Skip to main content

திரிவெடி 8 விடைகள்


நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்  

கட்டை, ட்டை, சட்டை, மொட்டை, ட்டை

 

வெள்ளித் தட்டை எடுத்து அதில் வெற்றிலைக் கட்டை வை.
காஞ்சிப் பட்டை உடுத்தி, மல்லிகை மொட்டைத் தொடுத்துக் கூந்தலில் சூடு.

------


ஆச்சா மரத்தில் இலைகளையெல்லாம் பறிக்க‌  மொட்டையானது. அதன் பட்டை,  வலிமையான கட்டை இரண்டும் பயனுள்ளவை.
அந்த மரத்தை வெட்டித் தட்டையாக்கும் போது உளி உடைந்தது. (ஆனாலும் அக்கலைஞர் அதை சட்டை செய்யவில்லை, நாதஸ்வரம்தான் செய்தார்!)

 **************************



நான் நினைத்த இந்த விடையை மீ. கண்ணன், ஆர்.பத்மா (முதல் விளக்கம்),   அம்பிகா(2வது விளக்கம்) கண்டுபிடித்துள்ளனர்.

இன்றும் வாசகர்கள் பல வித கோணங்களில் சிந்தித்து  வேறு விடைகளையும், அதே விடைக்கு வேறு விளக்கங்களும் அளித்துள்ளனர்.
நடு எழுத்தை நீக்கினால் பொருள்தராதது  மொட்டை மட்டுமே (மற்றவை: தடை, கடை, சடை, படை)
என்ற விளக்கத்தை கேசவன் அளித்துள்ளார். அது பொருத்தமானதுதான்.

தட்டை ஒன்றுதான் பலகாரம் என்பதும் (பாலு மீ) மொட்டையின் முதலெழுத்து மட்டும் சங்கீத ஸ்வரம் இல்லை என்பதும் (ராம்கி கிருஷ்ணன்) சுவாரசியமான விளக்கங்கள்.



இத்திரிவெடியின் விடையறிந்தால், உதிரிவெடியையும் வெடிக்க முடியும். அதனால் இரவு 9 மணி வரை திரிவெடிக்கு அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
(க்ரிப்டான் விடையும் அப்போது வெளிவரும்.)


Comments

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்