Skip to main content

திரிவெடி 31 விடைகள்

 


 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

மாமரம், பலாமரம், வாழைமரம், தென்னை மரம், பனைமரம்

அதற்கான விடை:  வாழைமரம் மற்றவற்றுடன் சேராதது. மற்ற நான்கும்
ஆண்டுதோறும் பலனளிப்பவை. வாழை ஒரு முறைதான் குலைதள்ளும்.

இது நான் எண்ணிய விடை, ஆனாலும் இம்முறை திரிவெடிக்கு வேறு  விடைகள் வந்துள்ளன. ஆர் பத்மா, வாழையின் தண்டுப்பகுதியும் உணவாகும் மற்ற‌வற்றில் அப்படி கிடையாது என்கிறார்.  இது முழுதும் ஏற்றுக் கொள்ளத்தக்க விடை.

வி. ஆர். பாலகிருஷ்ணன் பலா மட்டும் தனித்துக் காய்க்கும் மற்றவை குலைகளாகக் காய்க்கும் என்கிறார். 

 
மற்ற மரங்களெல்லாம் உச்சியில் காய்க்க, பலா மட்டும் வேரருகிலும் காய்க்கும் என்று முத்துசும்ரம்ணியம் கூறும் காரணமும் பொருத்தமானதே.மாமரத்தில் காய்களைக் குலையாகக் காண்கிறோமா? சந்தேகமாக இருக்கிறது.


ஜோசப் அமிர்தராஜ், அருள் இருவரும் வாழையை மரம் என்ற கணக்கில் சேர்க்கமுடியாது, தாவரம்தான் என்கிறார்கள். அதன் மூலம் வாழை தடித்து உறுதியாக வளர்வதில்லை என்று புரிந்துகொள்கிறேன். பச்சையாகவே அது நின்றுவிடுகிறது, அதன் விளைவாக அது விறகாகப் பயன்படாது என்று
சொல்ல வருகிறார்களோ?

அம்பிகா பல விடைகளை அளித்துள்ளார். அதில் மாங்காய் மட்டும் புளிப்புச் சுவை கொண்டது மற்ற மரங்களின் காய்களில் புளிப்பு இல்லை என்பது, பனைமரத்தின் காய்கள் மட்டும் சமையலுக்குப் பயன்படுவதில்லை என்பது, தென்னை மரத்தின் காயிலிருந்து எண்ணெய் பெறப்படும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய விடைகள்.


பலவிதமான கோணங்களில் யோசித்து பல புதிய தகவல்களை தங்கள் விடைகள் மூலம் அளித்த  அனைவருக்கும் நன்றி.

 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

GUNA said…
This comment has been removed by the author.
GUNA said…
தென்னை மரமொன்று தானெண்ணெய் தந்திடும்
என்னும் கருத்தினை ஏற்கமாட்டேன் -நன்றாய்ப்
பனைமரமும் எண்ணெய், பரிந்தளிக்கும் என்றே
நினைவுகொள்ள வேண்டுகிறேன் நான்
2024 M11 4 09:49

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்