Skip to main content

Posts

விடை 4084

இன்று காலை வெளியான வெடி: பெருமையிழந்த மாடம் மறைந்திருக்க வேறுவிதமாய் ஆரம்பம் (5)  அதற்கான விடை: தொடக்கம் = தொக்க + டம் டம் = மாடம் ‍- மா (பெருமை) தொக்க = மறைந்திருக்க‌ பளிங்கு மாளிகை = பளிங் கால் கட்டிய மாளிகை: மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; " ..ஆல் கட்டிய .." என்பது மறைந்து, (தொக்கி) இருக்கிறது. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4084

உதிரிவெடி 4084  ஏப்ரல் 26 2020 வாஞ்சிநாதன் ***********************  பெருமையிழந்த மாடம் மறைந்திருக்க வேறுவிதமாய் ஆரம்பம் (5)   Loading…

விடை 4083

விடைக்கு வருமுன்:    உதிரிவெடியை வழக்கம்போல் தினசரி அளிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன்  இன்று  கருத்துரைப் பகுதியிலும், தனியாக என்னுடன் தொடர்பு கொண்டும்  கேட்டவர்கள் எல்லோருக்கும்  நன்றி.   சொற்கள் ஒவ்வொன்றிலும்  சுவையான பல விஷயங்கள்  ஒளிந்துள்ளன. அதை ரசிக்கும் ஆர்வலர்களான உங்களை இந்த வலைப்பக்கங்களின்  மூலம் தெரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.  உதிரிவெடி என்பது  சொல்லழகை நாம் எல்லோரும் பகிர்ந்து கொள்ள ஒரு  வழி.  அதைத் தவிர வேறு வழிகளில் சொற்களோடு விளையாட முடியுமா என்று    தோன்றியது.   காசா, பணமா?  அந்த விபரீத ஆசையைப் பரீட்சை செய்து பார்த்துவிடுவோமே!   ஆனால் அவையெல்லாம் பதினைந்து நிமிடத்தில் உதிரிவெடிபோல் தயாரிக்க முடியுமா, தெரியவில்லை.  அதனாலேயே வாரமொரு பதிவு என்று ஜாக்கிரதையாகக்  வைத்துக் கொள்வோம்.  வரும் ஞாயிறு காலை வழக்கம் போல் ஆறு மணிக்கு இங்கே எட்டிப்பாருங்கள். ***** சரி இன்றைய புதிருக்கு வருவோம்.   பாம்பு வேள்வியை நடத்தியவன் வெற்றி கண்டவ...

உதிரிவெடி 4083

உதிரிவெடி 4083  (ஏப்ரல் 22, 2020) வாஞ்சிநாதன் ********************** குறுக்கெழுத்துப்புதிர் என்று கட்டங்களுடன் செய்து வந்த பு திர் களை நிறுத்திய பிறகு 2017இல் உதிரிவெடி என்ற புதிய பெயருடன் தினம் ஒரு வெடி என்று ஆரம்பித்து இன்றைய தேதியில் மூன்றாண்டு முடிவடைகிறது. இனிமேல் இவ்வலைப்பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஒரு பதிவு என்று வாரத்திற்கு ஒரு முறை மட்டும் எழுதுவதாகத் திட்டமிட்டுள்ளேன். அடுத்து ஏப்ரல் 26 தேதியன்று இங்கே எட்டிப் பாருங்கள். இன்றைய புதிர் இதோ: பாம்பு வேள்வியை நடத்தியவன் வெற்றி கண்டவன் முன்னிருப்பது மக்களே (6) Loading…

விடை 4082

இன்று காலை வெளியான வெடி: ஏகப்பட்ட அறிவுடன் பெறும் பரிசு (4) அதற்கான விடை: வெகுமதி  = வெகு+ மதி  மீண்டும் விடை கண்டவர்கள் எண்ணிக்கை அறுபதைத் தாண்டியுள்ளது. இதோ வெகுமதி: அறிவுடை மாந்தர் புதிரினில்  ஆழ்ந்து செறிவுற்ற சிந்தனையால் கண்ட விடைகள் குறிதவறா வில்லாளன் கூர்கணையாய்ச் சாய்த்து த்     தெறித்திட வைத்திடும்  தேர்ந்து. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4082

உதிரிவெடி 4082  ஏப்ரல் 21 2020 வாஞ்சிநாதன் *********************** நேற்றைய புதிருக்கு நீண்ட நாட்கள் கழித்து அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் சரியான விடை கண்டுபிடித்து விட்டார்கள். பாராட்டுகள்!  பாராட்டு மட்டும்தானா, பரிசு கிடையாதா? இதோ: ஏகப்பட்ட அறிவுடன் பெறும் பரிசு (4) Loading…

விடை 4081

இன்று காலை வெளியான வெடி: களையிழந்த ஆணை ஒரு வினாடி தழுவிட  அனுமதிப்பதற்குப் பணம் (5)   அதற்கான விடை: கட்டணம் =  கணம் +ட்ட  ட்ட =  கட்டளை (ஆணை )  - களை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.