நேற்று கொடுக்கப்பட்ட ஐந்து சொற்களும் "வை" என்ற எழுத்தில் முடியும் பெயர்ச்சொற்கள்.
கோவை, சால்வை, பார்வை, போர்வை , பாவை
என்னுடைய கணிப்பில் தனித்து நிற்பது "பார்வை".
அந்த இறுதி எழுத்தை நீக்க, ஐந்து சொற்களும் மீண்டும் பொருள் தரும்,
கோ = அரசன், தெய்வம்
சால் = ஏற்றத்தில் கட்டப்படும் நீரை அள்ளும் கலன்
பார் = கண்ணால் நோக்கு
போர் = யுத்தம்
பா = செய்யுள்
கவனித்துப் பார்த்தால் பார்வை என்பது மட்டும் பார் என்னும் சொல்லிலிருந்து பிறந்தது என்பது தெரிகிறது. மற்றவற்றில் "வை" நீக்கப் பெறப்படும் சொல்லும், கொடுத்த சொல்லும் தொடர்பில்லாதவை.
அருள், பார்த்தசாரதி இருவரும் இதற்கு நெருக்கமான விளக்கத்தை அளித்திருக்கிறார்கள்.
மீண்டும் அடுத்த சனிக்கிழமை திரிவெடியைக் காண்போம்.
விடையளித்தோர் விவரத்தைக் காண இங்கே சொடுக்கவும்.
Comments