Skip to main content

திரிவெடி 45 விடை

 

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

வெயில், பனி, கயிறு, பத்திரிகை 

நேற்றைய திரிவெடி இதுவரை நான் கையாண்டிராத புதிய உத்தியைக் கொண்டிருந்தது (நியூ யார்க் டைம்ஸ்  புதிராளி வைனா லியூ கையாளும் உத்திதான்). கொடுக்கப்பட்ட  எல்லா சொற்களின் முன்னே ஒரு குறிப்பிட்ட சொல்லை இடுவதுதான். இப்போது மஞ்சளை ஒட்ட‌
மஞ்சள் வெயில் (உமா ரமணன் நண்டு படத்திற்குப் பாடிய பாட்டின் தொடக்கம்), மஞ்சள் கயிறு (தாலி), மஞ்சள் பத்திரிகை (எம்கே தியாகராஜ பாகவதர் ஒரு கொலையாளியை ஏவிவிடக் காரணமான லக்ஷ்மிகாந்தன் நடத்திய பத்திரிகை வகை)  என்று பொதுவாகப் புழக்கதிலிருக்கும் மொழியின் பாணியைக் காணலாம்.

ஆனால் மஞ்சள் பனி என்றும் ஏதும்  புழக்கத்தில கிடையாது.

மிகவும் குறைவானவர்களே இப்புதிரை முயன்றிருக்க சரியான விடையளித்த ஜோஸப் அமிர்தராஜ், அம்பிகா இருவருக்கும் பாராட்டுகள். விடையளித்தோர்  பட்டியலை இங்கே காணலாம். 

Comments

GUNA said…
மஞ்சள் பனி என்ற சொற்றொடர் உபயோகத்தில்
இல்லை என்ற கருத்து வியப்பளிக்கிறது.

கீழே உள்ள தகவல் வலைதளம் கொடுக்கும்
தகவல்
இணைப்பு முகவரியும் கொடுத்துள்ளேன்.

----மஞ்சள் பனி என்பது பல குளிர்கால நகைச்சுவைகளின்
தலைப்பு. பனி அதன் தூய வடிவில் வெண்மையாக
இருப்பதால், மஞ்சள் பனியானது விலங்குகளின்
சிறுநீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களைக் கொண்டதாகக்
கூறப்படுகிறது.
"மஞ்சள் பனியை உண்ணாதே" என்ற கிளாசிக்
ஃபிராங்க் ஜப்பா பாடலின் உட்பொருள் அதுதான்.


15 ஜன., 2020https://www.thoughtco.com/yellow-snow-dangers-3444589.

GUNA said…
மஞ்சள் பனி பற்றி இன்னொரு வலைதளம் கொடுக்கும் தகவல்

மஞ்சள் பனி என்பது, பனி வெண்மையாக இருப்பதிலிருந்து மாறி மஞ்சள் நிறமாக மாறும் பனியைக் குறிக்கும்.

பனி மஞ்சள் நிறமாக மாற பல காரணங்கள் இருக்கலாம்.
மஞ்சள் பனிக்கு காரணங்கள்: விலங்குகளின் சிறுநீர், மகரந்தம், காற்று மாசுபாடு, இலைகள் கசிந்து கூரையில் சேர்ந்திருப்பது,


மஞ்சள் பனி பற்றி பேசும் பல குளிர்கால நகைச்சுவைகள் உள்ளன.
மஞ்சள் பனியை சாப்பிடக்கூடாது.
பனிப்பொழிவு இருக்கும்போது, காற்றில் இருந்து சிறிய அளவு இரசாயன அசுத்தங்கள் பனியில் சேர்ந்துவிடும்.

மலை மற்றும் வனப்பகுதிகளில் வசந்த காலத்தில் பனி சிவப்பு, பச்சை, ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறமாக இருக்கலாம்.
Vanchinathan said…
@GUNA: "மஞ்சள் பனி என்ற சொற்றொடர் உபயோகத்தில்
இல்லை என்ற கருத்து வியப்பளிக்கிறது. " படிப்பவர்களை வியப்படையச் செய்திருக்கிறேன் என்றால் ஏதோ ஒன்றை நான் சரியாகச் செய்திருக்கிறேன்.
GUNA said…
கொடுத்த தகவல்கள்  கூறுவதை ஏற்றுக்
 கிடைத்த விடைகளைக் கூர்ந்து -படித்து
விடையில் திரியினை வைத்த   இருவர்
விடைகளை ஏற்போம்  வியந்து
GUNA said…
வருத்தம்  எனுமொரு வார்த்தையே சாலப்
 பொருத்தமாகும்   என்றே  புரிந்தும்  -கருத்தினில்
 மென்மையைக் காட்டவே வார்த்தை வியப்பினை
அன்புடன் வைத்தேன் அறிந்து
GUNA said…
சரியான ஒன்றைச் சரியாகச் செய்தல்
சரியான தென்பார்நம் சான்றோர்-சரியாகத்
தப்பினைச் செய்தல் தகுமோ? தகுமென்றே
இப்புவியில் ஏற்போர் எவர்?

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்