நேற்றைய திரிவெடியில் இடம் பெற்ற சொற்கள்: திருக்கை, கயல், வாளை, வஞ்சிரம், கானாங்கெளுத்தி
இதில் திருக்கை, வாளை, வஞ்சிரம், கானாங்கெளுத்தி இந்த நான்கும் கடல்மீன்கள். கயல் அல்லது கெண்டை ஆறு குளங்களில் வாழ்பவை (நன்னீர் மீன்கள்). இலக்கியத்தில் (மருத) நாட்டு வளத்தைச் சிறப்பாகக் கூற வயல்களில் இருப்பதாகவும் கவிஞர்கள் சொல்வர். திருப்பாவையில் ஆண்டாள் "ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள..." என்கிறார்.இன்று விடையளித்தவர்களில் கயல் என்பது மட்டுமே கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும் என்ற காரணத்தை மீனாக்ஷி என்ற கயல்விழி குறிப்பிட்டுள்ளார்! அதையே மீ கண்ணன் கூறுகிறார் (மீன் கண்ணரோ?)
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments