Skip to main content

Posts

செயலியுடன் சரவெடி மார்ச் 31 2020

சரவெடி மார்ச் 31, 2020 (செயலி வடிவம்) வாஞ்சிநாதன் ********************* ஹரி பாலகிருஷ்ணன் அவர்களின் செயலி மூலம்  இப்புதிர் இவ்வடிவத்தில் வருகிறது. அவருக்கு என் நன்றி. விளையாடி மகிழுங்கள்.  நீங்கள் தேர்ந்தெடுத்த கட்டத்திற்குரிய குறிப்பு மட்டும் இதில் காட்டப்படும். ஏதேனும் ஒரு வெடிக்கு விடை உடனே புலப்படவில்லையென்றால் வேறொரு கட்டத்தைத் தேர்வுசெய்யுங்கள். வேறு குறிப்பு முளைக்கும். தவறாக எழுதியதை அழிக்க backspace பயன்படும். திருத்தம்: செயலியில் 1. நெடு. தவறான குறிப்பை இணைத்துள்ளேன். சரியானது:   1 நெடு.புன்னகையைப் பொன்னகையாக்குவது (6)

சரவெடி 31 மார்ச் 2020

சரவெடி 31 மார்ச் 2020 வாஞ்சிநாதன் ******************  கட்டங்கள் வரும் முன்பே (4.50 மணி வரை) விடை கண்டுபிடித்தவர்கள்: எல்லா (24)  விடைகளையும் சரியாகக் கண்டுபிடித்த 4 பேர்: பா. நடராஜன் கேசவன்    ராம்கி கிருஷ்ணன் எஸ் பி சுரேஷ்   (விளக்கங்கள் அனுப்பவில்லை) இருபத்திமூன்று சரியான  விடைகளை அனுப்பிய 5 பேர்: கதிர்மதி சதீஷ்பாலமுருகன்  நாகராஜன் அப்பிச்சிக் கவுண்டர் ஆர் பத்மா டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வரன்   இருபத்திரண்டு சரியான விடைகள் கண்டுபிடித்த மூவர்: வானதி உஷா எஸ் ஆர் பாலசுப்ரமணியன்   இதில்  நடராஜன், ராம்கி கிருஷ்ணன், டாகடர் ரமகிருஷ்ண ஈஸ்வரன்  இம்மூவரும் விடைகளோடு புதிர்கட்டங்களையும்  சரியாக  கணித்து அனுப்பியிருந்தனர். ~~~~~~~~~~~~~~~ ********************** ~~~~~~~~~~~~~~~~~~ சரி இதோ மீண்டும்  இதே புதிர், சரவடிவில் (இன்னொரு இடுகையில் செயலியுடன் இருக்கிறது) குறுக்காக‌ 1. கணவன்-மனைவி  பந்தம் பதினைந்தில்  முகிழ்த்தது (4) 3. பெரிய தடை சிக்க தடும...

உதிரிவெடி 4038-4061

உதிரிவெடி 4038-4061 (மார்ச் 31, 2020) வாஞ்சிநாதன் ******************* இன்று மொத்தம் 24 வெடிகள் உள்ளன. இதில் 24 அல்லது 23 அல்லது 22ஐ உதிரியாவே வெடித்து, கட்டத்தை வெளியிடும் முன்னே சரியான விளக்கங்களுடன் விடையனுப்புவோர்க்கு முறையே 24 கேரட், 23 கேரட், 22 கேரட் தங்கப் பதக்கங்களை அளிக்க நான் ஆசைப்படுகிறேன். அதை  vanchinathan அட்  ஜிமெயில் டாட் காம் என்ற  முகவரிக்கு  இந்திய நேரப்படி 31 மார்ச் மாலை நாலரை மணிக்கு  முன்பு அனுப்பவும். மாலை 5 மணிக்கு வலைக்கட்டங்கள் வெளியிடப்படும். (இன்று விடையளிக்க கூகிள் படிவம் கிடையாது).  இருபத்திரண்டுக்கும் குறைவான விடைகளைக்  கண்டுபிடித்தோர் 5 மணிக்குப் பிறகு  வலைக்கட்டம் நிரப்பி மிச்சத்தையும் கண்டுபிடித்து, பழைய முறையில் அனுப்பவும். நெட்ப்ளிக்ஸ், அமேசான் என்று  10 நாட்களாகத் திரைப்படங்களையே பார்த்து வேறு மாறுதலான விஷயம் வேண்டும் என்று உங்கள் நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள். இதுதான் தக்க தருணம், அவர்களை இவ்வெடிப்பக்கம் வந்து ஒரு கை பார்க்கச் சொல்லுங்கள். அதிகமான வெடிகள் இருப்பதால் விடைகள்  புதன் இரவோ...

விடை 4037

இன்று காலை வெளியான வெடி: அழைப்பிதழ் நடுவிலிருப்பதைக் கத்தரிப்பது நல்லுறவைக் காட்டாது (2) அதற்கான விடை: பகை = ப த்திரி கை பத்திரிகை = அழைப்பிதழ் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4037

உதிரிவெடி 4037  (மார்ச் 30 , 2020) வாஞ்சிநாதன் ********************** அழைப்பிதழ் நடுவிலிருப்பதைக் கத்தரிப்பது நல்லுறவைக் காட்டாது (2) Loading…

விடை 4036

இன்று காலை வெளியான வெடி: நேர்மையிலிருந்து விலகி வாய்மை இடையே துறந்த கலவை  (3) அதற்கான விடை:  சாந்து = சாய்ந்து - ய் சாய்ந்து = "நேர்"மையிலிருந்து விலகி ய் = வாய்மை இடை கட்டிடத்தொழிலாளர்கள் சுவர் எழுப்பும்போது  செங்கல் அடுக்கிப் பூசுவதற்கான சாந்தை இவ்வாறு கலவை என்றும் சொல்வதுண்டு . இரண்டு நாட்களாகப் பேருந்துகள், ரயில் வண்டிகள் இயக்கப் படாததால்  கூலித் தொழிலாளர்கள், அவர்களில் பெரும்பாலானோர் கட்டிட வேலைத் தொழிலாளர்கள், 300,  400கி.மி.  நடந்தே செல்வதைத் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். சுண்ணாம்பு  சாந்து  கலவை சுவரெழுப்பி அண்ணாந்து பார்க்கும் அதிசய கட்டிடம் மண்ணில் பலர்வியக்கக் கட்டும் மாந்தரெலாம் இந்நாளில் வாடுவதும் ஏன்? இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 221

Today's clue: Cynically humorous,   revolting,  draconian, single-headedly replaced   article (8)   Its solution: SARDONIC = DRACONIAN - AN + S AN = article S = Single head This is not a word that  readily springs to my mind. I was reading a novel thanks to this lock down and decided to grab it up when the kidnapper protagonist  kept smiling sardonically at his hostage.