நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:
மாமரம், பலாமரம், வாழைமரம், தென்னை மரம், பனைமரம்
அதற்கான விடை: வாழைமரம் மற்றவற்றுடன் சேராதது. மற்ற நான்கும்
ஆண்டுதோறும் பலனளிப்பவை. வாழை ஒரு முறைதான் குலைதள்ளும்.
இது நான் எண்ணிய விடை, ஆனாலும் இம்முறை திரிவெடிக்கு வேறு விடைகள் வந்துள்ளன. ஆர் பத்மா, வாழையின் தண்டுப்பகுதியும் உணவாகும் மற்றவற்றில் அப்படி கிடையாது என்கிறார். இது முழுதும் ஏற்றுக் கொள்ளத்தக்க விடை.
வி. ஆர். பாலகிருஷ்ணன் பலா மட்டும் தனித்துக் காய்க்கும் மற்றவை குலைகளாகக் காய்க்கும் என்கிறார்.
மற்ற மரங்களெல்லாம் உச்சியில் காய்க்க, பலா மட்டும் வேரருகிலும் காய்க்கும் என்று முத்துசும்ரம்ணியம் கூறும் காரணமும் பொருத்தமானதே.மாமரத்தில் காய்களைக் குலையாகக் காண்கிறோமா? சந்தேகமாக இருக்கிறது.
ஜோசப் அமிர்தராஜ், அருள் இருவரும் வாழையை மரம் என்ற கணக்கில் சேர்க்கமுடியாது, தாவரம்தான் என்கிறார்கள். அதன் மூலம் வாழை தடித்து உறுதியாக வளர்வதில்லை என்று புரிந்துகொள்கிறேன். பச்சையாகவே அது நின்றுவிடுகிறது, அதன் விளைவாக அது விறகாகப் பயன்படாது என்று
சொல்ல வருகிறார்களோ?
அம்பிகா பல விடைகளை அளித்துள்ளார். அதில் மாங்காய் மட்டும் புளிப்புச் சுவை கொண்டது மற்ற மரங்களின் காய்களில் புளிப்பு இல்லை என்பது, பனைமரத்தின் காய்கள் மட்டும் சமையலுக்குப் பயன்படுவதில்லை என்பது, தென்னை மரத்தின் காயிலிருந்து எண்ணெய் பெறப்படும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய விடைகள்.
பலவிதமான கோணங்களில் யோசித்து பல புதிய தகவல்களை தங்கள் விடைகள் மூலம் அளித்த அனைவருக்கும் நன்றி.
Comments
என்னும் கருத்தினை ஏற்கமாட்டேன் -நன்றாய்ப்
பனைமரமும் எண்ணெய், பரிந்தளிக்கும் என்றே
நினைவுகொள்ள வேண்டுகிறேன் நான்
2024 M11 4 09:49