நேற்றைய திரிவெடியில் இடம் பெற்ற சொற்கள்: தேக்கு, நூக்கு, ஆச்சா, கருங்காலி, பூவரசு
இந்த ஐந்து மரங்களில் ஆச்சா மரம் தண்ணீரில் மூழ்கும், மற்றவை மிதக்கும். சம கொள்ளளவு கொண்ட தண்ணீரை விட இதன் எடை 15 சதவீதம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.
நாதஸ்வரம் செய்ய இந்த மரத்தையே பயன்படுத்துகிறார்கள் என்பதும் உபரிச் செய்தி. தச்சர்கள் மற்றபடி பல பொருட்களைச் செய்ய இதைப் பயன்படுத்துவதில்லை. தேக்கைவிட அதிக உறுதி கொண்ட இம்மரத்தில் வேலை செய்யும் போது உளியே உடைந்து விட வாய்ப்பிருக்கிறது என்பதால்.
கும்பகோணத்திற்கும் மாயவரத்திற்கும் நடுவே அமைந்த நரசிங்கம்பேட்டையில் பரம்பரையாகச் சில குடும்பத்தினர் செய்துவரும் நாதஸ்வரங்கள் பிரசித்தி பெற்றதாம் என்பதும்,
அடுத்த வாரம் வெறும் சொல்விளையாட்டாக திரிவெடி அமையும் என்பதும் இன்னிரு உபரிச் செய்திகள்.
Comments