச்சயம் அரியணை சேர்க்கப்படவேண்டும்.)

உதிரி வெடி 3228

இன்றைய (24/02/2018) வெடி வாஞ்சிநாதன் ****************** காணக் கிடைக்காத கருணை முடிவில் செங்கோலுடன் சேர்ந்தது (4) Click here  for Saturday's English clue . . .

விடை 3227

இன்று காலை வெளியான வெடி: ஈஸ்வரனை மறைத்து அமர்ந்திருக்கும் காலாந்தகக் கண்டரின் அண்ணி இறுதியாக விலகினாள் (3) இதற்கான விடை: நந்தி = நந்தினி - னி: (கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில்)  நந்தினி: காலந்தகக் கண்டர் அல்லது சின்ன பழுவேட்டரையரின் அண்ணி  (பெரிய பழுவேட்டரையரின் மனைவி) இன்று விடையனுப்பியவர்கள் 56 பேர். எல்லோரது விடையும் சரியே!  6:01:56    லட்சுமி சங்கர் . 6:02:06    ரா. ரவிஷங்கர்   6:03:37    இரா.செகு   6:04:58    விஜயா ரவிஷங்கர்   6:05:00    எஸ்.பார்த்தசாரதி   6:05:13    சதீஷ்பாலமுருகன்   6:05:30    விஜயா ரவிஷங்கர்   6:06:22    ஶ்ரீவிநா   6:06:54    முத்துசுப்ரமண்யம்   6:10:21    வானதி   6:12:20    சுந்தர் வேதாந்தம்   6:13:39    கேசவன்   6:14:06    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்   6:15:20    சுபா ஸ்ரீநிவாசன்   6:15:24    நங்கநல்லூர் சித்தானந்தம்   6:17:48    மைத்ரேயி சிவகுமார்   6:20:45    புவனா சிவராமன்   6:21:20    ராமராவ்   6:23:05    ஆர். பத்மா   6:34:34    மு.க.இராகவன்   6:39:52    ரவி சுந்தரம்   6:40:12    ரவி சுப்ரமணியன்   6:42:46    மீ கண்ணன்   6:46

உதிரி வெடி 3227

இன்றைய (23/02/2018) வெடி வாஞ்சிநாதன் ******************* ஈஸ்வரனை மறைத்து அமர்ந்திருக்கும் காலாந்தகக் கண்டரின் அண்ணி இறுதியாக விலகினாள் (3) . . .

விடை 3226

இன்று காலை வெளியான வெடி: உயர்ந்த பயணத்துக்கான இருக்கை குறைத்ததால் சால்வனால் நிராகரிக்கப்பட்டவள்? (3) இதற்கான விடை:   அம்பா ; பீஷ்மர் விசித்ரவீரியனுக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்த மூன்று சகோதரிகளில் மூத்தவள்; மற்ற இருவரையும் மணக்க  சம்மதித்து சால்வனை அம்பா விரும்வதால் சால்வனிடமே போ என்று விசித்ரவீரியன் அனுப்பிவிடுகிறான். ஆனால் சால்வன் இன்னொருவன் சுயம்வரத்தில் வென்றவளை நான் ஏற்க முடியாது என்று மறுத்து விடுகிறான்.  அம்பா = அம்பாரி (யானை சவாரிக்கான இருக்கை) முழுதாக வரவில்லை.

உதிரி வெடி 3226

இன்றைய (22/02/2018) வெடி 3226 வாஞ்சிநாதன் ******************* உயர்ந்த பயணத்துக்கான இருக்கை குறைத்ததால் சால்வனால் நிராகரிக்கப்பட்டவள்? (3) . . .

விடை 3225

இன்று காலை வெளியான வெடி: கையை ஒரு மாட்டால்  யாழ்ப்பாணத்தில் இழுக்கும் வண்டி (4) இதற்கான விடை: கரத்தை = இலங்கைத் தமிழில் ஒற்றை மாட்டு வண்டி (க்ரியா தற்காலத் தமிழ் அகராதி)

உதிரி வெடி 3225

இன்றைய (21/02/2018) வெடி வாஞ்சிநாதன் ******************* கையை ஒரு மாட்டால்  யாழ்ப்பாணத்தில் இழுக்கும் வண்டி (4) . . .

விடை 3224

இன்று (20/02/2018) காலை வெளியான புதிர்: ஓரங்கிழிந்த போர்வை நீர் முகக்கும் (2) இதற்கான விடை: சால் = சால்வை - வை கிணற்றிலிருந்து தண்ணீஈர் இறைக்க வாளி.  விவசாயத்தில் வயலுக்கு நீர் இறைக்க (மோட்டார்கள் வராத காலத்தில்) ஏற்றத்தில் கட்டப்படும் பெரிய பாத்திரம்தான்  சால். விகடன் வலைத் தளத்திலிருந்து  ஒரு புகைப்படம்:

விடை 3223

இன்று (19/02/2018)காலை வெளிவந்த வெடி: ஆதரவற்றோர்க்கேற்ற‌ இடம் ஒரு சிற்றுண்டியை வைப்பதற்கான பாத்திரமோ? (6)   இதற்கான விடை:  அடைக்கலம். 

உதிரி வெடி 3223

இன்றைய (19/02/2018) வெடி வாஞ்சிநாதன் ****************** ஆதரவற்றோர்க்கேற்ற‌ இடம் ஒரு சிற்றுண்டியை வைப்பதற்கான பாத்திரமோ? (6) Loading...

விடை 3222 & Solution to Krypton 6

இன்று (17/02/2018) காலை வெளியான வெடி: இந்த வில்லாளனிடம் இருப்பது ஒருபக்கம் கையால் மறுபக்கம்  கோலால் அடிவாங்கும் (3) இதற்கான விடை: தவில்; "இந்த வில்லாளனிடம்" இவ்விடை ஒளிந்திருக்கிறது. விடையளித்தோர் பட்டியல் 10 மணி வாக்கில் வெளியிடப்படும். Krypton 6: Treating ill in a story wanting in moral strength  (8) Solution:  FALLIBLE = fable + ill. Solvers' names will be published  around 10 pm.

Krypton 6

Krypton 6 Vanchinathan 18/02/2018 ****************   Treating ill in a story wanting in moral strength  (8) இன்றைய உதிரி வெடி இங்கே Loading...

விடை 3221

இன்று (17/02/2018) காலை வெளியான வெடி:  கும்பேஸ்வரரிடம் குணம் இல்லை எதிர்த்திடும் சினம்தான் இருக்கிறது (3) இதற்கான விடை: கோபம் . கும்பேஸ்வரர் இருக்கும் தலம் (கும்பேஸ்வரர் 'இடம்') கும்பகோணம். அதில் குணம் இல்லாதபோது  (நீக்கப்படும்போது) "ம்பகோ", அதாவது எதிர்ப்புறமாய் வரும் சினம், கோபம். இதைக் கண்டவுடன் கேசவன் என்ற புதிர் ஆர்வலர் பட்டையை அழித்து நாமத்தைப் போட்டு    இதை எதிர்ப்புறமாய் மாற்றி வேறொரு  வெடியை எனக்குத் தனியாக அனுப்பியுள்ளார். அவருடைய ஆழ்வார்க்கடியான் வேலையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: சாரங்கபாணியிடம் எதிர்க்கும் சினம், அதை அரவணைக்கும் குணம் (6) Today's English clue: Violation  of the right to enter seaside (6) Solution: Breach = beach + r    This solution has been found by the following: Siddhan,  S. Pathasarathy R. Narayanan R. Ravishankar K. Balasubramanian Sankarasubramanian Dr P Chandramouli S.R. Balasubramanian S.P.Suresh Penathal Suresh  Vijaya Ravishankar Sathishbalamurugan Meenakshi Ganapathy Lakshmi Shankar Nagaraj

உதிரிவெடி 3222

பிப்ரவரி 18, 2018 உதிரிவெடி 3222 வாஞ்சிநாதன் *************************** இந்த வில்லாளனிடம் இருப்பது ஒருபக்கம் கையால் மறுபக்கம்  கோலால் அடிவாங்கும் (3)  Note: English clue is in a separate po st to make things easier for every one    Loading...

உதிரிவெடி 3221

உதிரிவெடி 3221 பிப்ரவரி வாஞ்சிநாதன் ************ கும்பேஸ்வரரிடம் குணம் இல்லை எதிர்த்திடும் சினம்தான் இருக்கிறது (3) Violation of the right to enter seaside (6)  (Corrected the error in letter count to 6 from 5 at 9.13 a m ) Loading...

விடை 3220

இன்று (16/02/2018) காலை வெளியான வெடி: வாலைப் பிடிப்பவர்கள் விட்டதை தூய வெண்ணிறப்பூ எனலாம் (3) இதற்கான விடை: தும்பை ஒரு காரியத்தை உரிய தருணத்தில் எளிதாகச் செய்யாமல் தாமதித்துச் சிக்கலான பிறகு செய்வதைக் குறித்த பழமொழி தும்பை விட்டு வாலைப் பிடிப்பது.  மாட்டைக் கட்டும் கயிறு தும்புக் கயிறு. மாட்டைப் பிடிக்க வேண்டும் என்றால் கழுத்திலுள்ள அக்கயிற்றைப் பிடிக்க வேண்டும். அதைத் தவறவிட்டு மாடு ஓடியபின் மாட்டைத் துரத்தி அதன் வாலைப் பிடிப்பது  பைத்தியக் காரத்தனம். தும்பை என்பது ஒரே இதழ் கொண்ட பளீரென்ற வெள்ளை நிறப்பூ. அதைப் பார்த்தால், சுஜாதா சொல்வது போல், அஜாக்கிரதையாக இருந்துவிட்டால் கவிதையெழுதிவிடுவோம். ஆமாம் மிகவும் அஜாக்கிரதையாகிவிட்டேன். எல்லாம் கனிச்சீராய். ஒரு வஞ்சிப்பா: நீரோடிடும் வாய்க்காற்கரை வேரோடிய பைஞ்செடிதனில் வெண்ணிதழினை விரித்தேந்திடும் மண்ணொளிர்ந்திடும் மாசற்றபூ

உதிரிவெடி 3220

உதிரிவெடி 3220 (16 பிப்ரவரி 2018) வாஞ்சிநாதன் **************     வாலைப் பிடிப்பவர்கள் விட்டதை தூய வெண்ணிறப்பூ எனலாம் (3) Loading...

விடை 3219

இன்று (15/02/2018) காலை வெளியான  வெடி: புலன், குறையில்லாதது, வலி அதிகரிக்காமல்  மிதக்கும் (4) இதற்கான விடை:   முழுகாது =  "முழுக்காது ",  குறைவில்லாத பொறியான காது. வலிமிகும் இடத்தில்  'க்' நீக்கப்பட்டுள்ளது.  (சோற்றில் பூசணிக்காயை மறைக்கும்போது 'ப்' சேர்த்து முழுப் பூசணிக்காயாக மறைப்பது போல்தான் . . . முழுக்கதையைக் கேட்டு . . .  முழுத்தொகையையும் முன்பே கட்டி ... இங்கெல்லாம் வலிமிகுவது  ஆனால் புதிருக்கு மிகாமல் வந்திருக்கிறது).)

விடை 3218

இன்று (14/02/2018) காலை வெளியான வெடி: அமராவதிக்கு அம்பிகாபதி தந்தையின் தலை வாங்கிய கூற்றுவன் (4) இதன் விடை:  காதலன் = காலன் (கூற்றுவன்) + த (தந்தையின் தலை ) அமராவதிக்கு அம்பிகாபதி  எந்த விதத்தில் தொடர்பு? காதலன்! Sunday's challenge was: Story involving blood after a gangster had left foot severed (8) Solution is  : Allegory = al + le(ft) + gory Al = Gangster; left foot severed = left -ft (ft is an abbreviation for foot/feet) gory as an adjective means "involving bloodshed" allegory = a story (which is symbolic) Solved by the following  13 persons. S. Parthasarathy R. Narayanan S. Kesavan Lakshmi Shankar K. Balasubramanian SriviNa Maithreyi  Sivakumar M Balu S P Suresh  Sundar Vedantham Ravi Sundaram Suba Srinivasan M K raghavan

உதிரிவெடி 3218

இன்றைய (14/02/2018) வெடி வாஞ்சிநாதன் ************************* Sunday's English puzzle has been solved by just 10 persons. The solution will be revealed tonight. So one can have a go at it again and submit answer by following the link below: https://udhirivedi.blogspot.in/2018/02/3215.html  இதோ புதிய (தமிழ் வெடி): அமராவதிக்கு அம்பிகாபதி தந்தையின் தலை வாங்கிய கூற்றுவன் (4) Loading...  

விடை 3217

இன்று (13/02/2018) வெளியான புதிர்: கம்பி எண்ணுபவள் பத்ரியுடன் இணைவதைத் தெரிவிக்கும் அழைப்பிதழ்? (5) இதற்கான விடை: பத்திரிகை = பத்ரி + கைதி (கம்பி எண்ணுபவள் ) பத்திரிக்கை என்று 'க்' சேர்த்து  ஆறெழுத்துச் சொல்லாக்கினால்தான் அழைப்பிதழ், இல்லையெனில் அது தினசரி/வார/மாத இதழ் என்று பொருள் படும் என்று கி.பாலசுப்ரமணியன் எனக்குத் தனியாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.  இப்படி ஒரு சூட்சுமம் இருப்பது எனக்குத் தெரியாது. ஒரே சொல்லை இரு விதமாக எழுதும் முறை என்றுதான் நினைத்திருந்தேன். இச்சமயத்தில் ஒன்றை நினைவு கூர விரும்புகிறேன். இதுபோல் கருத்து இருந்தால் மின்னஞ்சலுக்கு பதிலாக புதிர் வெளியான பக்கத்திலேயே கருத்துரையாக அளித்தால் எல்லோருக்கும் அது சேரும். அக்கருத்து வெளிவரவேண்டுமென்றால் நீங்கள் அதற்கு முன்பே ஜிமெயில் தளத்தில் நுழைந்திருக்க வேண்டும் (வேறொரு சாளரத்தில் நீங்கள் ஜிமெயிலில் நுழைந்து கொள்ளுங்கள்).

விடை 3216

இன்று (12/02/2018) காலை வெளியான வெடி வாயால் சொல்லு, மேல் ஸ்தாயி ரிஷபத்தையா ? (4) இதற்கான விடை: உச்சரி = உச்ச + ரி

விடை 3215

இன்று (11/02/2018) காலை வெளியான வெடி: அம்பா விழியோரம் ஒரு நகை (4) இதற்கான விடை: கணையாழி = கணையா + ழி; கணை = அம்பு;  ழி = விழி ஓரம்; கணையாழி = மோதிரம் Next clue in English will be published on Saturday, the 17th February. So far only 10 correct answers have been received for  the violent clue about a story involving bloodshed. So the deadline for submitting answers is  being extended up to  9 pm on P G Wodehouse's death anniversary.

உதிரிவெடி 3215

இன்றைய (11/02/2018) உதிரிவெடி வாஞ்சிநாதன் **************************** அம்பா விழியோரம் ஒரு நகை (4) Story involving bloodshed after gangster had left foot severed (8) . . .

விடை 3214

இன்றுகாலை (10/2/2018) வெளியான வெடி உட்கார்வதில் பாதிதான் போயிருக்கிறது, ஆனால் எல்லாம் தீர்ந்துவிட்டது (2) இதற்கான விடை : காலி  = (நாற்)காலி English clue: A composer  with modified role is single (8) Solution: Bachelor   = BACH (Johann Sebastian) + role jumbled (a new  clue in English will be published tomorrow, Sunday)

உதிரிவெடி 3214

இன்றைய (10/02/2018) வெடி வாஞ்சிநாதன் *************** உட்கார்வதில் பாதிதான் போயிருக்கிறது, ஆனால் எல்லாம் தீர்ந்துவிட்டது (2) A composer  with modified role is single (8) . . ..

விடை 3213

இன்று (09/02/2018) காலை வெளியான வெடி மடக்கிய ஆயுதத்தை மறைத்திட்ட நாம் சொல்வது எந்த சமயமும் ஏற்கமுடியாது (5)   இதற்கான விடை: நாத்திகம் = நாம் + த்திக‌ (மடக்கிய கத்தி) இப்புதிரைப் பற்றி கி.பாலசுப்ரமணி யன் தனியா க எனக்கு அனுப்பியிருந்த கருத்து : "இந்துமதத்தில் ஒரு பிரிவு சார்வாகம், இது நாத்திகம். பௌத்தம், நாத்திக மதமே." (நேற்றிலிருந்து 4 நாட்களுக்கு ராஜி ஹரிஹரன் விடையளித்தோர் பட்டியலை வெளியிட இசைந்துள்ளார். அவருக்கு நன்றி.)

உதிரிவெடி 3213

இன்றைய (09/02/2018) வெடி வாஞ்சிநாதன் ************************** மடக்கிய ஆயுதத்தை மறைத்திட்ட நாம் சொல்வது எந்த சமயமும் ஏற்கமுடியாது (5) . . .

விடை 3212

இன்று (08/02/2018) வெளியான வெடி: ரவா கரைய‌ வெள்ளம் புரண்டால் சுதந்திரமாக எண்ண‌ முடியாதது (3) இதன் விடை: கம்பி = பிரவாகம் (வெள்ளம்)  -  ரவா; புரண்டால் என்று கூறியிருப்பது எழுத்துகளைப் புரள வைக்க வேண்டுமென்பதற்காக. (சிறையில் இருப்பவன்) சு தந்திரமாகக் கம்பியை எண்ண முடியாதே !

உதிரிவெடி 3212

இன்றைய (07/02/2018) உதிரிவெடி வாஞ்சிநாதன் ****************************** ரவா கரைய‌ வெள்ளம் புரண்டால் சுதந்திரமாக எண்ண‌ முடியாதது (3) . . .

விடை 3211

இன்றுகாலை (07/2/2018) வெளியான வெடி  வடநாட்டுத் தாமரையில்  ஒரு துளி ஜலம் வழிந்துவிட‌ ஊறு (4) இதற்கான விடை: பங்கம் = பங்கஜம் ‍- ஜ (லம்)

உதிரிவெடி 3211

இன்றைய (07/02/2018) உதிரிவெடி வாஞ்சிநாதன் ****************************  வடநாட்டுத் தாமரையில்  ஒரு துளி ஜலம் வழிந்துவிட‌ ஊறு (4) . . .

விடை 3210

இன்றுகாலை (06/02/2018) வெளியான வெடி   யமன் தலையுடன் மடத்துக்குப் பின் வருவது காசு (4) இதற்கான விடை: நாணயம் = நாணம் + ய. (அச்சம், மடம் என்ற வரிசையில் மடத்துக்குப் பின் வருவது நாணம்)

விடை 3209

இன்று காலை வெளியான வெடி: நடராஜரிடம் ஒன்றுவிட்டொன்று சிலம்பு  பரதம் ஆட்டம் (6) இதன் விடை சிதம்பரம் = நடராஜர் (இருக்கும்) இடம்; சிலம்பு என்பதில் சி, ம் மற்றும் பரதம் சேர்ந்து "ஆடும்போது" சிதம்பரம் வரும். அதனால்தான் பழங்காலத்து தில்லை என்பதைவிட இன்றைய சிதம்பரம் பொருத்தமாக இருக்கிறது. தில்லை என்ற பழைய பெயர்  இப்போது செய்யுளில்தான் இருக்கிறது. அதை நாம் பெயர்ப்பலகைகளில்  பார்ப்பதில்லை, அப்பெயர் நம் காதுகளில்  கேட்பதில்லை, நம் வாய் சொல்வதில்லை.

உதிரிவெடி 3209

இன்றைய (05/02/2018) வெடி வாஞ்சிநாதன் ************************** நடராஜரிடம் ஒன்றுவிட்டொன்று சிலம்பு  பரதம் ஆட்டம் (6)  . . . .

விடை 3208

இன்றைய  வெடி: ஒரு மாதத்திற்குள் கொஞ்சம் இடம் மாறிச் செல்ல அனுமதி கேட்பது சென்னைக்காரரோ? (6) இதற்கான விடை: மாநகரவாசி =  மாசி + நகரவா (?) The other clue today: A German drink consumed right and left at home (8) Solution: Berliner   This one has been solved by 6:25:05  Kesavan,  6:25:22 S. Pathasarathy  8:45:02 S.P.Suresh 8:48:21 S .R. Balasubramanian 10:36:42 Srivi Na I'll try to post  English puzzles on Saturdays and Sundays.

உதிரிவெடி 3208 மற்றும் டாஸ்மாக் சென்ற பீட்டர்

இன்றைய  (04/02/2018) வெடி வாஞ்சிநாதன் ************************* ஒரு மாதத்திற்குள் கொஞ்சம் இடம் மாறிச் செல்ல அனுமதி கேட்பது சென்னைக்காரரோ? (6) நேற்று டாஸ்மாக் அருகே நின்று கொண்டிருந்தேன் (வேற ஒண்ணும் இல்லங்க, அங்க‌ ஒரு ஆயா நல்ல‌ காரமான வேர்க்கடலை விக்கிறாங்கன்னு கேள்விப்பட்டு வாங்கப் போனேன்). கொஞ்சம் பேர் வாங்கிட்டு அங்கேயே குடித்தார்க ள் . சில் பேர் பக்கத்திலே இருக்கும் பார் சென்று குடித்தார்கள். ஒரு ஆள் ஏழெட்டு பா ட் டில் வாங்கி வேகமாகக் கிளம்பினார்: வீட்டில் போய் எல்லாத்தையும் நானே குடிக்கப் போகிறேன். குடிச்சிட்டு இங்கேயே விழுந்து கெடக்காக் கூடாது பாருங்கன்னு எங்கிட்ட சொல்லிட்டுப் போனார். அவரைப் பாராட்டி  ஒரு வெடி  (பீட்டர் வெடிங்க)  A German drink consumed right and left at home (8)  . . . .

Krypton 2

Today's clue  2 A German drink consumed right and left at home (8) Yesterday's clue: Baby deliverer tale has a different endin g Solution: Stork = Story - y + k Solved by: Subha Srnivasan Maithreyi SriviNa S.Parthasarathy Raji Hariharan Senthil Sourirajan K Balasubramanian R Narayanan Anban Ambika

விடை 3207

இன்று காலை வெளியான வெடி கருவிலிருக்கும் குழந்தை சுமந்த வள்ளல் பரிந்துரை (4) இதற்கான விடை: --> சிபாரிசு = சிசு + பாரி ஆங்கிலப் புதிருக்கு அரைமணி கழித்து விடை, பட்டியல், அடுத்த புதிர் வரும். எட்டிப் பாருங்கள்.

உதிரிவெடி 3207

இன்றைய  (03/02/2018) வெடி வாஞ்சிநாதன் ***************************** கருவிலிருக்கும் குழந்தை சுமந்த வள்ளல் பரிந்துரை (4)  இதைப் பார்த்தீர்களா? நேற்று விடையைத் தவிர புதுசா ஒரு விஷயம் சேர்த்ததை . . . .

விடை 3206 மற்றும் புதிதாய் ஒரு பீட்டர்

இன்று (02/02/2018) காலையில் ஒரு குறள் வெடியை அளித்திருந்தேன்: கொட்டியபின் நீளம் குறைத்திடுவார் மேற்கொண்டு கட்டிடுவார் கொத்தனார் ஆங்கு (6) இதற்கான விடை: அடித்தளம் = அடித்த  + (நீ) ளம் அடித்தளம் இட்டபின் மேற்கொண்டுதான் (வீடு) கட்டுவார்கள். மேளத்தை அடிப்பதை மேளம் கொட்டுவது என்று கூறுகிறோம். (தெலுங்குக்காரர்கள் தொட்டதெற்கெல்லாம் கொட்டுகிறார்கள். தமிழில் கல்யாணம், காட்சிக்கு மட்டும் கொட்டுகிறோம்.) இரண்டு நாட்களாக வெடிகளில் நான் குழற,  குறள ஆரம்பித்துவிட்டேன் என்று நினைப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி. நாளை வழக்கமான பாணியில் புதிர் வரும். கொசுறு: நேற்று இந்து செய்தித்தாளில்  ஆங்கிலப் புதிரைப் படித்த போது மனதில் தோன்றிய ஒரு வெடியை அளிக்கிறேன்:  Baby deliverer  tale has a different ending (5) இதற்கான விடையை அனுப்பியே தீருவேன் என்பவர்கள் காலை குறள் வெடியின் படிவத்திற்கே மீண்டும் சென்று அனுப்புங்கள். நல்லாத்தானே இருந்தார் ஏன் இப்பிடி  பீட்டர் விடப் போய்ட்டார் என்று நினைக்கிறவர்கள் திட்டவேண்டிய நபர் நானில்லை, அதற்கு முழுப் பொறுப்பு ஆர்டன்:  Arden's clue in The Hindu Februa

உதிரிவெடி 3206

இன்றைய  (02/02/2018) வெடி   3206 வாஞ்சிநாதன் ******************** ********* இன்றைய வெடியும்  குறட்பாதான்:   கொட்டியபின் நீளம் குறைத்திடுவார் மேற்கொண்டு   கட்டிடுவார் கொத்தனார் ஆங்கு( 6) . . . .

விடை 3205

இன்று காலை வெளியான குறள் வடிவ வெடி காட்டினில் பற்றும் நெருப்பெனினும் கண்டிடலாம் மாட்டிற் குணவாம் பொருள் (4) இதற்கான விடை:  தீவனம் =  தீ + வனம்  

உதிரிவெடி 3205

இன்றைய  (01/02/2018) வெடி வாஞ்சிநாதன் இன்று குறள் வடிவப் புதிர் காட்டினில் பற்றும் நெருப்பெனினும் கண்டிடலாம் மாட்டிற் குணவாம் பொருள் (4) வலையில் பலவிதமான புதிர்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதைப் படியுங்கள் . . .