Skip to main content

திரிவெடி 35 விடைகள்

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

 சோழன், குங்குமம், இசை, சிவன், நெற்றிக்கண்

அதற்கான விடை:  குங்குமம்

மற்ற நான்கும் மூன்று மூன்றாய் அமைந்தவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று.
சோழன்: மூவேந்தர்களில்  ஒருவன்
இசை: முத்தமிழில் ஒன்று
சிவன்:  பிரம்மா, விஷ்ணுவோடு மூன்று தொழில்களுக்கான கடவுள்

நெற்றிக்கண்: (சிவனின்) மூன்று கண்களில் ஒன்று

சோழன் என்ற பெயரில் மட்டும் திரைப்பட‌ங்கள் இல்லை என்பதும் ஒரு விடையாக அளிக்கப்பட்டிருக்கிறது, அந்த கோணத்தில் நான் கவனிக்கவில்லை.

 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

GUNA said…
கவனியாத கோணமெனும் கூற்றினால்  என்ன
நவில நினைக்கின்றீர் நால்வர் ----நவின்ற
பதிலும் பொருந்தும் பதிலென ஏற்போம்
அதிலே தயக்கம் எதற்கு