Skip to main content

Posts

Solution to Krypton 251

Today's clue: State of being untrammelled from without weed headless (7) Its solution: FREEDOM = FROM + (w) EED You can visit this link to find a big tamil puzzle created by Afterdark who contributes regularly to Daily English puzzle in The HINDU. Here is the page with the list of solvers.

கி. பாலசுப்ரமணியன் சரவெடிக்கான விடைகள்

சென்ற ஞாயிறன்று கி.பாலசுப்ரமணியன் உருவாக்கிய சரவெடியை வெளியிட்டிருந்தேன். அதற்கான விடைகள் இதோ: 1. இது மத்தியிலும் இருக்கும், மாநிலத்திலும் இருக்கும் அரசு 3. சிறந்தவர்கள் பெறுவது சுரமிழந்தால் சாதுவாகும் பரிசு 5. மரியாதைக்குரிய கடவுள் மைந்தருடன் நடிகனாகிறார் சிவாஜி 7. உயிர் தப்ப சுவாசிக்க இடையே ஒரு பிராணியைப் பற்றி கேள்வி எழுகிறது பசுவா 10. காவிரி எப்படியும் இங்கிருந்துதான் கிளம்புவாள் குடகு 11. உலகம் தெரியாதவர்கள் வாழச் சிறந்த இடம் கிணறு 1. கண்ணீர் விட குட வாயில் லட்சணந்தான் அழகு 2. பசுவா? சிறுத்தையா உள் மூச்சு விடு சுவாசி 3. பெண் பார்க்க காரம் பஜ்ஜி 4. பாரதியின் அடியார்க்கடியார் சுரதா (சுப்புரத்தினதாசன்) 6. இரண்டாம் கடுகம்? காரமானது மிளகு 7. கலப்பட கும்பல் ஆற்றைக் கடக்கை வைத்திருப்பது படகு 8.கிசுகிசுவா? திரும்பினால் நாகம்! வாசுகி 9. நல்லது திருக்குறள் சொல்லும் கெடுதி மறப்பது நன்று இந்தவிடைகளைக் கண்டுபிடித்தவர்கள்: ராஜா ரங்கராஜன் மீனாக்ஷி கணபதி முத்து சுப்ரமண்யம் ஜோசப் அமிர்தராஜ் ரவி சுந்தரம் லக்ஷ்மி ஷங்கர் மீனாட்சி கேசவ...

மேலும் ஒரு சரவெடி பற்றி

இந்து ஆங்கில நாளேட்டில் சுமார் பதினைந்து புதிராளிகள் தினம் ஆங்கிலத்தில் மாறி மாறி புதிர்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் Afterdark என்ற பெயரில் புதிரை வெளியிடுபவர் தமிழில் முதன் முறையாக ஆக்கியிருக்கிறார். சினிமாவில் கடைசி ஆண் பாத்திரம் (4) என்று என்று அழகாகத் தொடங்கி சுமார் 32 குறிப்புகள் கொண்ட அப்புதிரில் இன்னமும் நான்கைந்துக்கு விடைகள் வராமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். நமக்குப் பரிச்சயமான ஹரி பாலகிருஷ்ணனின் செயலி மூலம் வடிவமைக்கப் பட்ட புதிர் என்பதால் இங்கு வருவோர்க்கு வசதியாக இருக்கும். அந்த சுவாரசியமான புதிரைக் காண இங்கே செல்லுங்கள் .

விடை 4113

இன்று காலை வெளியான வெடி: கௌரவர்களில் இரண்டாமவரை வெளியே விட்டு உள்ளே வர விடாதே (4) அதற்கான விடை: விரட்டு = ர + விட்டு ர = கௌரவர்களில் இரண்டாவதெழுத்து. இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4113

உதிரிவெடி 4113 (நவம்பர் 29, 2020) வாஞ்சிநாதன் ************************* கௌரவர்களில் இரண்டாமவரை வெளியே விட்டு உள்ளே வர விடாதே (4) Loading…