Skip to main content

திரிவெடி 18 விடை

 

நேற்று கொடுக்கப்பட்ட ஐந்து சொற்கள்:

சித்திரை, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி 

  என்னுடைய கணிப்பில் சேராதது, ஐப்பசி. மற்ற நான்கு மாதங்களிலும் பௌர்ணமி விசேஷமானது. சில ஊர்களில் பெருந்திரளாக பக்த லட்சங்கள் திரள்வார்கள்.

சித்திரைப் பௌர்ணமியில் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் திருநாள்.

கார்த்திகைப் பௌர்ணமியில்  திருவண்ணாமலையில் தீபம்.

தை மாதம் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி;  தைப்பூசம் என்று முருகன் கோவில் பால்குடம் அலகு குத்துவது என்று விசேஷம். பழனி, சிங்கப்பூர், மலேஷியா என்று பல இடங்களில்.   (நான்கைந்து ஆண்டுகளுக்கும் முன்பு அது தமிழக அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது).

மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் பௌர்ணமி, கும்பகோணத்தில் கொண்டாட்டம். (பன்னிரண்டாண்டுக்கு ஒரு முறை அது மகாமகம்).

ஐப்பசியில் அமாவாசைதான் (வட இந்தியாவில்) தீபாவளி; பௌர்ணமி எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அப்படி ஏதும் விசேஷம் என்று இருந்தால் அறிந்தவர்கள் கூறவும்.
(பக்திப் பத்திரிகைகள், ஜோதிடப் பத்திரிகைகளைப் படித்தால் எல்லா நாளும் விசேஷம் என்று தோன்றும். அதைத் தள்ளிவிடுவோம்).

வேறு விடைகளும் சில வித்தியாசமான பார்வையில்  வந்திருக்கின்றன.  பார்த்து ரசியுங்கள்.

 
விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

Comments

Anonymous said…
ஐப்பசி போர்ணமி அன்றுதான் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. உண்மையில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முக்கிய விழா அந்தமாத பௌர்ணமி அன்றே வரும். வைகாசி விசாகம்; ஆவணி அவிட்டம்; ஆருதரா தரிசனம்; பங்பகுனி உத்திரம் இவ்வாறு
Anonymous said…
This comment has been removed by a blog administrator.
Vanchinathan said…
நன்றி நடராஜன்.
எல்லா கோவில்களிலும் ஒரு பலகையில் எழுதிவிடுவார்கள்: வரப்போகும் விசேஷங்கள் என்னவென்று. ஒவ்வொரு மாதத்துக்கும் ஐந்தாறு நாட்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். என்னுடைய தினசரி காலண்டரில் (எப்போதும் சிரிக்கும் முருகன், ராணி முத்து, ஐம்பது ரூபாய்) தேதியைக் கிழித்தால் எல்லா நாட்களுக்கும் இந்த ஊரில், இன்று, இந்த சாமி தரிசனம் என்று ஏதாவது இருக்கும்.
,
அதைக் கணிசமான பக்தர்கள் கொண்டாடுகிறார்களா அதற்காக ஒன்று கூடுகிறார்களா என்று கேட்டால் ஐப்பசிப் பௌர்ணமியைக் கணக்கில் கொள்ள முடியாது.

---வாஞ்சிநாதன்

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்