நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்
மொரார்ஜி தேசாய், சந்திரசேகர், நரசிம்ம ராவ், இந்தர் குமார் குஜ்ரால், வாஜ்பேயி
இன்று யார் சரியான விடையளித்தவர்கள் என்று முடிவு செய்வதில் பெரிய சிக்கலில் மாட்டியுள்ளேன். நான் ஒரு கருத்தை வைத்து அமைத்த புதிரைப் பல வித கோணங்களில் சிந்தித்து வாசகர்கள் வேறு விடைகளையும், அதே விடைக்கு வேறு விளக்கங்களும் அளித்துள்ளனர்.
அம்பிகா 3 விடைகளையும், அருள் 5 விடைகளையும் பொருத்தமான விளக்கங்களுடன் அளித்திருக்கின்றனர்!
இதில் முடிவு என்று சொல்வதற்கு பதிலாக நான் ரசித்த விடைகளை அதன் எதிர்பாராத கோணத்திற்காகக் குறிப்பிடுகிறேன்.
கொடுத்த பட்டியலில் தனித்து நிற்பவர் மொரார்ஜி தேசாய் என்று அம்பிகா குறிப்பிடக் காராணம்: அவர் மட்டும் 19ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்பதாம்!
அருள் தனது மூன்றாம் விடையில் இன்றைய பாகிஸ்தானில் பிறந்தவர் என்பதால் குஜ்ரால்தான் தனித்திருப்பவர் என்கிறார்.
ஆனாலும் இவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள் என்பதால் அரசியல் ரீதியில் உள்ள விடைதான் பொருத்தமாக இருக்கும் என்று கொள்ளலாம். அப்படிப்பார்க்கும் போது ராம்கி கிருஷ்ணன், அருளின் 5ஆம் விடை கூறுவது சந்திரசேகர்: முதல் முறை மந்திரியாகும்போதே பிரதமர் ஆனவர் என்பது மிகவும் ஏற்றுக் கொள்ள வேண்டிய விடை.
நான் எண்ணியதில் வாஜ்பேயிதான் (அவர் பிரம்மச்சாரி என்பதாலல்ல, வானதி மன்னிக்கவும்) தனித்து நிற்கிறார். அவர் ஒருவரே காங்கிரஸ் கட்சியில் எப்போதும் இருந்திராதவர். விடுதலைக்கு முன்பே ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் இருந்தவர்.
நரசிம்மராவ் ஒருவரே காங்கிரஸ்காரராக பிரதமராக பதவியேற்றவர், தென்னிந்தியர் என்பதெல்லாம் சரியான விடை என்றாலும் வலுவான விடைகளாகாது எனக்கருதுகிறேன். இந்த ஆட்டம் எனக்கும் சுவாரசியமாகிவிட்டது. பலரும் பலவிதங்களில் யோசிப்பதைத் தெரிந்து கொள்வதை நான் ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.
விடையைக் காண இங்கே சொடுக்கவும்.
Comments