Skip to main content

திரிவெடி 14 விடை

நேற்று கொடுக்கப்பட்ட ஐந்தும் சுஜாதவின் நாவல்களின் தலைப்புகள்.

கொலையுதிர் காலம்,  மேகத்தைத் துரத்தியவன், நைலான் கயிறு,  கனவுத் தொழிற்சாலை, நில்லுங்கள் ராஜாவே



அதில் தனித்து நிற்பது, கனவுத் தொழிற்சாலை. அது திரைப்படத் துறையினரின் வாழ்க்கையைப் பற்றிய கதை. மற்ற நான்கும் வழக்கறிஞர் கணேஷ், கொலை மர்மத்தைக் கண்டுபிடிக்கும்  கதைகள். வசந்தும் இடம்பெறும் கதை என்று நேற்றே விடையை எழுதி வைத்திருந்தேன். ஆனால் அருள், அகிலா ஸ்ரீதரன் விடைகளில் முதல் கதையான நைலான் கயிற்றில் கணேஷ் மட்டும்தான் வருவார் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்பதால் கணேஷ் பெயரை மட்டும் இப்போது சொல்கிறேன்.

மீண்டும் அடுத்த சனிக்கிழமை திரிவெடியைக் காண்போம்.
 
விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

Comments

GUNA said…
Wikipedia information in support of my answer


Wikipedia

Ganesh–Vasanth are a duo appearing in Tamil-language crime thriller novels written by Sujatha.[1] Ganesh, introduced in the 1968 novel Nylon Kayiru, is a level-headed senior advocate who is mainly accompanied by his flirtatious young junior assistant lawyer Vasanth, introduced in the 1973 sequel Priya.[2]
Vanchinathan said…
Thanks Guna, for the wikipedia link and the info.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.